search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது - ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.41
    X

    பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது - ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.41

    பெட்ரோல் டீசல் விலை இன்று மேலும் உயர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டதால் விற்பனை விலை சற்று குறைந்தது.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி 3 காசுகள், 5 காசுகள் என தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 காசுகள் உயர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் 81 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 82 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோன்று நேற்று முன்தினம் 74 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் நேற்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை ஆனது.



    பெட்ரோல் போடுவதற்காக நேற்று காலை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த வாகன ஓட்டிகள் வரலாறு காணாத இந்த விலை உயர்வை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 75.39 ஆக விற்பனை ஆகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.31-க்கும், டீசல் ரூ.71.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. #PetrolPrice

    Next Story
    ×