என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் மரணம்"

    • இந்த ஜோடி தங்களது திருமணத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
    • சங்ருராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இறுதிச்சடங்குகளை உறவினர்கள் நிறுத்தினர்.

    75 வயதான முதியவர் ஒரு வருட தனிமைக்கு பிறகு தனது வயதில் பாதி வயதுக்கும் குறைவான பெண்ணை மணந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    75 வயதான சங்ருராம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவியை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். சங்ருராமுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் விவசாயம் செய்து தன்னை காப்பாற்றி வந்துள்ளார்.

    இந்த நிலையில், தான் கடந்த 29-ந்தேதி ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணை மணந்தார். இந்த ஜோடி தங்களது திருமணத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.

    இவர்களின் திருமணத்திற்கு முதியவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மறுமணம் முடிந்த மறுநாள் காலையில் திடீரென சங்ருராம் உயிரிழந்துள்ளார். இதனால் சங்ருராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இறுதிச்சடங்குகளை உறவினர்கள் நிறுத்தினர். மேலும் திடீர் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

    • திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்து விசாரித்ததில் அவர் மீஞ்சூர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தவர் என்பது தெரிந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • ஒன்றரை வருடங்களாக சவாராபாரியின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை.
    • ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் சாப்பாட்டுக்கு வழியின்றி கடைசியாக பட்டினியால் இறந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மெலியபுட்டி மண்டலம் பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவரா பாரி (வயது 86).மாமிடிகுட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

    இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாமல் தனிமையில் வசித்து வந்தார்.அரசு வழங்கிய முதியோர் உதவி தொகை மூலம் பிழப்பை நடத்தி வயிற்று பசியை போக்கி வந்தார்.

    இந்த நிலையில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் புதிய முறை கொண்டுவரப்பட்டது இதில் கைரேகை இல்லை என்ற காரணத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு முதியோர் உதவி தொகை வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தினர்.

    இதனால் வருமானம் இன்றி வாழ வழி இன்றி சவேரா பாரி தவித்தார். அவரை உயர் அதிகாரிகளிடம் பலமுறை அழைத்துச் சென்றும் நீதி கிடைக்கவில்லை. பல முறை முயற்சித்தும் தீர்வு கிடைக்கவில்லை.

    மெலியபுட்டி மண்டலம் நெலபொன் துலோ தெக்காளி சப்-கலெக்டர் ராகுல்க்குமார ரெட்டி சிறப்பு முகாம் நடத்தினார்.அப்போது உடல் நலம் குன்றிய முதியவர் என்று முறையிட்டாலும், கண்பார்வை பாதிக்கப்பட்டதாகச் சொல்லியும், கருணை காட்டவில்லை. ஒன்றரை வருடங்களாக சவாராபாரியின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை.

    ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் சாப்பாட்டுக்கு வழியின்றி கடைசியாக நேற்று காலை பட்டினியால் இறந்தார்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த 14-ந்தேதி அங்கமாலி பகுதியில் சாலையோர நடைபாதையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • அந்தோணி என்று நினைத்து புதைக்கப்பட்டது யார்? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் ஆலுவா சுணங்கம்வெளி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது68). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் பெரும்பாலும் குடும்பத்தினருடன் வீட்டில் இருப்பதில்லை.

    மாறாக சாலையோரத்தில் உள்ள பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்திருக்கிறார். எப்போதாவது வீட்டுக்கு சென்று வந்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி அங்கமாலி பகுதியில் சாலையோர நடைபாதையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    அந்த முதியவரின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர் யார்? என்று விசாரணை நடத்தினர். ரோட்டோரத்தில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் ஆந்தோணியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த முதியவரின் உடலை பார்த்தனர்.

    மேலும் அந்த முதியவர் அந்தோணி என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த முதியவரின் உடலை அந்தோணியின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்குகளை செய்தனர். பின்பு ஆலுவாலில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லறை தோட்டத்தில் முதியவரின் உடலை புதைத்தனர்.

    முதயவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அந்தோணியின் குடும்பத்தினர் மற்றும் உளவினர்கள் 7-ம் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் அந்தோணி ஆலுவா சுணங்கம்வெளிக்கு வந்தார். இறந்ததாக கருதப்பட்ட அண்தோணி தங்களின் முன்பு உயிருடன் வந்ததை பார்த்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்படியென்றால் அந்தோணி என்று நினைத்து புதைக்கப்பட்டது யார்? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. இறந்ததாக கருதப்பட்ட அந்தோணி உயிரோடு வந்திருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இறந்தது அந்தோணி இல்லை என்பதும், வேறு நபரின் உடலை அந்தோணி என்று நினைத்து வழங்கியதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தோணி என்று புதைக்கப்பட்ட முதியவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
    • போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தில், குழிபிறை கிராமத்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு குழிப்பிறை கிராமத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.

    பேருந்தில் பயணித்துள்ள சக பயணிகள் முதியவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவரின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் அசைவு ஏற்படவில்லை. இதனால் பேருந்தின் டிரைவர் சந்திரசேகரனும், கண்டக்டர் சுந்தரும், மருத்துவமனை செல்ல முடிவு செய்து பேருந்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அருகில் இருந்த வெங்கமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் அவரை பரிசோதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது செந்துறையை சேர்ந்த தனசாமி என்பவரின் மகன் ஆரோக்கியராஜ் என்பதும், குழிப்பிறையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு, பேருந்தில் வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டதும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
    • துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜிசிகடம், சுதம்பேட்டையை சேர்ந்தவர் அப்பாராவ் (வயது 85). வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவால் அவதி அடைந்து வந்தார்.

    அப்பாராவை அவரது உறவினர்கள் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    நீண்ட நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அப்பாராவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதனால் டாக்டர்கள் அப்பாராவை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

    இதையடுத்து அப்பாராவை அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். வரும் வழியில் அவரது உடல் அசையவில்லை. அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் நினைத்தனர். இது குறித்து வரும் வெளியிலேயே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

    அப்பாராவின் உடலை கழுவி சுத்தம் செய்து சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக அவரது உடலை பாடையில் தூக்கி வைத்தனர். அதனை தூக்கி சென்றனர்.

    அப்போது அப்பாராவ் திடீரென கண் திறந்து, கால்களை அசைத்தபடி எழுந்து உட்கார்ந்தார்.

    இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தினசரி பகல் நேர பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு இருக்கிறது.
    • ரெயில் பெட்டியில் முதியவர் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தினசரி பகல் நேர பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ரெயில் காலை 7.05 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இன்று காலையும் ரெயில் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது.

    அப்போது சுமார் 72 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். அதனை பார்த்த சக பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.அப்போது மயங்கி விழுந்த முதியவர் இறந்து விட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் இறந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் (வயது 72) என்பதும், இவர் சாமி தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நாகர்கோவிலில் ரெயில் பெட்டியில் முதியவர் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×