என் மலர்

  செய்திகள்

  தஞ்சையில் வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி
  X

  தஞ்சையில் வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை அருகே உள்ள உடையார் பாளையம், காலனி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 68). கூலிதொழிலாளி.

  இவர் கடந்த 2 வாரமாக உடல்நிலை சரியில்லாததால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

  நேற்று திடீரென முருகேசன் மருத்துவ மனையில் இருந்து மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

  இதுபற்றி அவரது உறவினர்கள் கள்ளபெரம்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முருகேசனை தேடி வந்தனர். இந்தநிலையில் முருகேசன் தெற்கு மானோஜி பட்டி அருகே உள்ள ஒரு வாய்க்காலில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  உடனே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×