search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவில் வெளியாகும் பஜாஜ் அவென்ஜர் 180
    X

    விரைவில் வெளியாகும் பஜாஜ் அவென்ஜர் 180

    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சுசுகி இன்ட்ரூடர் மாடலுக்கு போட்டியாக பஜாஜ் அவென்ஜர் 180 வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2018-ம் ஆண்டில் புதிய அவென்ஜர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதைதொடர்ந்து திரஸ்ட்சோன் வெளியிட்டிருக்கும் தகவல்களில் பஜாஜ் நிறுவனம் அவென்ஜர் 150 மாடலின் விற்பனையை நிறுத்தி சக்திவாய்ந்த அவென்ஜர் 180 மாடலை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அவென்ஜர் 180 முந்தைய 150 சிசி அவென்ஜர் மாடலுக்கு மாற்றாகவும், சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இன்ட்ரூடர் 150 மாடலுக்கு போட்டியாக அமையும். இத்துடன் புதிய வடிவமைப்பு மற்றும் தற்போதைய அவென்ஜர் மாடலை விட அதிக சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    பல்சர் 180 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் மற்றும் இன்ட்ரூடர் 150 மாடலுக்கு போட்டியாக சில அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அவென்ஜர் 180 மாடலில் 178.2 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



    இந்த இன்ஜின் 17 பி.எச்.பி. பவர் மற்றும் 14 என்.எம். டார்கியூ கொண்டிருக்கும். தற்போதைய அவென்ஜர் 150 மாடலில் 14.3 பி.எச்.பி. பவர் மற்றும் 12.5 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது.

    புதிய அவென்ஜர் 180 மாடலின் இரண்டு டையர்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ABS தேர்வு செய்து கொள்ளும் அம்சமாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எல்இடி மின்விளக்குகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அவென்ஜர் 180 மாடல் சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அவென்ஜர் 150 மாடல் ரூ.81,459 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவென்ஜர் 180 தற்போதைய 150 சிசி மாடலை விட ரூ.5000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுசுகி இன்ட்ரூடர் 150 விலை ரூ.98,340 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
    Next Story
    ×