என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • மன அழுத்தத்தில் இருந்த நிஷாத், நடந்தவற்றை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
    • பெற்றோர் சமரசம் பேசி நிஷாத்துடன் வாழும் படி கூறியுள்ளனர்.

    மேகாலயாவில் நடைபெற்ற தேனிலவு கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியுடனான திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தார். இதில் தொடர்புடைய கூலிப்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இதேபோன்று ஜார்க்கண்ட், ஆந்திராவில் கூலிப்படையை ஏவி கணவனை மனைவி தீர்த்து கட்டிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, மணப்பெண்கள் பற்றிய விவரங்களை கண்டறிவதற்காக மணமகன் குடும்பத்தினர்கள் துப்பறியும் நிறுவனங்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாக துப்பறியும் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், திருமணம் முடிந்து முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். நான் அமனுக்கு சொந்தம்' என்று முக்காடுக்கு கீழே கத்தியை வைத்துக்கொண்டு மனைவி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த நிஷாத் என்பவருக்கும் சித்தாரா என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்புக்கு அடுத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளுடன் சென்ற அறைக்கு நிஷாத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    சித்தாரா, முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். நான் அமனுக்கு சொந்தம்' என்று முக்காடுக்கு கீழே கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். மேலும் அன்று இரவு முழுவதும் சித்தாரா கத்தியுடன் படுக்கையில் இருந்ததாகவும், அதிர்ச்சியில் உறைந்த நிஷாத் இரவு முழுவதும் உயிருக்கு பயந்து தூங்கவில்லை. இது தொடர்ந்து 3 நாட்களுக்கு நடந்துள்ளது.

    இதனால் மன அழுத்தத்தில் இருந்த நிஷாத், நடந்தவற்றை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சித்தாரா மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது சித்தாரா, பெற்றோர் வற்புறுத்தியதால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர் சமரசம் பேசி நிஷாத்துடன் வாழும் படி கூறியுள்ளனர். இருப்பினும் சித்தாரா, நிஷாத் வீட்டில் இருந்து சுவர்ஏறி குதித்து ஓடியுள்ளார். இதனால் நிஷாத் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக நிஷாத் கூறுகையில், நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டால், அது திருமணத்தின் அர்த்தத்தை உண்மையிலேயே புரிந்து கொண்ட ஒருவராக இருக்க வேண்டும். சித்தாரா என்னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும் என் உயிருக்கு பயந்தேன். அவள் திரும்பி வந்தால், நான் அவளுடன் மீண்டும் வாழ முடியாது என்று நினைக்கிறேன். அந்த பயம் இன்னும் நீங்கவில்லை என்றார். 

    • ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.
    • சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.

    உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுத்தையிடம் துணிச்சலுடன் போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தௌர்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.

    அப்போது மிஹிலால் என்ற 35 வயது தொழிலாளி தனது உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையுடன் கடுமையாகப் போராடினார். சிறுத்தையை கீழே தள்ளி அதன் வாயை இறுக்கமாகப் பிடிக்க முயன்றார்.

    மிஹிலால் சிறுத்தையை எதிர்கொள்வதைக் கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.

    இறுதியில் சிறுத்தை அருகிலுள்ள விவசாய வயல்களுக்குள் தப்பி ஓடியது. தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

    சிறுத்தை தாக்குதலில் மிஹிலால் மற்றும் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக, 2 நாட்களாக யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை.
    • சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மாநில அரசு நடத்தும் லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.

    அங்கு கடந்த 20-ந்தேதி, காலில் ஆபரேஷன் செய்து கொள்வதற்காக, ஒரு 15 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளை கவனித்துக் கொள்ள தாயார் வந்திருந்தார். அதே வார்டில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மோஹித் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள அவருடைய சகோதரர் ரோஹித் (வயது 20) வந்திருந்தார்.

    20-ந்தேதி இரவு, 15 வயது சிறுமி, ஆஸ்பத்திரி கழிவறைக்கு சென்றாள். அப்போது, வாலிபர் ரோஹித்தும் யாருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்தார். கழிவறையில் வைத்து சிறுமியை கற்பழித்தார். எதிர்ப்பு தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, அவர் இந்த பாதக செயலை செய்தார்.

    பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக, 2 நாட்களாக யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை.

    நேற்று முன்தினம் மாலை, தன் தாயாரிடம் இந்த கொடூரத்தை தெரிவித்தாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், வாலிபர் ரோஹித்தை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    • 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுன் தொடர்ந்து போனில் பேச்சு.
    • பின்னர் இருவரும் நெருக்கமாக்கி, திருமணம் செய்து கொண்டனர்.

    உத்தர பிரதேசத்தில் 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை, தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால், அந்த பையனின் தாயார் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஷாகீல் (வயது 55). இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. 3 பேரக்குழந்தைகள் உள்ளன.

    இவருடைய 17 வயது மகனுக்கு, 22 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் செய்யப்பட்டிருக்கிறது. மகனுக்கு 17 வயதுதான் ஆகிறது. மேலும் பண நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணத்தை தள்ளிப் போடலாம் என அந்த பையனின் தாயர் உள்ளிட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

    ஆனால் ஷாகீல், தனது 17 வயது மகனுக்கும், 22 வயது பெண்ணிற்கும் திருமணம் செய்து வைப்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ஷாகீல் வருங்கால மருமகளிடம் போனில் பேசியுள்ளார். இந்த போன் பேச்சு அதிக நேரம் நீண்டு கொண்டே சென்றுள்ளது. இருவருக்கம் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போனில் நீண்ட பேசுவதால் நிச்சயம் செய்யப்பட்ட மகனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் தந்தையின் போனை பார்க்கும்போது, வருங்கால மருமகளுக்கு சந்தேகிக்கும் வகையில் மெசேஜ் அனுப்பியதை கண்டுபிடித்துள்ளார்.

    இது தொடர்பாக குடும்பத்தினர் ஷாகீலிடம் கேட்கும்போது, மகன் திருமணம் குறித்து பேசியதாக சமாளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலைக்காக டெல்லி செல்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் ஒரு சில தினங்கள் கழித்து தனது மனைவிக்கு போன் செய்து, நம்முடைய மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்ட ஷாகீல் மனைவி கடும் அதிர்ச்சி அடைந்ததுள்ளார். மருமகளாக எங்கள் வீட்டிற்கு வர வேண்டியவள், தன்னுடைய வாழ்க்கையில் பங்கு போட்டுவிட்டாளே, என வேதனை அடைந்துள்ளார்.

    இது தொடர்பாக போலீசில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. சொந்தகாரர்கள் மூலம் இந்த மெதுவாக வெளியில் கசிந்துள்ளது. மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை, அவனது தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவனுக்குத் தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
    • வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனதில் ராம் கிலாவன் அவரது மனைவியின் மூக்கை கடித்து துப்பினார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்தவர் ராம் கிலாவன். இவர் தனது 25 வயதுடைய மனைவியுடன் சொந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் ராம் கிலாவனின் மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவனுக்குத் தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

    இதை அறிந்து கொண்ட ராம் கிலாவன் ஒரு நாள் கள்ளக்காதலன் வீட்டிற்குச் சென்ற தனது மனைவியை பின்தொடர்ந்து சென்றார். அங்கு கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த தன் மனைவியை கையும் களவுமாக பிடித்தார்.

    அப்போது அங்கே 3 பேருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனதில் ராம் கிலாவன் அவரது மனைவியின் மூக்கை கடித்து துப்பினார். மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

    காயம் அடைந்த அந்தப்பெண் வீறிட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் சம்பவம் நடந்த அந்த வீட்டை சூழ்ந்து கொண்டனர். மூக்கிலிருந்து ரத்தம் நிறைய வழிவதைப் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த ஹரியவான் போலீசார் காயமடைந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ராம் கிலாவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவலை பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்தது.
    • மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார், மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினர்.

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வருகிறார். 21 வயதான அவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் "குட்பை ஸாரி அம்மா அப்பா" என்று பதிவிட்டு இருந்தார். 16-ந்தேதி இரவில் 7.42 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த பதிவு குறித்து, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு, தொழில்நுட்ப முறையில் எச்சரிக்கை அறிவிப்பு சென்றது. உடனே அந்த நிறுவனம், அந்த பதிவு குறித்து மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவலை பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்தது.



    தகவல் கிடைத்ததும் போலீஸ் டிஜி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவலை கடத்தி இளம்பெண்ணின் தற்கொலை முயற்சியை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

    தகவல் வந்த 8 நிமிடங்களில் மில் பகுதி போலீஸ் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டை சென்றடைந்தனர். உடனே அந்த மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார், மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினர்.

    "மாணவியும், அவரது பெற்றோரும் இந்த விஷயத்தில் அமைதி காப்பதாகவும் சுமூக முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர். மாணவியின் தற்கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது" என்று போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த 12-ந் தேதி டியோரியா மாவட்டத்தில் ஒரு வாலிபரின் தற்கொலை முயற்சி இதே பாணியில் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நல்ல வேளை நான் இன்னொரு ராஜா ரகுவன்ஷியாக மாறுவதிலிருந்து தப்பித்தேன்.
    • இப்போது நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

    மேகாலயாவில் தேன்நிலவு கொண்டாட சென்ற ராஜா ரகுவன்ஷி என்ற வாலிபர், தனது மனைவியின் காதலன் மற்றும் அவரது கூலிப்படையினரால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தேன்நிலவு கொலையிலிருந்து தப்பியதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேசம் மாநிலம் படாவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில். சுனிலுக்கும் குஷ்பூ என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற மணமகள் குஷ்பூ, அங்கு 9 நாட்கள் அங்கு தங்கி இருந்துவிட்டு மீண்டும் கணவருடன் தனது தாய் வீட்டுக்கு திரும்பினார். தனது தாய் வீட்டிற்கு வந்த குஷ்பூ, தனது காதலனுடன் ஓட்டும் பிடித்துள்ளார்.

    சுனில் அளித்த புகாரின் பேரில் காணாமல் போன குஷ்பூவை போலீசார் தேடிவந்த வேளையில், கடந்த திங்கட்கிழமை வேறொரு வாலிபருடன் திடீரென்று காவல் நிலையத்துக்கு வந்த குஷ்பூ, "என்னுடைய கணவருடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. நான் ஏற்கனவே காதலித்து வந்த இவருடன்தான் இனிமேல் வாழப் போகிறேன்" என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    இதற்கு சுனில் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மனைவி அவரின் காதலுடன் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார்.

    காதலடன் அனுப்பி வைத்ததற்கான காரணத்தை சுனில் விவரித்துள்ளார்.

    அவர் வீட்டில் இருந்து சென்ற பிறகு இமையமலை அடிவார நகரமான நைனிடாலுக்கு ஹினிமூன் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவருடைய காதலனுடன் செல்ல விரும்புகிறார். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    நல்ல வேளை நான் இன்னொரு ராஜா ரகுவன்ஷியாக மாறுவதிலிருந்து தப்பித்தேன். இப்போது நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என் வாழ்க்கை அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது என சுனில் தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் இருவரும் சேர்ந்து படித்து வந்தோம்.
    • மகனுடன் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பதில் பெருமையாக உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள உதய ராம்பூர் நாக்லா கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் (வயது45). முன்னாள் ராணுவ வீரர்.

    இவர் கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று டெல்லியில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். யஷ்பாலின் மூத்த மகன் ஷேகர் (21) இவர் கடந்த 2½ ஆண்டுகளாக போலீஸ் வேலைக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். மகனின் ஈடுபாட்டை பார்த்து தானும் போலீஸ் வேலைக்கு படித்தால் என்ன என்று, தந்தை யஷ்பாலும் போலீஸ் வேலைக்கு தன்னை தயார் செய்ய தொடங்கினார்.

    எஸ்.சி. பிரிவின் கீழ் வயது தளர்வு பெற்று, மேலும் முன்னாள் ராணுவ வீரராக இருந்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கான மறு ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வில் பங்கேற்கவும் அனுமதி பெற்றார்.

    இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் போலீஸ் வேலைக்கு 60 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான தேர்வும் நடந்தது. இந்த தேர்வை தந்தை யஷ்பாலும், மகன் ஷேகரும் எழுதினர். தேர்வு முடிவுகள் தந்தை மகன் இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சியை தந்தது. தேர்வில் இருவரும் வெற்றி பெற்றனர். இது அந்த கிராமத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பணி ஆணையை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரிடமிருந்து இருவரும் பெற்றனர்.

    இதுகுறித்து தந்தை யஷ்பால் கூறியதாவது:-

    கடந்த 2½ ஆண்டாக என் மகனுடன் சேர்ந்து போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தேன். டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் இருவரும் சேர்ந்து படித்து வந்தோம்.

    அன்றாடம் நூலகத்திற்கு நானும் மகனும் சேர்ந்தே சென்று எங்களை தயார் படுத்தினோம். ஆனால் நாங்கள் தந்தை மகன் என்று யாருக்கும் தெரியாது. தேர்வு எழுதுவதற்கு முன்பாக போலீஸ் சூப்பிரண்டு ஞானஜெய் சிங்கிடம் வாழ்த்து பெற சென்ற போது அவரிடம் உண்மையை சொன்னேன்.

    தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது எல்லோருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என அவர் எங்களை ஊக்குவித்தார். நானும் மகனும் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மகனுடன் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பதில் பெருமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பெண் ஒருவர் பைக் எஞ்சினில் அமர்ந்துகொண்டு இளைஞரை இறுக்கமாக கட்டிபிடித்தபடியே பயணம் செய்துள்ளார்.
    • இந்த காதல் ஜோடி ஹெல்மெட் கூட அணியவில்லை.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காதல் ஜோடி பைக்கில் ஆபத்தான பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்ட, பெண் ஒருவர் பைக் எஞ்சினில் அமர்ந்து கொண்டு இளைஞரை இறுக்கமாக கட்டிபிடித்தபடியே பயணம் செய்துள்ளார். இந்த காதல் ஜோடி ஹெல்மெட் கூட அணியவில்லை.

    இதனை அவ்வழியே காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தது.

    இதனையடுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் ரூ.53,500 அபராதம் விதித்தனர் . அபராத செலானை நொய்டா போக்குவரத்து போலீசார் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

    • வருகிற நவம்பர் மாதம் 29-ந்தேதி இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • காதலி தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்த சன்னி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்சலாலின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சன்னி. இவர் அங்கு செல்போன் பழுதுபார்க்கும் கடை மற்றும் ஆபரண கடை வைத்துள்ளார்.

    அதே பகுதியில் வாடகைக்கு வீடு பார்க்க சென்றபோது பிரியங்கா மாதேசியா (வயது 23) என்ற இளம் பெண்ணை கண்டார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து போனது.

    அடிக்கடி பார்வையால் சந்தித்தனர். நெருங்கி பழக ஆரம்பித்தனர். இது காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இது பற்றி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது வருகிற நவம்பர் மாதம் 29-ந்தேதி இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சன்னி மற்றும் பிரியங்கா நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த பிரியங்கா மாதேசியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் அவருடைய உடலை சவப்பெட்டியில் வைத்திருந்தனர்.

    காதலி தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்த சன்னி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    பிரியங்கா மாதேசியாவின் உடலை பார்த்து கதறி அழுது துடித்தார். மேலும் அவளை தனது மனைவியாக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினரிடம் கூறினார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து உள்ளூர் பூசாரி வரவழைக்கப்பட்டார்.அவர் திருமணத்திற்கான மந்திரங்களை ஓதினார். அப்போது சன்னி, பிரியங்கா மாதேசியாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மாலை போட்டு திருமணம் செய்து கொண்டார்.

    மேலும் சவப்பெட்டியை 7 முறை வலம் வந்து திருமண சடங்குகளை செய்தார். தொடர்ந்து காதலியின் பிணத்தின் அருகிலேயே அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார். இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    இந்த காட்சிகள் மனதை உருக்குவதாக இருந்தது. தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    நான் பிரியங்காவை மிகவும் நேசித்தேன். நாங்கள் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தோம். அவள் இப்போது இல்லை என்றாலும் அவள் என் மனைவியாக வேண்டுமெனறு ஆசைப்பட்டேன்.

    அதனால் அவரது பிணத்துக்கு குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • இஷான் கானுக்கும் ரஜ்னீஷ் குமார் என்ற பம்ப் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • அரிபா கான் ஒரு துப்பாக்கியை எடுத்து ஊழியரின் மார்பில் நேரடியாக குறிவைக்கிறார்.

    உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தனது தந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, பெண் ஒருவர் பெட்ரோல் பங்க ஊழியர் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

    ஷாஹாபாத்தில் வசிக்கும் இஷான் கான், தனது மனைவி மற்றும் மகள் அரிபா கானுடன் பெட்ரோல் பங்கிற்கு தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்துள்ளார்.

    சிஎன்ஜி நிரப்பும் போது, இஷான் கானுக்கும் ரஜ்னீஷ் குமார் என்ற பம்ப் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஊழியர் இஷானை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இது கேமராவில் பதிவாகியுள்ளது.

    தனது தந்தை தள்ளப்படுவதைக் கண்டு கோபமடைந்த அவரது மகள், காரை நோக்கி ஓடிச் சென்று, ஒரு துப்பாக்கியை எடுத்து ஊழியரின் மார்பில் நேரடியாக குறிவைக்கிறார். பின்னர் அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை சமாதானப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க ஊழியர் ரஜ்னீஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இஷான் கான், அவரது மனைவி ஹுஸ்பானோ மற்றும் மகள் அரிபா கான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். 

    • பாம்பை தோளில் போட்டுக்கொண்டு, புகை பிடித்தபடி ரீல்ஸ் எடுத்தார்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.

    'ரீல்ஸ்' எனும் குறு வீடியோ மோகத்தால், சாகசத்தில் ஈடுபட முயன்று பலர் தங்கள் இன்னுயிரை இழப்பது வாடிக்கையாகி வருகிறது. அதுபோல் இங்கு ஒருவர் பாம்பிடம் கடிவாங்கி சிக்கலில் மாட்டியுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹைபத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். விவசாயி. இவர் பாம்பு பிடிப்பதிலும் கைதேர்ந்தவர்.

    இந்தநிலையில் அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் விஷ பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாகவும், அதை பிடித்துக் கொடுக்கும் படியும் ஜிதேந்திர குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற அவர், அந்த வீட்டின் சுவரில் இருந்த பொந்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தார்.

    இதையடுத்து அந்த பாம்பை தனது தோளில் மாலை போல் போட்டு போஸ் கொடுத்தார். அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆரவார கூச்சலிட்டனர். அப்போது அவருக்கு, ஊர் மக்கள் மத்தியில் வீர சாகசம் நடத்தி அதை 'ரீல்ஸ்'ஆக வெளியிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

    நடக்கப்போகும் விபரீதம் பற்றி அறியாமல், பாம்புக்கு முத்தமிட முயன்றார் ஜிதேந்திர குமார். அப்போது அவரது நாக்கில் பாம்பு கடித்துவிட்டது.

    இதனால் உடலில் விஷம் ஏறிய அவரது உடல்நிலை மோசமாகியது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறும்போது, ஜிதேந்திர குமார் மதுபோதையில் இருந்தார். பாம்பை தோளில் போட்டுக்கொண்டு, புகை பிடித்தபடி ரீல்ஸ் எடுத்தார். பின்னர் நாங்கள் வேண்டாம் என்று கூறியபோதும், பாம்புக்கு முத்தம் கொடுக்கும் ரீல்ஸ் வெளியிடுகிறேன் என்று கூறி முத்தமிட முயன்றவரை பாம்பு கடித்துவிட்டது என்று கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.



    ×