என் மலர்

  செய்திகள்

  மதிப்பெண் குறைவு: கரூரில் 10-ம்வகுப்பு மாணவி தற்கொலை
  X

  மதிப்பெண் குறைவு: கரூரில் 10-ம்வகுப்பு மாணவி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எதிர்பார்த்த மார்க் கிடைக்காததால் 10-ம்வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  கரூர்:

  சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் யுவஸ்ரீ(வயது 15). இவர் சேலத்தில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து தேர்வு எழுதியிருந்தார்.

  கோடை விடுமுறைக்காக கரூர் வ.உ.சி. தெருவில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான 10-ம்வகுப்பு தேர்வு முடிவில் தான் எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண்களே கிடைத்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

  மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யுவஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×