search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழங்காநத்தம் ரவுண்டானாவில் பூங்கா அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய
    X
    பழங்காநத்தம் ரவுண்டானாவில் பூங்கா அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய

    மதுரை தெற்கு மண்டலத்தில் ரூ.1.30 கோடியில் சாலைப்பணிகள்- மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

    மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.
    மதுரை:

    மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.

    83-வது வார்டு பரமேஸ்வரன் பிள்ளை சந்து, பேச்சிபடித்துறை சந்து ஆகிய பகுதிகளிலும், தமிழ்ச்சங்கம் ரோடு, ஜெய்ஹிந்துபுரம் பாலிடெக்னிக் மெயின் ரோடு ஆகிய பகுதிகளிலும், ஜீவா நகர் விரிவாக்கம் 1-வது குறுக்குத் தெரு, 2-வது குறுக்குத்தெரு மற்றும் 3-வது குறுக்குத் தெரு ஆகிய தெருக்களிலும், ராமையா மெயின் தெரு 1-வது குறுக்குத் தெரு, 2- வது மற்றும் 3-வது குறுக்குத் தெரு ஆகிய தெருக்களிலும், முத்துப்பட்டி பாலாஜி மெயின் தெரு, முத்துப்பட்டி அவனியாபுரம் சாலை ஆகிய பகுதிகளிலும் என தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து பழங்காநத்தம் ரவுண்டானாவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்ட ஆணையாளர் அனீஷ் சேகர் இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் பிரேம் குமார், செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×