search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாநகர் பகுதியில் நகை-செல்போன் பறித்த 3 பேர் கைது
    X

    அண்ணாநகர் பகுதியில் நகை-செல்போன் பறித்த 3 பேர் கைது

    அண்ணாநகர் பகுதியில் நகை-செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    அம்பத்தூர்:

    கடந்த சில வாரங்களாக அண்ணாநகர், அமைந்த கரை, ராஜமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைப்பெற்று வந்தன.

    குற்றவாளிகளை பிடிக்க அண்ணாநகர் உதவி ஆணையர் குணசேகரன் தலைமையில் அண்ணாநகர் காவல் ஆய்வாளர்கள் சரவணன், செந்தில்குமார்,மதுரவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.விசாரணையில் தொடர் வழிபறியில் ஈடுப்பட்டு வந்தவர்கள் ஒரே கும்பலை சார்ந்தவர்கள் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.

    அவர்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளை ராஜமங்கலத்தில் திருடி உள்ளனர். அதனை வைத்தே அவர்கள் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டனர் என்பது தெரியவந்தது.

    மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். தீவிர விசாரணையில் வழிப்பறியில் ஈடபட்ட வடபழனியை சேர்ந்த சந்தோஷ் குமார் (20), மாங்காடு பகுதியை சேர்ந்த எட்வீன் (19), வடபழனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 12 1/2 சவரன் தங்க நகைகள், 10 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடைபெறுகிறது. #arrest

    Next Story
    ×