search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை
    X

    தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு மழை பெய்ததால் சற்று பூமி குளிர்ச்சியடைந்ததையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்பின்னர் மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதையடுத்து நேற்று இரவு திடீரென மழை பெய்ய துவங்கியது. இந்த மழையால் பூமி சற்று குளிர்ச்சியடைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி (மில்லி மீட்டர் அளவில்): நெடுங்கல் 46.2, தளி 40, பாரூர் 27.8, போச்சம்பள்ளி 9.2, தேன்கனிக்கோட்டை 9, பெனுகொண்டாபுரம் 8.3, கிருஷ்ணகிரி 8.2, ஓசூர் 6, அஞ்செட்டி 2 என மொத்தம் 167.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தர்மபுரி கலெக்டர் அலுவலக பகுதியில் மட்டும் 46 மில்லி மீட்டர் அளவு மழை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல் மற்ற பகுதிகளான பாலக்கோடு, தர்மபுரி மற்றும் பென்னாகரம் ஆகிய பகுதிகளில் தலா 11 மி.மீட்டர் மழையும், பாப்பி ரெட்டிப்பட்டி மற்றும் மாரண்ட அள்ளி ஆகிய பகுதிகளில் தலா 4 மி.மீட்டர் மழையும், ஒகேனக்கல் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    Next Story
    ×