என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினரையும் போலீசார் வரவழைத்துள்ளனர்.
- சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழிக்கு, சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும் என்பது அர்த்தமாகும். இன்றைய காலத்தில் ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் கோபம் கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகிறது.
அதுபோல சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. நிலம் தொடர்பான குடும்ப தகராறு ஒன்று உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் உள்ள கைர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. மகனுக்கும், தாயுக்கும் தகராறு தொடர்பாக போலீசில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினரையும் போலீசார் வரவழைத்துள்ளனர்.
அப்போது தாய் மீது மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சம்பவத்தை பார்த்த போலீசார் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 40 சதவீத தீக்காயம் அடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் பலியான பெண் ஹேமலதா என்றும் கைது செய்யப்பட்ட அவரது மகனான கவுரவுக்கு 22 வயதாகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மணப்பெண்ணின் 35 வயதுடைய தாயும், மணமகனின் தந்தையும் அடிக்கடி சந்தித்து உள்ள ஆரம்பித்தனர்.
- அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் படிப்படியாக காதலாக மாறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் கிராமத்தில் மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடிப்போன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பெண்ணின் தந்தையும் மணமகனின் தந்தையும் 28 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். நண்பர்களாக இருந்தவர்கள் சம்பந்திகளாக மாற முடிவு செய்தனர். 2 மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்பிறகு மணப்பெண்ணின் 35 வயதுடைய தாயும், மணமகனின் தந்தையும் அடிக்கடி சந்தித்து உள்ள ஆரம்பித்தனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் படிப்படியாக காதலாக மாறியுள்ளது.
ஜூன் 17ம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஜூன் 3-ம் தேதி மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடி போயுள்ளார்.
இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னெவென்றால், மணமகனின் தந்தைக்கு 10 குழந்தைகளும் மணமகனின் தாயுக்கு 6 குழந்தைகள் உள்ளனர் என்பது தான்.
எஸ்பி உத்தரவின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- திருமண மண்டபத்திற்கு அருகில் காரில் பார் அமைத்து சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட கார் டெல்லியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மது இல்லாமல் திருமண கொண்டாட்டமா?... என்கிற நிலை நிலவுகிறது. மணமகன் மது அருந்தி வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள், திருமண விருந்தில் சிக்கன் பீஸ் இல்லாததால் மது போதையில் உறவினர்கள் செய்த ரகளையால் நின்ற திருமணம் என்பதுபோன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.
அந்த வகையில், திருமண கொண்டாட்டத்தின் போது திறந்தவெளியில் காரில் மது அருந்திய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் செக்டார் 73 இல் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அருகில் காரில் பார் அமைத்து சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹைதர் (30), அர்ஜூன் (20), அஜித் (21), மற்றும் பிரதீக் தனேஜா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கார் டெல்லியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் நடைபெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்கள் சில ரசிக்கும் படியாகவும், சில அதிர்க்குள்ளாக்கும் வகையில் அமையும். அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
சுமார் 27 வினாடிகள் ஓடும் வீடியோவில், தெருவில் செல்லும் 5வயது சிறுவனை குரங்குகள் சேர்ந்து கடிக்கின்றன. சிறுவன் பயத்தில் அலறி சத்தம் போட்டதும் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் விரட்டியதை அடுத்து குரங்குகள் ஓடிவிட்டன. இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் நடைபெற்றுள்ளது.
- மணமகன் திலீப் (25) திடீரென அஞ்சலியின் தாய் மனிஷாவையும், தந்தை சந்தோஷையும் அறைந்தார்.
- காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு, இரு தரப்பினரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் அஞ்சலி (18) என்பவருக்கும் திலீப் (25) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகன் திலீப் (25) திடீரென அஞ்சலியின் தாய் மனிஷாவையும், தந்தை சந்தோஷையும் அறைந்தார்.
இதை பார்த்து கோவமான மணப்பெண் போலீசுக்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திலீப், அவரது மூத்த சகோதரர் தீபக், அவரது மாமா மாதா பிரசாத் மற்றும் அவரது தந்தை ராம்கிரிபால் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் உறவினர்கள் மற்றும் காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு, இரு தரப்பினரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர். பின்னர் திருமண சடங்குகள் முடிக்கப்பட்டன.
- இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்.
- இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் - மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.
- 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.
பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.
அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் குணமாகி வீடு திரும்பிய அவரை மீண்டும் இன்று [ஜூலை 13] சனிக்கிழமை வந்து பாம்பு கண்டித்துள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராமத்தின் அருகில் உள்ள ஒரே மருத்துவமனையில் அவர் மீண்டும் மீண்டும் சிகிச்சை பெற்று வருவதால் அவரது நிலைமை மோசமாகியுள்ளது. சனி ஞாயிறில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று மருத்துவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
- அந்தப் பெண்ணும் மணப்பெண்ணாக திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்தாள்.
- திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஹிமாயுபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ராம்நகரைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜூலை 10 அன்று திருமண நிகழ்விற்காக விகாஸ் ஊர்வலமாக ஹிமாயூபூரில் உள்ளபெண் விட்டிற்கு அழைந்து வந்தனர்.
அங்கு இருந்தவர்கள் மணமகனை வரவேற்றனர்.
இந்நிலையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.
திருமண விருந்தின் போது உணவு குறைந்ததாக கூறி, திருமண வீட்டினரை மக்கள் கட்டையால் தாக்கினர். திருமண விருந்தினர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசினர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திருமணம் முறியும் அளவுக்கு மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருதரப்பினரிடையேயும் ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
- போலீசாரும் அங்கு திரண்டு அந்த காளையை போலீஸ் நிலைய மேற்கூரையில் இருந்து கீழே இறக்க முயற்சித்தனர்.
- கூட்டம் திரண்டதால் பீதி அடைந்த காளை மாடு மேற்கூரையில் இருந்து அருகே உள்ள வீட்டின் தகர கொட்டகை மீது பாய்ந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் மேற்கூரையில் காளை மாடு ஏறி நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரேபரேலியில் சலோன் புறக்காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தின் மேற்கூரையில் காளை மாடு ஏறி நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே அப்பகுதியில் கூட்டமும் திரண்டது. அவர்கள் அந்த மாடு மீது கம்புகளை வீசினர். அதற்குள் போலீசாரும் அங்கு திரண்டு அந்த காளையை போலீஸ் நிலைய மேற்கூரையில் இருந்து கீழே இறக்க முயற்சித்தனர்.
கூட்டம் திரண்டதால் பீதி அடைந்த காளை மாடு மேற்கூரையில் இருந்து அருகே உள்ள வீட்டின் தகர கொட்டகை மீது பாய்ந்தது. இதில் அந்த மாடு பலத்த காயம் அடைந்தது. பின்னர் அந்த மாட்டை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கூடுதல் இருக்கைகளை போட்டு குழந்தைகள், உறவினர்கள் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
- வலைத்தளவாசிகள் கலவையான கருத்துகளை பதிவிட்டு மணமக்களை வாழ்த்தி வருகிறார்கள்.
அம்பானி வீட்டு கல்யாணம் ஜெட் விமானம், தங்க உடை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஆடம்பரத்தின் உச்சமாக அரங்கேறி வருகிறது. அதே வேளையில், உத்தரபிரதேச மணமக்கள் புல்டோசரில் எளிமையாக ஊர்வலம் நடத்தி வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
கோரக்பூரை சேர்ந்த மணமகன், மணமகளையும், உறவினர்களையும் புல்டோசர் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். புல்டோசரின் மண் அள்ளும் எந்திர பாகத்தில் சில இருக்கைகளை போட்டு மணமக்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மேளதாள இசைக்கு மணமகன் அமர்ந்தபடியே உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். சில நேரங்களில் அருகில் கூடுதல் இருக்கைகளை போட்டு குழந்தைகள், உறவினர்கள் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
இதுபற்றிய வீடியோவை பிரியா சிங் என்பவர் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர அது இணையதளத்தை கலக்கி வருகிறது. வலைத்தளவாசிகள் கலவையான கருத்துகளை பதிவிட்டு மணமக்களை வாழ்த்தி வருகிறார்கள்.
- நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.
- பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் நீண்ட காலமாக எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. இதை துணை முதல்-மந்திரியும், சுகாதார மந்திரியுமான பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அந்த 17 டாக்டர்களையும் அதிரடியாக பணி நீக்கி அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்ததாவது:-
நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும். மக்களுக்கு சேவை செய்வதும், சுகாதார பணிகளை வழங்குவதும் மிகப்பெரிய பாக்கியம்.
அதில் எந்தவித அலட்சியத்துக்கோ, ஒழுக்கக் கேட்டுக்கோ இடம் இல்லை.
ஆனால் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ அதிகாரிகளாக பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அலட்சியம் காட்டியுள்ளனர். அத்துடன் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.
எனவே அந்த 17 டாக்டர்களையும் பணியில் இருந்து நீக்குமாறு சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியுள்ளார்.
துணை முதல்-மந்திரியின் இந்த உத்தரவு கிடைத்திருப்பதாகவும், அதன்படி நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.
- மாணவன் மயங்கி விழுந்ததும் ஆசிரியர் முகமது ஆசிப் தப்பி ஓடிவிட்டார்.
- சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்தனர்.
ரேபரேலி:
10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் பல் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் விடுமுறையில் செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்களை முடித்தீர்களா? என அறிவியல் பாட ஆசிரியரான முகமது ஆசிப் கேட்டுள்ளார்.
அப்போது, சில தனிப்பட்ட பிரச்சனைகளால் வீட்டுப்பாடத்தை முடிக்க முடியவில்லை என்று சிறுவன் கூறினார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் அச்சிறுவனை கட்டையால் தாக்கினார். இதில் அச்சிறுவன் மயங்கி கீழே விழுந்தார். சிறுவனின் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
மாணவன் மயங்கி விழுந்ததும் ஆசிரியர் முகமது ஆசிப் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தனர்.
அவர்கள் வந்து அச்சிறுவனை மீட்டு மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்தனர்.






