என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிவ் இன் டுகதர்"

    • இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன.
    • கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது.

    உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீத், ஜனநாயக் சந்திரசேகர் விஸ்வவித்யாலயா மற்றும் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இளம் பெண்கள் லிவ் இன் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். லிவ்-இன் உறவுகளின் விளைவை பார்க்க விரும்பினால், அனாதை இல்லங்களை பாருங்கள். அங்கு 15-20 வயது சிறுமிகள் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்.

    இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன. ஆனால், அதிலிருந்து விலகி இருங்கள். பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.

    பெண்கள் தங்கள் கல்வி மற்றும் சிறந்த குறிக்கோள்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தாய்வழி குடும்பங்களோ அல்லது மாமியாரோ பின்னர் அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    இளைஞர்களிடையே போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் கல்விப்பட்டங்களுடன் கடமை உணர்வையும் தேசியப் பொறுப்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது. சரியான நேரத்தில் தேர்வுகள் மற்றும் வகுப்புகளில் 75% வருகையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

    சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பேசிய ஆனந்திபென் படேல், இயற்கை விவசாயத்தை பின்பற்றவும், தூய்மையை மேம்படுத்தவும், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க ஆராய்ச்சி நடத்தவும் மாணவர்களை வலியுறுத்தினார்.

    • சுமார் 10 மாதங்களுக்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
    • கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவரின் உதவியை நாடினார்.

    உத்தரப் பிரதேசத்தில் தனது காதலியைக் கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

    வாட்ஸ்அப்பில் வைத்த ஒரு செல்ஃபி ஸ்டேட்டஸ் மூலம் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

    கான்பூரில் 22 வயதான சூரஜ் குமார் உத்தம், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 20 வயதுடைய உணவக ஊழியரான அகன்க்ஷாவை சந்தித்தார்.

    சுமார் 10 மாதங்களுக்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், ஜூலை 21-ஆம் தேதி சூரஜிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அகன்க்ஷா கண்டுபிடித்தார்.

    இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

    கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவரின் உதவியை நாடினார்.

    இருவரும் சேர்ந்து அகன்க்ஷாவின் உடலை ஒரு கருப்பு சூட்கேஸில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள சிலாக்காட்டில் உள்ள யமுனை நதியில் வீசியுள்ளனர்.

    இந்த கொடூரமான செயலை செய்த பிறகு, ஆற்றுப் படுக்கையில் சூட்கேஸுடன் சூரஜ் ஒரு செல்ஃபி எடுத்து, அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

    அகன்க்ஷாவை ஜூலை 22 முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதற்கிடையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சூரஜ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவந்தது.

    இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, ஆற்றில் வீசப்பட்ட அகன்க்ஷாவின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • 53 வயது நபர் ஒருவர் 57 வயது பெண்ணுடன் லிவ் இன் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
    • பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை 3 நாட்களாக வீட்டிலேயே அந்த நபர் வைத்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், இறந்த தனது லிவ் இன் டுகதர் பாட்னர் உடலை புதைக்க இடம் கிடைக்காததால் சாலையில் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் 53 வயது நபர் ஒருவர் 57 வயது பெண்ணுடன் லிவ் இன் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் (திருமணம் சசெய்துகொள்ளாமல் சேர்நது வாழும் முறை) கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

     

     

    இதற்கிடையில் பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை 3 நாட்களாக வீட்டிலேயே அந்த நபர் வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வீட்டில் ஏதோ மோசமான வாடை வருவதாக அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் உடலை சாக்கில் கட்டி சாந்தன் நகரில் உள்ள சாலையில் விட்டுச்சென்றுள்ளார்.

     

    தகவலறிந்து வந்து உடலைக் கைப்பற்றிய போலீஸார் அந்த நபரைத் தேடி வந்தனர். ராஜ்மோஹல்லா பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அலைந்துகொண்டிருந்த அவரிடம் விசாரித்ததில் இறுதிச் சடங்கு இல்லாததால் உடலை சாலையில் வீட்டுச் சென்றதாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.

    அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவறாக பூங்காவாக அலைந்து கொண்டிருந்ததாக போலீஸார் தெறிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்து பார்த்தபோது அவர் கல்லீரல் தொடர்பான நோயினால் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணின் உடலுக்கு உரிய முறையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. 

    ×