search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம் தகவல்
    X
    தேர்தல் ஆணையம் தகவல்

    தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுப்போட 1.59 லட்சம் முதியவர்கள் விண்ணப்பம்

    தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்வமுள்ள உள்ள முதியவர்கள் தபால் ஓட்டுபோடலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    சென்னை:

    சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பட்டியல் கணக்கிடப்பட்டது. 12 லட்சம் முதியவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்வமுள்ள உள்ள முதியவர்கள் தபால் ஓட்டுபோடலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஒவ்வொரு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டு போட விருப்பம் உள்ளதா? என்று தேர்தல் அலுவலர்கள் கேட்டறிந்தனர். விருப்பம் உள்ளவர்கள் அதற்கான படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் 1.59 லட்சம் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தவிர மாற்றுத்திறனாளிகள் 49,114 பேரும் சேர்த்து 2 லட்சத்து 8 ஆயிரத்து 963 பேர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×