search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயக்குமாருக்கு எதிராக மதுசூதனன் போர்க்கொடி- எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்
    X

    ஜெயக்குமாருக்கு எதிராக மதுசூதனன் போர்க்கொடி- எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்

    கூட்டுறவு மீனவர் சங்க தேர்தலில் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட மோதல் குறித்து மதுசூதனன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். #ADMK #Madhusudanan #jayakumar
    சென்னை:

    அ.தி.மு.க. அவைதலைவர் மதுசூதனனுக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கும் மோதல் இருந்தது. கோஷ்டி பூசல் ஏற்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடங்கி தற்போது நடைபெறும் கூட்டுறவு மீனவர் சங்க தேர்தல் வரை இருவருக்கும் வருகிறது.

    மதுசூதனன் அ.தி.மு.க. வின் மூத்த உறுப்பினர் மட்டுமின்றி கட்சியின் அவை தலைவராகவும் இருப்பதால் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் மீறல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆவேசம் அடைந்துள்ளார்.

    தொடந்து தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டு வரும் அவமரியாதையை தாங்கி கொள்ள முடியாத மதுசூதனன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினார்.

    கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது ஆர்.கே.நகர் தொகுதி மற்றும் வட சென்னை வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் அரசியல் தலையீடு குறித்து எடுத்துக்கூறியுள்ளார்.

    அவைத்தலைவர் என்ற மரியாதை தரப்படவில்லை. ஜெயக்குமார் அவரது மாவட்டத்தை விட்டு என்னுடைய மாவட்டத்துக்குள் தேவையில்லாமல் நுழைந்து அரசியல் நடத்துகிறார்.

    வடசென்னை தெற்கு மாவட்டத்தில் தான் அவர் தனது செல்வாக்கை காட்டிக் கொள்ள வேண்டும். என் மாவட்டத்தில் வந்து குழப்பங்களை ஏற்படுத்துவதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகிறது. அவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மதுசூதனன் முதல்- அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

    அவர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நான் வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மதுசூதனன் தெரிவித்ததாக அவரது ஆதரவாளர் ஒருவர் கூறினார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி-மதுசூதனன் சந்திப்பு குறித்து வட சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெங்கடேஷ் பாபு எம்.பி.யை பொறுப்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் நியமித்து மதுசூதனனை தோல்வி அடையச் செய்தார். அந்த தேர்தலில் மறைமுகமாக மதுசூதனனை தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார்.

    அதன்பின்னர் வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்குவதில் மதுசூதனன்-ஜெயக்குமார் இடையே பிரச்சினை ஏற்பட்டது. துணை-முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் மதுசூதனன் ஆதரவு மாவட்ட செயலாளர் ரஜேஷ் மூலம் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டது.

    அதேபோல அமைச்சர் ஜெயக்குமாரும் தனது ஆதரவளர்கள் பட்டியலை கொடுத்துள்ளார். இரண்டு பேர் கொடுத்த பட்டியலையும் ஓ.பி.எஸ். தேர்வு செய்யாமல் அங்கு குடியிருந்த மக்கள் மற்றும் நேரடியாக மனு கொடுத்தவர்களுக்கு அவர் வீடுகளை ஒதுக்கினார்.

    மாவட்ட செயலாளர் கொடுத்த பட்டியலை ஓ.பி.எஸ் புறக்கணித்தது மதுசூதனனுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக வி.வி. காலனியில் நடந்த கோவில் திருவிழாவில் பெயர் போடுவதில் மதுசூதனன்- ஜெயக்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.



    அந்த விழாவில் பங்கேற்க வந்த ஓ.பி.எஸ், ஜெயக்குமாரின் பேச்சைக் கேட்டு பங்கேற்காமல் பாதி வழியில் திரும்பி சென்றார்.

    ஆர்.கே.நகரில் நடந்த மற்றொரு கோவில் விழாவில் ஓ.பி.எஸ் -ஐ பங்கேற்க மதுசுதனன் அழைத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவரை பங்கேற்கவிடாமல் மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது. இதுவும் மதுசூதனனுக்கு ஓ.பி.எஸ் மீது வருத்தத்தை அதிகரித்தது.

    தற்போது மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 29 சங்கங்களுக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

    ஆனால் அதிலும் ஜெயக்குமார் உள்ளே நுழைந்து பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். உட்கட்சிக்குள் மோதிக்கொள்வதை பார்த்து தினகரன் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்தனர். மீனவர் சங்க தேர்தலில் கைகலப்பு ஏற்பட்டது அங்கு மதுசூதனன் சென்றபோது அவரை போலீசார் தடுத்தனர். அமைச்சர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

    ஆளும் கட்சியினரை போலீசார் அடக்குமுறை செய்வதை மதுசூதனன் ஏற்கவில்லை. மதுசூதனனின் எந்த கோரிக்கையையும் ஓ.பி.எஸ் கண்டுகொள்ளாததால் அவர் இப்போது முதல்வரை நாடியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Madhusudanan #jayakumar
    Next Story
    ×