search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 2 அடி சரிவு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. கடந்த 2 நாளில் 2 அடி சரிந்துள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    கடந்த 27-ந்தேதி 3 ஆயிரத்து 926 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,012 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 2,989 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 17 ஆயிரம் கன அடி தண்ணீரும், 850 கன அடி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்படுவதால் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    கடந்த 27-ந் தேதி காலை 102.88 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 101.9 அடியாக சரிந்தது. இன்று மேலும் சரிந்து 100.91 அடியாக இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    Next Story
    ×