என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே போலி மது குடித்த தொழிலாளி மரணம்?
  X

  ஆண்டிப்பட்டி அருகே போலி மது குடித்த தொழிலாளி மரணம்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே போலி மது குடித்து தொழிலாளி இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பபட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 3-ந் தேதி ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகே மது போதையில் கிடந்தார். அவரது மனைவி இசக்கியம்மாள் ராமரை க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

  3 நாட்கள் சிகிச்சையில் இருந்த ராமர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி மது குடித்து 2 பேர் பலியாகினர். ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பகல் நேரங்களிலும், இரவு 10 மணிக்கு பிறகும் பெட்டிக்கடைகளில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இருந்தபோதும் அது கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்நிலையில் ராமர் போதையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதால் அவர் போலி மது குடித்து இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×