என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உத்தமபாளையம் அருகே 2 பேர் மாயம்
  X

  கோப்பு படம்

  உத்தமபாளையம் அருகே 2 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உத்தமபாளையம் அருகே முதியவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

  உத்தமபாளையம்:

  உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி மேற்குதெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(67). இவர் கருத்துவேறுபாடு காரணமாக மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

  தற்போது அவர்கள் சேர்ந்து வசித்து வந்த நிலையில் கடைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் அவரது மனைவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.

  உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் துரைமகன் ஜெகதீஸ்வரன்(29). இவர் சின்னமனூரில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை கடை உரிமையாளரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது ஜெகதீஸ்வரன் வேலைக்கு வரவில்லை என கூறினார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த துரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×