என் மலர்

  செய்திகள்

  பாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
  X

  பாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாவூர்சத்திரம் அருகே, கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  பாவூர்சத்திரம்:

  தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்தவர் சங்கர்ராஜ் மகன் சரவணன் (வயது 32). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்த சுப்புகுட்டி என்பவருடைய மகள் முத்துச்செல்விக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது.

  சரவணன் சென்னையில் இருந்து அவ்வப்போது கீழப்புலியூர் வந்து தங்கிச் செல்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துச்செல்வி மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இந்தநிலையில் சென்னையில் இருந்து ஊருக்கு வந்த சரவணன், மனைவி முத்துச்செல்வியை தேடி மகிழ்வண்ணநாதபுரத்துக்கு வந்துள்ளார். மனைவியை தன்னுடன் ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். இதற்கு முத்துச்செல்வி வர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரவணன் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

  ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  Next Story
  ×