என் மலர்
உத்தரப் பிரதேசம்
- தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.
இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,52,513 ஆகும்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வாரணாசி தேர்தலில் பிரதமர் மோடி 5,81,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4.00 மணி நிலவரப் படி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார்.
- மகன் ராகுல் காந்தி தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு வலுவான போட்டியை இந்தியா கூட்டணி வழங்கி வருகிறது. என்.டி.ஏ கூட்டணி 296 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுங்கு தேசம், ஆர்.ஜே .டி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் இறுதி முடிவு எப்படியும் மாற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போதைய 4.00 மணி நிலவரப் படி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார். வயநாடு தொகுதியில் சிபிஐஎம் வேட்பாளரை விட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
குறிப்பாக ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே இன்று பதிவான அதிக வாக்கு வித்தியாசம் இதுவாகும்.
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 1.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே உள்ளார். ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுவது வழக்கம். கடந்த 2019 தேர்தலில் 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அங்கு இந்த தேர்தலின் மூலம் முதல் முறையாகக் களம் காணும் அவரது மகன் ராகுல் காந்தி தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- 75 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.
- ராமர் கோவில் கட்டியது, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக பா.ஜ.க.வுக்கு பெரும்பாலான தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இங்குதான் அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவு அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.
2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜனதா இங்கு அதிக இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைத்தது. 2014-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா 71 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அந்த கட்சி கூடுதலாக 61 இடங்களை அப்போது கைப்பற்றி இருந்தது. 2019 தேர்தலில் பா.ஜனதாவுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இது 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 9 இடங்கள் குறைவாகும்.
இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு உத்தரபிரதேசத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி அந்தக்கட்சி 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
மொத்தம் உள்ள 80 இடங்களில் பா.ஜனதா 75 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 இடங்களில் அப்னாதளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி கட்சிகள் களத்தில் நின்றன.
75 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதாவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. அந்தக்கட்சி 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடியே தொடக்கத்தில் பின் தங்கியிருந்தார். பின்னர் தான் அவர் கூடுதல் வாக்குகள் பெற்று அதிக முன்னிலைக்கு சென்றார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, சுல்தான்பூரில் களத்தில் நின்ற மேனகா காந்தி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பின்தங்கியிருக்கிறார்கள். இது பா.ஜனதா தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் கோவில் கட்டியது, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக பா.ஜனதாவுக்கு பெரும்பாலான தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா கூட்டணியின் சிறப்பான செயல்பாடுகளால் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் பெரும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அந்த கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் அந்த மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்கள். ஆனாலும் இந்த பிரசாரம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலை அந்த மாநிலத்தில் இருப்பதை காண முடிந்தது. இதை இந்தியா கூட்டணி சரியாக பயன்படுத்திக் கொண்டது.
பா.ஜனதா கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
உத்தரபிரேதசத்தில் பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பல்வேறு வியூகங்களை அமைத்தார். ராகுல் காந்தியுடன் இணைந்து நடத்திய கூட்டங்கள் இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.
இங்கு இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 62 தொகுதிகளில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 35 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது கடந்த முறையை விட 30 இடங்கள் கூடுதல் ஆகும். 2019 தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 இடங்களே கிடைத்தது.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டது. இதில் 8 இடங்களில் அந்த கட்சி முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலை விட அந்த கட்சி தற்போது 7 இடங்களில் கூடுதல் பெற்று முன்னிலையில் இருக்கிறது. 2019-ல் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
தற்போது ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்தியா கூட்டணி தலைவர்களின் பிரசாரமும் , பா.ஜனதாவுக்கு எதிரான தேர்தல் வியூகமும் அந்த கட்சிக்கு கைக்கொடுத்தது.
- வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
- அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்திய திருநாட்டின் பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.
இந்த நிலையில் 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
#WATCH | BJP national president JP Nadda cast his vote at a polling booth in Bilaspur, Himachal Pradesh. His wife Mallika Nadda also cast her vote here. #LokSabhaElections2024 pic.twitter.com/7XZC3pU2zw
— ANI (@ANI) June 1, 2024
அந்த வகையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவி மல்லிகா நட்டாவும் தனது வாக்கினை செலுத்தினார்.
#WATCH | Uttar Pradesh Chief Minister Yogi Adityanath casts his vote at a polling booth in Gorakhnath, Gorakhpur.
— ANI (@ANI) June 1, 2024
The Gorakhpur seat sees a contest amid BJP's Ravi Kishan, SP's Kajal Nishad and BSP's Javed Ashraf. #LokSabhaElections2024 pic.twitter.com/2Ao7uC7slU
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
#WATCH | Brother of Samajwadi Party's Lok Sabha candidate from Ghazipur Afzal Ansari, former MLA Sibgatullah Ansari casts his vote at a polling booth in Ghazipur, Uttar Pradesh. pic.twitter.com/60ASMU34F9
— ANI (@ANI) June 1, 2024
சமாஜ்வாதி கட்சியின் காஜிபூர் மக்களவை வேட்பாளர் அப்சல் அன்சாரியின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிப்கதுல்லா அன்சாரி உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
#WATCH | Punjab: AAP MP Raghav Chadha casts his vote at a polling station in Lakhnaur, Sahibzada Ajit Singh Nagar under the Anandpur Sahib constituency.#LokSabhaElections2024 pic.twitter.com/yyvKfZF0dK
— ANI (@ANI) June 1, 2024
பஞ்சாப்பில் ஆனந்த்பூர் சாஹிப் தொகுதிக்கு உட்பட்ட லக்னூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
#WATCH | SBSP President and UP Minister Om Prakash Rajbhar casts his vote at a polling station in Ballia for the seventh phase of #LokSabhaElections2024 pic.twitter.com/cQf88ZwAob
— ANI (@ANI) June 1, 2024
எஸ்பிஎஸ்பி தலைவரும், உ.பி., அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் பல்லியாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் போலீஸ்காரரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் வரலாறு காணாத வெப்ப அலையால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் பகுதியில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட ஒரு குரங்கு சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த குரங்கிற்கு பல முறை தண்ணீர் கொடுத்துள்ளார்.
மேலும் சி.பி.ஆர். செய்து குரங்கின் உயிரை காப்பாற்றி உள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த போலீஸ்காரரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
- தீவிபத்தில் இதுவரை காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 110 இல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பல அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் எந்த தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது என்று தகவல் வெளியாகவில்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
தீவிபத்தில் இதுவரை காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏர் கண்டிஷனரில் தீப்பிடித்து பரவியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தீவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போவாயன் தாலுகாவில் போடப்பட்ட சாலையின் தரம் குறித்து எம்.எல்.ஏ திடீர் ஆய்வு நடத்தினார்.
- அப்போது, தன்னிடம் இருந்த பேனாவால் சாலையை கீறிப் பார்த்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பா.ஜ.க.வை சேர்ந்த சேத்ராம். இவர் அங்குள்ள போவாயன் தாலுகாவில் போடப்பட்ட சாலையின் தரம் குறித்து திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்பகுதியில் சமீபத்தில் போடப்பட்டிருந்த தார்ச்சாலையினை ஆய்வு செய்தார். தன்னிடம் இருந்த பேனாவால் சாலையை கீறி எடுத்தார்.
லக்கிம்பூர் மாவட்டத்துடன் போவாயன் தாலுகாவை இணைக்கும் 17 கி.மீ தூரம் சாலை விரிவாக்கத் திட்டத்தில் இந்த சாலை அடங்கும். அவரது திடீர் ஆய்வின்போது ஜல்லிக்கு பதிலாக மண் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடித்தார்.
எம்.எல்.ஏ., பேனாவைப் பயன்படுத்தி சாலையின் மேற்பரப்பைத் துடைத்து, பயன்படுத்திய பொருட்களின் தரம் குறைந்ததைக் காட்டினார். இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
சாலை கட்டுமானத்தின் மோசமான தரம் குறித்து கடுமையாக சாடிய அவர், கட்டுமானப் பொருட்களில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளையும் கண்டறிந்தார். இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் பேச உள்ளதாக கூறினார். இச்சம்பவம் பொதுப்பணித் துறைக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுப்பணித்துறை மந்திரி ஜிதின் பிரசாதாவின் சொந்த மாவட்டம் ஷாஜஹான்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாக்கு கேட்கிறார்கள்.
- அதே தலைவர்கள் கருப்பு சட்டங்களை கொண்டு வந்தவர்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராபர்ட்ஸ்கஞ்ச் மக்களவை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சோட்டேலால் கர்வாருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாக்கு கேட்கிறார்கள். அதே தலைவர்கள் கருப்பு சட்டங்களை (விவசாயிகள் தொடர்பான மூன்று சட்டங்கள்) கொண்டு வந்தவர்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த கருப்பு சட்டங்கள் விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்திய பிறகு திரும்பப் பெறப்பட்டது. கருப்பு சட்டங்கள் திரும்பப் பெற்ற போதிலும் நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதேபோல் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் நிலத்தை பறித்து விடுவார்கள்.
இந்தத் தேர்தல் நம்முடைய எதிர்காலத்தின் பாதுகாப்பை பற்றியது. அதே நேரத்தில் இந்த தேர்தல் நம்முடைய அரசியலமைப்பு பாதுகாப்பு பற்றியது. அது நமக்கு மரியாதை கொடுக்கக் கூடியது. நமது உரிமை பாதுகாக்கக் கூடியது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்கள் இலவச மாவு பெறுவார்கள். மொபைல் டேட்டே இலவசமாக வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
- உத்தரப் பிரதேச மாநிலம் கைஸர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கரண் பூஷன் சிங் போட்டியிடுகிறார்.
- கரண் பூசன் சிங்கிற்கு சொந்தமான கான்வாய் SUV கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூசன் சிங் மீது இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிய நிலையில், பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் நடப்பு மக்களவைத் தேர்தலில் அவருக்கு எம்.பி சீட் வழங்காமல் அவரது மகன் கரண் பூஷன் சிங்கிற்கு பாஜக, எம்.பி சீட் வழங்கியது.அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் கைஸர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கரண் பூஷன் சிங் போட்டியிடுகிறார்.


இந்த நிலையில் உத்தரப் பிரதேசம் கோண்டா மாவட்டம் கர்னைல்கஞ்ச் பகுதியில் சென்றுகொண்டிருந்தகரண் பூசன் சிங்கிற்கு சொந்தமான கான்வாய் SUV கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஹோசூர்பூர் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் மோதியதில் பைக்கில் வந்துகொண்டிருந்த 17 வயது சிறுவனும், 24 வயது இளைஞனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மீது மோதி வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 60 வயது மூதாட்டி மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரில் கரண் பூசன் சிங் இருந்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
- கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
- கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி ரெயில் நிலையத்தில் ராணி என அடையாளம் காணப்பட்ட 38 வயது பெண் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த பதற வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் ராணியும் அவரது லிவ் இன் பார்ட்னர் கிஷோரும் 2வது நடைமேடை நாற்காளியில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிவிட, தான் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி ராணி தண்டவாளத்தில் குதித்து கிஷோரை மிரட்டினார்.
அப்போது, கேரளா எக்ஸ்பிரஸ் நெருங்கி வருவதை அறியாத ராணி நடைமேடை அருகே சென்று ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் மோதி, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே ராணி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காட்சி சிசிடிவியில் பதிவான நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஜிஆர்பி கன்டோன்மென்ட்டின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் சமர் பகதூர் கூறுகையில், "ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் வந்தவுடன் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர்.
- பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த 26-ம் தேதி சாலையோரம் தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்கிருந்த தெருநாய்கள் திடீரென கடித்தது.
நாய் கடித்ததால் படுகாயமடைந்த 4 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தெருநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே, "இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் மீதமாவதை நாய்களுக்கு உணவாக கொடுப்பதே தெருநாய்கள் தொல்லைக்கு காரணம் என்று கூறி அந்த பகுதியில் உள்ள 44 இறைச்சி கடைகளை இடிக்க உத்தரவிட்டார்.
மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர். மேலும், இனி அந்த பகுதியில் இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது என்றும் மேயர் பிரமிளா பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- மோடி கூறியது போல, அவர் மற்றவர்களை போல உயிரியல் சார்ந்த பிறப்பல்ல.
- பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும்.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வெப்ப அலையை தாங்க முடியாமல் அவர் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்ட வீடியோ வைரலானது.
அக்கூட்டத்தில் பேசிய அவர், "ஜூன் 4க்குப் பிறகு குட்பை பாஜக , குட்பை நரேந்திர மோடி. பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும். பாஜகவிற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளது.
மோடி கூறியது போல, அவர் மற்றவர்களை போல உயிரியல் சார்ந்த பிறப்பல்ல. கடவுளால் உருபெற்றவர் தான் என்றால், அவர் உருபெற்றது உழைக்கும் மக்களுக்காகவோ, உழவர்களுக்காகவோ அல்ல. அம்பானி - அதானிக்காக மட்டுமே.
தேர்தலுக்கு பின்பு ஊழல் தொடர்பாக மோடியிடம் அமலாக்கத்துறை விசாரித்தால் தனது செயல்களுக்கு பரமாத்மா தான் காரணம் என்று கூறி அவர் தப்பித்து விடுவார்" என்று தெரிவித்துள்ளார்.






