search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போட்டோ எடுத்த 1 மணி நேரத்தில் டிரைவிங் லைசென்சு கிடைக்கும்

    சென்னையில் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து போக்குவரத்து அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை கமி‌ஷனர் சமயமூர்த்தி கூறியதாவது:-

    வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக போட்டோ எடுத்த ஒரு மணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகமும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இனி டிரைவிங் லைசென்ஸ் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பத்துடன் இனி தடையில்லா சான்றே இணைக்க வேண்டிய அவசியமில்லை.


    ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் அனைத்து விண்ணப்பங்களிலும் செல்போன் எண், ஆதார் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு விரைவாக தகவல் அனுப்பவும், சிறந்த முறையில் சேவை அளிக்கவும் முடியும்.

    இவ்வாறுஅவர் கூறினார்.
    Next Story
    ×