search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


    பெரியவா அப்போது மகாகாவ் என்ற ஊரில் முகாமிட்டிருந்தார். குல்பர்காவுக்கு அருகே இருக்கிறது மகாகாவ்.

    அன்றைய தினம் காலை மணி ஏழு இருக்கும்.

    வெகு சொற்ப பக்தர்களே பெரியவாளுக்கு முன் அமர்ந்திருந்தனர்.

    ஐதராபாத்தில் வருமான வரித்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரி ராமானுஜம், அவரது மனைவி பிரபா, மகள் சங்கீதா, மகன் அரவிந்த் ஆகியோர் பெரியவாளுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர். அந்தப் பரப்பிரம்ம சொரூபத்தைக் கண்களை இமைக்காமல் தரிசித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தன் மகன் அரவிந்த்தை பெரியவாளுக்குக் காண்பித்து, ‘‘பெரியவா... உங்களோட ஆசிர்வாதம் இவனுக்கு வேணும். தினமும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்றான். இதுவரை லட்சம் காயத்ரி மந்திரம் ஜபம் பண்ணி இருக்கான்’’ என்று சொன்னார் பிரபா. சொல்லும்போது அந்தப் பெண்மணியின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு!

    அந்தணர்கள் தினமும் தங்களது அனுஷ்டானத்தில் காயத்ரி மந்திரத்தை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளில் இத்தனை எண்ணிக்கை ஜபிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. தவிர கிரகணம், ஆவணி அவிட்டத்துக்கு மறுநாள் வரும் காயத்ரி ஜப தினம் போன்ற விசே‌ஷ காலங்களில் ஆயிரம் எண்ணிக்கையைத் தாண்டி ஜபிப்பதும் உண்டு. இப்படி எல்லாம் ஜபித்தால்தான், இத்தனை சிறு வயதில் ஒரு லட்சம் சொல்ல முடியும்.

    சிறுவனாக இருந்தாலும் நித்தமும் தனது அனுஷ்டானங்களை சரிவரச் செய்த காரணத்தால், அரவிந்த்தால் ஒரு லட்சம் காயத்ரி மந்திரத்தை இது வரை ஜபிக்க முடிந்திருக்கிறது.

    ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    இதை பிரபா சொல்லி முடித்தவுடன், சிறுவனான அரவிந்த் மகா பெரியவாளை கைகளைக் கூப்பி வணங்கினான். நமஸ் கரித்தான்.

    அவனைப் பார்த்துப் புன்னகையுடன் ஆசீர்வ தித்தார் பெரியவா. பிறகு, தன் அருகே இருக்கிற மரத்தால் ஆன கமண்டலத்தை (சொம்பு) காண்பித்தார். ‘‘இதை எடுத்துக்கோ. பின்னாடி கிணறு இருக்கு. அதுல நீர் எடுத்து கமண்டலத்துல புடிச்சிக் கோ. கொல் லைப் பக்கம் ஒரு மரம் பட்டுப் போயிருக்கும். அந்த மரத்தோட அடி பாகத்துல இந்த நீரை விட்டுட்டு வா’’ என்றார்.

    ராமானுஜமும் பிரபாவும் நெகிழ்வின் உச்சிக்கே போய் விட்டார்கள். இருக்காதா பின்னே! எப்பேர்ப்பட்ட பாக்கியம் இது!

    பெரியவா நித்தமும் தான் பயன்படுத்துகிற கமண்டலத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறார். அதில் நீர் பிடித்து, பின்பக்கம் இருக்கிற ஒரு மரத்துக்கு விடச் சொல்லி இருக்கிறார்.

    என்ன விசே‌ஷம்? என்ன மரம் அது? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதுதானே!

    வி‌ஷயம் இதுதான்.

    மகாகாவ் கிராமத்தில் பெரியவா தங்கி இருக்கிறார் அல்லவா?

    பெரியவா தங்கி இருக்கிற இடத்தின் கொல்லைப் பக்கம் ஒரு வில்வ மரம் சமீபத்தில் ஏதோ காரணத்தால் தீப்பிடித்து எரிந்து போய் விட்டது. தீயினால் பாதிக்கப்பட்ட அந்த மரத்தின் பெரும் பகுதி உருக் குலைந்து பட்டுப் போய் விட்டது.

    சர்வேஸ்வரனின் பூஜைக்கு மிகவும் உகந்தது வில்வ இதழ்கள். ஈஸ்வர பூஜைக்குப் பயன்படுகிற ஒரு வில்வ மரத்துக்கு இப்படி ஒரு நிலையா என்று தகவல் கேள்விப்பட்ட பெரியவா மனம் வருந்தினார்.

    தீயினால் பட்டுப் போன அந்த வில்வ மரம் மீண்டும் துளிர்க்க வேண்டும் என்று பெரியவாளே தினமும் ஒரு சொம்பு ஜலம் ஊற்றி வந்தார்.

    இந்த வேளையில்தான் தன் குடும்பத்தோடு ராமானுஜம் மகாகாவ் வந்தார். ‘இதுவரை ஒரு லட்சம் காயத்ரி மந்திரம் ஜபித்த பிரம்மச்சாரி’ என்ற காரணத்தால் அரவிந்த் கையால் நீர் ஊற்றினால் அது விசே‌ஷம் என்று பெரியவா உத்தரவிட்டிருக்கிறார். பெரியவா உத்தரவை தான் பெற்ற பாக்கியம் என்று எண்ணி, அரவிந்த்தும் அப்படியே செய்தான்.

    ராமானுஜத்தைப் பார்த்து, ‘‘அந்த வில்வ மரம் மீண்டும் துளிர்க்கணும். துளிர்க்க ஆரம்பிச்சுதுன்னா போதும்... பெருசா வந்திடும். அதான் உம் புள்ளைய ஒரு சொம்பு ஜலம் ஊத்தச் சொன்னேன். ஒரு லட்சம் காயத்ரி மந்திரம் ஜபிச்சிருக்கானே..’’ என்றார் பெரியவா.

    தன் குடும்பத்தாருடன் மீண்டும் பெரியவாளை நமஸ்கரித்தார் ராமானுஜம். ஐதராபாத் புறப்படுவதற்கு உத்தரவு கேட்டார்.

    அவருக்கு உத்தரவு தந்த பெரியவா, ‘‘இந்த வில்வ மரம் துளிர்க்க ஆரம்பித்தவுடன்தான் இங்கிருந்து நான் கெளம்பறதா இருக்கேன்’’ என்றார் உறுதியாக.

    பெரியவா நினைத்தால் ஆகாத காரியம் உண்டோ? அடுத்து வந்த ஒரு சில மாதங்களில் தீப்பிடித்துப் பட்டுப் போன வில்வ மரம், மெள்ள துளிர்க்க ஆரம்பித்தது,

    அதன் பின்தான் மகாகாவ் கிராமத்தை விட்டுப் புறப்பட்டார் பெரியவா.

    காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலனைப் பார்த்தீர்களா? அதுவும் பெரியவா தன் திருவாயால் சொல்லும்போது நமக்கு உணர்த்தும்போது அதன் மகத்துவம் புரிகிறதுதானே!

    பெரியவா ஒரு காரியத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தால், அதை எப்படியும் நிறைவேற்றி விடுவார்.

    இதற்கான வழி வகைகள் நமக்குத்தான் தெரியாது. மகான்களுக்குத் தெரியாமல் இருக்குமா?

    இதோ, அடுத்த சம்பவத்தைப் படியுங்கள். இதைப் படித்தால், ‘நடப்பதெல்லாம் பெரியவா அருளே... நம்மிடம் ஒன்றும் இல்லை’ என்ற தெளிவு உங்கள் அனைவருக்குமே வந்து விடும்.

    சென்னையில் வசித்து வந்த பெண்மணி சுமதி. முருக பக்தர். அதோடு, பெரியவா பக்தரும்கூட.

    சுமதியின் பெண்ணுக்குத் திருமணம் ஆயிற்று. வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

    திருமணத்துக்கு வந்த ஒரு அன்பர், பெண்ணுக்கு ஒரு பரிசை அன்பளிப்பாகக் கொடுத்தார். இந்த அன்பளிப்பை வழங்கியவர் சுமதிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அந்த அன்பரும் மகா பெரியவாளின் பக்தர்.

    என்ன அன்பளிப்பு தெரியுமா? மகா பெரியவாளின் அற்புதமான ஒரு புகைப்படம். அழகாக பிரேம் செய்யப்பட்டது.

    பின்னர்தான் இந்த அன்பளிப்பு வி‌ஷயம் சுமதிக்குத் தெரிய வந்தது. ‘ஆகா... மகா பெரியவா படமா?’ என்று பூரித்துப் போனார்.

    பொதுவாக திருமணங்களில் மணமகளுக்குக் கொடுக்கப்படுகிற அன்பளிப்புகள் அவரது வீட்டாருக்கும், மணமகனுக்குக் கொடுக்கப்படுகிற அன்பளிப்புகள் அவரது வீட்டாருக்கும் போய்ச் சேரும். இதுதான் முறை.

    இந்த அன்பளிப்புகளை மணமகள் வீட்டார் தங்கள் இல்லத்துக்குச் சென்று பிரித்துப் பார்ப்பார்கள். அப்படி அன்பளிப்புகளை வகைப்படுத்துகிறபோது, ‘இது மாப்பிள்ளையிடமே கொடுத்து விடுவோம். நம் மகள் அங்கேதானே வாழப்போகிறாள்’ என்று சிலவற்றை மாப்பிள்ளை வீட்டாரிடம் தருவதும் உண்டு.

    ஆனால், இந்த மகா பெரியவா படம் சுமதிக்கு வேண்டப்பட்ட ஒரு அன்பரால் அவரது மகளான மணமகளிடம் கொடுக்கப்பட்டது. சொல்லப்போனால், சுமதியின் இல்லத்தில்தான் நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    ஆனால், கல்யாண மேடையில் ஏதோ கை தவறி சுமதியே மணமகனிடம் கொடுத்து விட்டிருக்கிறார். அவர்களும் தங்களுக்கு வந்த அன்பளிப்பு என்று எடுத்துப் போய் விட்டார்கள்.

    ஆக, சுமதிக்கு மிகவும் பிடித்தமான மகா பெரியவா படம், மாப்பிள்ளை வீடான பெங்களூருக்குப் போய் விட்டது. அந்த சமயத்தில் சுமதி கொஞ்சம் வருத்தப்பட்டார். பிறகு, ‘பெரியவா நம் வீட்டில் இருந்தால் என்ன... சம்பந்தி வீட்டில் இருந்தால் என்ன’ என்று தன் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டார்.

    இது நடந்து பல மாதங்கள் உருண்டோடி விட்டன.

    ஒருவருக்கு ஒரு பொருள் கிடைக்கிறது என்றால், அது வந்து சேர வேண்டிய வேளை என்று பொருள்.

    ஒருவரிடம் இருந்து ஒரு பொருள் நழுவுகிறது என்றால், விலக வேண்டிய வேளை என்று பொருள்.

    இதைத்தான் கர்மா, விதி என்றெல்லாம் சொல்கிறோம்.

    திருமணத்தின்போது தன் பக்தையான சுமதிக்கு அருள வேண்டும் என்பதற்காக மகா பெரியவாளே தேடி வந்திருக்கிறார். சுமதி தன் இல்லத்தில் இந்தப் படத்தை எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியவா தீர்மானித்திருக்கிறார்.

    ஆனால், படம் இடம் மாறிப் போய் விட்டது அல்லவா?

    பெரியவா இதைப் பார்த்துக் கொண்டிருப்பாரா?

    ஒரு சந்தர்ப்பத்தில் தன் லீலையைத் தொடங்கினார்.

    என்ன லீலை?

    Next Story
    ×