search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை: ஓ. பன்னீர் செல்வம்
    X

    எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை: ஓ. பன்னீர் செல்வம்

    எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது சசிகலா அணி மற்றும் ஓ.பி.எஸ். அணி கோடிக்கணக்கில் பணம் கொடுக்க பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டது.

    அதில் கூவத்தூரிலிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ. சரவணன் பேசுவதாக காட்சி வெளியானது. அதில் ‘‘சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினர். குறிப்பாக தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குதான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் பேசியதாக வெளியானது.

    இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது ஓ. பன்னீர் செல்வம் கூறுகையில் ‘‘எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று சசிகலாவுடனான சந்திப்பை தம்பிதுரை தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

    கூவத்தூர் விடுதியில் இருந்து தப்பி வந்து ஓ.பன்னீர் செல்வம் அணியில் சேர்ந்தவர்தான் சரவணன். இந்த விவகாரத்தில் வீடியோவில் இருப்பவர் நான்தான். ஆனால் அதில் வரும் குரல் என்னுடையது அல்ல என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×