என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • குடிபோதைக்கு அடிமையான தந்தை இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • மனைவி புகார் கொடுக்க போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

    குடிபோதைக்கு அடிமையான தந்தை, தனது 13 வயது மற்றும் 15 வயது மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் காலிலாபாத் கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொண்ட குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தின் கணவன் குடிப்பழக்கத்திற்க அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. தினந்தோறும் குடிபோதையில்தான் வீட்டிற்கு வருவார்.

    நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மாடியில 2ஆவது மகள் (வயது 13) தூங்கிக் கொண்டிருந்தார். போதையில் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது தந்தையே வாழ்க்கையை சீரழித்து விட்டாரே, இதை எப்படி வெளியில் சொல்வது என பயந்து, மறைத்துள்ளார்.

    ஆனால், அதை சாதகமாக்கிக் கொண்ட கொடூர தந்தை, அடுத்த நாள் (நேற்று) குடிபோதையில் வந்து மூத்த மகளை (வயது) பாலியல் வன்கொடுமை செய்துள்ளா். இது அவரது மனைவிக்கு தெரியவர, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் அந்த கொடூர தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    • நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம்.
    • வீடியோவில் உள்ள அந்த பெண் இயக்கும் ஷாலினி பாண்டே என்பது தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு பெண் நெடுஞ்சாலையின் நடுவில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக கான்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் பாடலுக்கு அந்த பெண் நடனமாடி உள்ளார்.

    பொது இடத்தில் ஆயுதத்தை காட்டி நடனமாடும் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன.

    இதுதொடர்பாக எக்ஸ் தள பயனர் ஒருவர், நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம் என்றும் தயவுசெய்து உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளார்.

    ஒரு பயனர், அந்த நபர்களது துப்பாக்கிக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்எஸ்பி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இதற்கு பதிலளித்த கன்னாஜ் காவல்துறை, இந்த விஷயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் கான்பூர் நகரில் வசிப்பவர் என்றும், அவர் கான்பூர் நகர் மாவட்டப் பகுதிக்குள் இந்த வீடியோவை எடுத்து இருப்பதாகவும் இது தொடர்பாக கான்பூர் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    அந்த பெண் இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கும் ஷாலினி பாண்டே என்றும், அவருக்கு 60,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது கணக்கில் 2,550க்கும் மேற்பட்ட முறை பதிவிட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

    முன்னதாக, "லக்னோ ராணி" என்று அழைக்கப்படும் சமூக ஊடகத்தில் பிரபலமான சிம்ரன் யாதவ், லக்னோவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவிற்காக துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ மூலம் வைரலானார். வைரலான அந்த வீடியோவில், அவர் துப்பாக்கியை அசைத்துக்கொண்டே போஜ்புரி பாடலுக்கு நடனமாடுவது காட்டப்பட்டது. லக்னோ காவல்துறை இந்த வீடியோவை கவனித்து, தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்த வழக்கில் அவர் வாக்குமூலம் அளிக்கவிருந்தபோது இந்தக் கொலை நடந்துள்ளது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பீம் ஆர்மி ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

    உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் (Ballia) 12 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வீட்டிற்குள் தூக்கிலிடப்பட்டார்.

    கொலை செய்யப்பட்ட சிறுமி, உறவினரான மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார். இந்த வழக்கில் அவர் வாக்குமூலம் அளிக்கவிருந்தபோது இந்தக் கொலை நடந்துள்ளது.

    முதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் தலைமையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    பல்லியா, துட்டுவரி கிராமத்தில் சனிக்கிழமை மாலையில் குடும்பத்தினர் வேலையிலிருந்து வீட்டிற்கு திரும்பியபோது சிறுமி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாள்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம், சிறுமியின் உறவினரான ஒரு பெண், பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமி ஒரு சாட்சியாக இருந்தார். நான்கு அண்டை வீட்டார் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் கொலைக்கு தலைமை தாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது.

    முதல் வழக்கில் குழந்தை வாக்குமூலம் அளிப்பதைத் தடுக்கவே அந்தக் குழந்தை கொல்லப்பட்டதாகவும், அதைத் தற்கொலை போலக் காட்டுவதற்காகவே தூக்கிலிடப்பட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பீம் ஆர்மி ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவார் என்ற உறுதிமொழியுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    முதல் வழக்கு குற்றவாளி உட்பட சிறுமியின் அண்டை வீட்டாரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருவதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். 

    • பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி அதிகமானது.
    • ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி ரெயில் நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ராணுவ மருத்துவர் மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா, ஹேர் கிளிப் மற்றும் பாக்கெட் கத்தி உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.

    பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி அதிகமானது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.

    சிகிச்சைக்கான சரியான கருவிகள் இல்லாத நிலையில், தொப்புள் கொடியை இறுக்க ஹேர் கிளிப்பையும், வெட்ட பாக்கெட் கத்தியையும் பயன்படுத்தியதாக மேஜர் பச்வாலா தெரிவித்தார்.

    இதன் பின் தாய் மற்றும் குழந்தை இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த அவசரச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த பிறகு, மேஜர் பச்வாலா தனது அடுத்த ரெயிலை பிடித்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். மருத்துவர்களாக, நாங்கள் எப்போதும் அவசரகால சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • பள்ளிக்கு சென்ற போது கான்ஸ்டபிள் கடத்தி சென்றுள்ளார்.
    • நீண்ட நேரம் வீட்டிற்கு திரும்பாததால், குடும்பத்தினர் தேடும்போது கான்ஸ்டபிள் பிடிபட்டார்.

    பாதுகாப்பு வழங்கக் கூடிய போலீஸ் கான்ஸ்பிடபிள், 11ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

    நவப்கஞ்ச் என்ற இடத்தில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளிக்கு செல்லும் வழியில் போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் என்பவர், அந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பள்ளிக்கு சென்ற பெண் நீண்ட நேரம் வீட்டிற்கு திரும்பாததால், உறவினர்கள் மாணவியை தேட ஆரம்பித்துள்ளனர். அப்போதுதான் மாணவியின் தந்தை, கான்ஸ்டபிள் காரில் தனது மகளை பார்த்துள்ளார். உடனடியான மகளை மீட்டு, கான்ஸ்டபிளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைந்துள்ளார்.

    கான்ஸ்டபிள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தன் வீட்டிற்கு வந்து வாழுமாறு பூனம் தேவியிடம் கணவர் ஜக்தீப் சிங் வற்புறுத்தியுள்ளார்.
    • அக்கம்பக்கத்தினர் ஜக்தீப் சிங்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தனது மனைவி தனது வீட்டிற்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜக்தீப் சிங் (42) மற்றும் அவரது மனைவி பூனம் தேவி ஆகியோர் 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பூனம் தேவி அவரது தாய், தனத்தையுடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், மீண்டும் தன் வீட்டிற்கு வந்து வாழுமாறு பூனம் தேவியிடம் கணவர் ஜக்தீப் சிங் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பூனம் தேவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜக்தீப் சிங் தனது மாமனார் அனந்த்ராம் (80) மற்றும் மாமியார் ஆஷா தேவி (75) ஆகியோரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது தனது கணவரை தடுக்க பூனம் தேவி முயன்றுள்ளார். கோவத்தில் இருந்து ஜக்தீப் சிங் மனைவியையும் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    பூனம் தேவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஜக்தீப் சிங்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    • கபடி வீரர் கால்வாயில் இருந்து நாய்க் குட்டியை காப்பாற்றினார்.
    • நாய்க்குட்டி கடித்ததில் அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    உத்தரபிரதேசத்தில் மாநில அளவிலான கபடி வீரர் ப்ரஜேஸ் சோலாங்கி ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மாதம் ப்ரஜேஸ் சோலாங்கி கால்வாயில் இருந்து ஒரு நாய்க் குட்டியை காப்பாற்றியுள்ளார். அப்போது நாய்க்குட்டி கடித்ததில் அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ரேபிஸ் தடுப்பூசி போடாமலும் இருந்த அவர் தொற்று முற்றிய நிலையில் படுக்கையில் துடிதுடித்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு மைத்துனர்களுடன் குடும்பம் நடத்திய மனைவி.
    • நிலத்தை விற்க மாமியார் எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை செய்து, நகை கொள்ளையடிப்பு.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் 54 வயது பெண் கொலை செய்யப்பட்டு, தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மருமகளின் குட்டு அம்பலமாகியுள்ளது.

    ஜான்சியில் உள்ள கும்ஹாரியா கிராமத்தில் சுஷிலா தேவி என்ற பெண் வசித்து வந்தார். இவர் கணவரை இழந்தவர். இவர் கடந்த ஜூன் 24ஆம் தேதி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அத்துடன் வீட்டில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இதனால் போலீசார் கொள்ளையை தடுக்க முயன்றபோது, சுஷிலா தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில்தான் அனில் வர்மா என்பவர் நகையை விற்பனை செய்ய முயற்சித்தபோது போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது அனில் வர்மா துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசாருக்கு பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்தனர்.

    இதற்கிடையே சுஷிலா தேவியின் மருமகன் பூஜா அதே வீட்டில் வசித்து வந்தார். அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல் வெளியானது.

    சுஷிலா தேவியின் மூத்த மகனின் மனைவிதான் பூஜா. கணவன் இறந்த பிறகு, கணவரின் தம்பி கல்யாண் சிங் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கல்யாண் சிங்கும் மரணமடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, உறவின்முறை மாமனார் மற்றும் மற்றொரு மைத்துனர் சந்தோஷ் ஆகியோர் பூஜாவை பூர்வீக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

    அங்கு வந்த பூஜா, மைத்துனரான சந்தோஷ் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். சந்தோஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர். சந்தோஷ் உடனான தொடர்பால் பூஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு சந்தோஷின் சட்டப்பூர்வ மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 9 மாதங்களாக அவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    சுஷிலா தேவியின் மூன்று மகன்களுக்கும் மனைவியானதால், வீட்டுத் தலைவி அந்தஸ்தை பிடித்துள்ளார். அத்துடன் கணவர் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். கணவர் குடும்பத்தினருக்கு சுமார் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. அவருக்கு இதில் பாதி நிலம் என்பதை வலியுறுத்தி அதை விற்பனை செய்து விட்டு குவாலியருக்கு செல்ல முடிவு செய்துள்ளார். சந்தோஷ் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சுஷிலா தேவி ஒப்புக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து மாமியார் சுஷிலா தேவியை கொலை செய்ய பூஜா முடிவு செய்துள்ளார். அதன்படி திட்டம் தீட்டியுள்ளார். தனது சகோதரி மற்றும் சகோதரியின் காதலன் (அனில் வர்மா) ஆகியோர் உதவியுடன் சுஷிலா தேவியை கொலை செய்து, நகை கொள்ளை அடிக்கப்பட்டதாக நாடகமாடியுள்ளனர்.

    போலீசாரின் விசாரணையில் குற்றத்தை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார். பூஜாவும், அவரது சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட அனில் வர்மா மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பூஜா கொலையில் ஈடுபட்டடு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கணவன் மற்றும் கணவரின் தம்பி மரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

    • சிறுமியை தாக்கி, சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
    • சிறுமியின் தந்தை கடந்த மாதம் 27-ந்தேதி அன்று ஒரு எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் காவல்துறையினர் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 சமோசாவை லஞ்சமாக பெற்ற காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை சிறப்பு போச்சோ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் வருவதை அறிந்த வீரேஷ், சிறுமியை தாக்கி, சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

    இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்ற சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் பாரபட்சமாக நடந்து கொண்டது மட்டுமின்றி FIR பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டிய கட்டாயம் சிறுமியின் தந்தைக்கு ஏற்பட்டது.

    குற்றச்சாட்டுக்கு தீவிரத்தன்மை இருந்தபோதிலும், ஆதாரங்கள் இல்லை என்று கூறி, டிசம்பர் 30, 2024 அன்று காவல்துறை இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களைப்பதிவு செய்யத் தவறிவிட்டதாகவும், பாலியல் வன்கொடுமை குறித்த சிறுமியின் வாக்குமூலத்தை புறக்கணித்ததாகவும் சுட்டிக்காட்டி, அச்சிறுமியின் தந்தை கடந்த மாதம் 27-ந்தேதி அன்று ஒரு எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இம்மனுவில் முக்கிய கவனத்தை ஈர்த்தது என்னவென்றால், விசாரணை அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவரின் கடையில் இருந்து ஆறு சமோசாக்களை லஞ்சமாக வாங்கி, பின்னர் தவறான மற்றும் அலட்சியமான அறிக்கையை தாக்கல் செய்ததாகக் கூறப்பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக, சிறுமி கடனுக்கு சமோசா கேட்டதாகவும், மறுத்ததால், பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்கைப் பதிவு செய்ததாகவும் எஃப்.ஆரில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து விசாரணை அதிகாரி தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ரத்து செய்த நீதிமன்றம், வழக்கை இப்போது புகாராக தொடர உத்தரவிட்டது.

    • குழந்தையின் தாய் வீட்டில் பானிபூரி தயாரிக்க பட்டாணி சமைத்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
    • குழந்தையின் மரணம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

    உத்தரப்பிரதேசத்தில் கொதிக்கும் மீன் குழம்பில் விழுந்து ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெயர் பிரியா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரியாவின் சகோதரி பருப்பை சமைத்துக்கொண்டிருந்த ஒரு பாத்திரத்தில் விழுந்து இறந்தாள். இந்நிலையில் அதே முறையில் பிரியாவும் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தையின் தந்தை ஒரு தெரு வியாபாரி. குழந்தையின் தாய் வீட்டில் பானிபூரி தயாரிக்க பட்டாணி சமைத்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

    விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அடுத்த அறைக்குச் சென்றபோது, பானையில் விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு, தாய் வந்து, பானையில் விழுந்த குழந்தையைக் கண்டார். குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, ஆனால் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான குழந்தை சிகிச்சையின் போது இறந்தது.

    குழந்தையின் மரணம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், போலீசார் வீட்டிற்கு வந்தபோது இறுதிச் சடங்குகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. அது ஒரு விபத்து மரணம் தான் என போலீசார் உறுதிப்படுத்தினர்.

    • ஷதாப் (19) என்ற இளைஞர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
    • ஷாதாப்பை கொன்று அவரது ஐபோனை திருடியதாக சிறுவர்கள் தெரிவித்தனர்.

    அதிக லைக்குகள் பெற தரமான ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட 2 சிறுவர்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூருவில் வசித்து வரும் ஷதாப் (19) என்ற இளைஞர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் ஜூன் 21 ஆம் தேதி ஷதாப் காணாமலே போயுள்ளார்.

    அவரது உடல் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கொய்யா பழத்தோட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. ஷாதாப்பின் கழுத்து கத்தியால் வெட்டப்பட்டு, அவரது தலையில் செங்கல்லால் தாக்கப்பட்டிருந்தது.

    இந்த கொலை வழக்கை விசாரித்த போலீசார் 4 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறார்களைக் கைது செய்தனர். விசாரணையில் 2 சிறார்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க உயர்தர மொபைல் போன் தேவை என்பதால் ஷாதாப்பை கொன்று அவரது ஐபோனை திருடியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஷாதாப்பின் ஐபோன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் செங்கல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    • கச்சேரியில் நடனமாடும் பெண்ணை திருமணம் செய்தது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.
    • 3 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியபோது, அடித்துக் கொலை செய்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கச்சேரி நிகழ்ச்சியில் நடனமாடும் (Stage Dancer) பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு வருடத்திற்குப் பிறகு சொந்த ஊர் திரும்பியபோது தாய், தங்கைகள் உள்பட குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் (வயது 30). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு கச்சேரியில் நடனமாடும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் முக்கியமாக தாய் மீரா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் மனைவியுடன் அமித் டெல்லிக்கு சென்றுள்ளார். சுமார் 3 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போதும் அமித் மீது அவரது தாயின் கோபம் தீரவில்லை.

    வீட்டிற்கு வந்ததும் அமித் உடன் தாய் மீரா, சகோதரிகள், சகோதரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இரும்பு கம்பி, கட்டைகள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அமித் படுகாயம் அடைந்தார். அமித்தை காப்பாற்ற முயன்றபோது அவரது மனைவியையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அமித் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி, சிகிச்சை பெற்று வருகிறார். அமித் மனைவின் புகார் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ×