search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    போடி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    போடி அருகே ஓடை மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கொட்டக்குடி ஆறு மூலம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது மழை இல்லாததால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது.

    இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் இரவு பகல் பாராது மணல் கடத்தி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து சென்று மணல் கடத்தும் கும்பலை பிடித்து அபராதம் விதித்த போது மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. 

    போடி தாலுகா போலீசார் சிலமலை அருகே சூலப்புரம் ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மணல் கடத்திக கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் சிலமலையைச் சேர்ந்த ஈஸ்வரன் என தெரியவந்தது. மேலும் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×