search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII
    X

    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII

    இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஃபோண்டம் VIII சென்னை வந்திருக்கிறது. கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் புதிய கார் சென்னையில் இருந்து விநியோக மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
    சென்னை:

    இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII சென்னை துறைமுகம் வந்திருக்கிறது. கப்பல் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய ஃபேண்டம் VIII இங்கிருந்து பி.எம்.டபுள்யூ. குன் பிரத்யேக விற்பனை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

    2018 ஃபேண்டம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் எட்டாவது தலைமுறை ஃபிளாக்ஷிப் செடான் ஆகும். இந்தியாவில் புதிய ஃபேண்டம் VIII பிப்ரவரி 22-ம் தேதி வெளியிடப்படும் என பி.எம்.டபுள்யூ. குன் இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய மாடலின் கலர் விவரங்களும் தெரியவந்துள்ளது. 

    அதன்படி ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII இந்தியாவில் டூயல் டோன் வைட் மற்றும் புளூ நிறங்களில் காட்சியளிக்கிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்ற ஃபேண்டம் VIII மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



    புகைப்படம்: நன்றி jhiteshnaik

    புதிய ஃபேண்டம் VIII வடிவமைப்பை ஆடம்பரத்திற்கான சிற்பம் என ரோல்ஸ் ராய்ஸ் அழைக்கிறது. இதனால் முந்தைய மாடலை விட 30% வரை எடை குறைவாகவும், அதிக திடமாகவும் இருக்கிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தில் 6.75 லிட்டர் டர்போசார்ஜ்டு V12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 563 பி.ஹெச்.பி. பவர், 900 என்.எம். டார்கியூ மற்றும் 8-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

    அந்த வகையில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.3 விநாடிகளில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவு பெர்சனலைசேஷன் அம்சங்கள் மற்றும் அதிக சவுகரியத்தை வழங்கும் வகையில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

    புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாக இருக்கிறது. முந்தைய மாடலில் வழங்கப்ட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பினேக்கிள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவிற்கு மாற்றாக டுவின் 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×