search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலை அதிபர் கோர்ட்டில் ஆஜர்
    X

    கோவை அருகே சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலை அதிபர் கோர்ட்டில் ஆஜர்

    கோவை அருகே சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலை அதிபர் அமித் ஜெயின் இன்று சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட குட்கா ஆலையில் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அங்கிருந்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து குட்கா ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ஆலை மேலாளர் ரகுராமன், அங்கு வேலை பார்த்து வந்த வட மாநில ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.ஆலை உரிமையாளரான டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படையினர் டெல்லி சென்றனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. வெளி நாட்டில் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் அமித் ஜெயின் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சென்னை அடையாறு புற்று நோய் மையத்திற்கு ரூ. 1 லட்சத்துக்கான டி.டி. எடுத்து கொடுக்க வேண்டும். சூலூர் போலீசில் கையெழுத்திட வேண்டும். இது தொடர்பாக சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆகி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளும் படி உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து அமித் ஜெயின் இன்று சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். #tamilnews
    Next Story
    ×