search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் 40 பவுன் தங்க கட்டி அபேஸ் - கொள்ளையன் கைது
    X

    மதுக்கடையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் 40 பவுன் தங்க கட்டி அபேஸ் - கொள்ளையன் கைது

    வால்டாக்ஸ் சாலை மதுக்கடையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் 40 பவுன் தங்க கட்டியை கொள்ளைடியத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #arrest

    ராயபுரம்:

    சென்னை சவுகார்பேட்டை நன்னியன் தெருவை சேர்ந்தவர் கமல் (வயது 36). நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை 4 மணியளவில் 300 கிராம் தங்க கட்டியை ஒரு பையில் வைத்தபடி தனது நண்பர் ஹேமந் என்பவருடன் கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கமல் அருகில் வந்து பேசிக் கொண்டிருந்தார். கமல் மது குடித்து முடித்து வீட்டுக்கு சென்று பையை பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் தங்க கட்டியை காணவில்லை.

    இது குறித்து கமல் ஏழுகிணறு போலீசில் புகார் செய்தார். கொள்ளையனை பிடிக்க பூக்கடை உதவி கமி‌ஷனர் லட்சுமணன், ஏழுகிணறு இன்ஸ்பெக்டர் தவமணி, உதவி கமி‌ஷனர் சீனிவாசன், ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கமலுடன் அந்த மர்ம நபர் எடுத்த செல்பி படம் இருந்தது. அதை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வாகன சோதனையின்போது வால்டாக்ஸ் சாலை வழியாக வந்த அந்த மர்ம நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் இடுப்பில் தங்க கட்டியை மறைத்து வைத்திருந்தான். கொள்ளை நடந்த 2 மணி நேரத்தில் அவன் போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில் அவனது பெயர் கர்ணன் என்பதும், கொண்டித்தோப்பு சுந்தர முதலி தெருவை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 40 பவுன் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. #arrest

    Next Story
    ×