search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஸ்பத்திரியில் ஆபரேஷனுக்காக பெண்ணின் ஆடைகளை மாற்றிய போது நகை மாயமானதாக புகார்- போலீசார் விசாரணை
    X

    ஆஸ்பத்திரியில் ஆபரேஷனுக்காக பெண்ணின் ஆடைகளை மாற்றிய போது நகை மாயமானதாக புகார்- போலீசார் விசாரணை

    • இசிஜி எடுப்பதற்காக தனி அறையில் வைத்து உடைகளை மாற்றியுள்ளனர்.
    • மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை, ஈ.வி.கே. சம்பத் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ்(55) இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெபராணிக்கு நேற்று முன்தினம் உடல் நலகுறைவு ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெபராணியின் சிறுநீர் குழாய் சுருங்கிவிட்டது. உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரது உயிருக்கே ஆபத்தாகி விடும். அறுவை சிகிச்சைக்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை உடனடியாக கட்டும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது.

    பின்னர் ஜெபராணிக்கு இசிஜி எடுப்பதற்காக தனி அறையில் வைத்து உடைகளை மாற்றியுள்ளனர். அவருக்கு சிறுநீரக குழாய் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது அதற்கான பணத்தை கட்டும்படி மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என்றும், நகையை வைத்துதான் பணம் கட்ட முடியும் என்று ஜெபராணியின் மகள்கள் கூறியுள்ளனர். அப்போது ஜெபராணியிடம் அவரது மகள்கள் நகையை கேட்டுள்ளனர். அதற்கு அவர் உடையை மாற்றும் போது மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் நகையை கழட்டினர். பின்னர் நான் மயக்கம் அடைந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதில் அதிர்ச்சடைந்த அவரது மகள்கள் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகளிடம் சென்று முறையிட்டுள்ளனர். இதில் மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்ததால் இதுகுறித்து அவரது மகள்கள் கூடுவாஞ்சேரி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×