என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • மயக்கம் தெளிந்தபோது தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தப்பெண் உணர்ந்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரி ஊழியர் யோகேஷ் பாண்டேவை கைது செய்தனர்.

    உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி எனக்கூறி, யோகேஷ் பாண்டே என்ற ஊழியர் மயக்க ஊசி போட்டுள்ளார்.

    இதனால் மயக்கமடைந்த அந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டார். பின்னர் மயக்கம் தெளிந்தபோது தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தப்பெண் உணர்ந்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரி ஊழியர் யோகேஷ் பாண்டேவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    நோய்க்கு சிகிச்சை பெறச் சென்ற பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
    • குடும்பத்திற்குள் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறுதான் இந்த கொலைகளுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரு நபர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியைக் கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    தாக்குதலுக்குப் பிறகு குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தில்லியா கிராமத்தில் இன்று இந்த கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. காவல்துறையின் கூற்றுப்படி, சந்தேக நபர் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியைக் கோடாரியால் கொலை செய்துள்ளார். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. குடும்பத்திற்குள் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறுதான் இந்த கொலைகளுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக இந்த மாதம், காஸ்கஞ்சில் நடந்த இதேபோன்ற ஒரு வழக்கில், ஒன்பது குழந்தைகளின் தாயான ரீனா மற்றும் அவரது காதலன் ஹனிஃப் ஆகியோர் அவரது கணவர் ரத்திராமை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

    ரீனா மற்றும் ஹனிஃப் இடையேயான காதல் உறவுக்கு ரத்திகாம் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் திட்டமிட்டு ரத்திராமை கொலை செய்து, அவரது உடலை ஒரு கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. 

    • இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.
    • இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி, சுமார் 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

    இவரிடமிருந்து போலி தூதரக நம்பர் பிளேட் கொண்ட கார்கள், போலி ஆவணங்கள், ஆடம்பர கடிகாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜெயின், காசியாபாத்தில் வாடகை வீட்டில் 'வெஸ்ட் ஆர்டிகா' என்ற அங்கீகரிக்கப்படாத நாட்டின் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்.

    ஜெயின் வேலை மோசடிகளிலும், ஹவாலா மூலம் பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளது உ.பி. சிறப்பு அதிரடிப் படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.

    சந்திராசுவாமிதான் ஜெயினை மோசடிக்காரர் அஹ்சன் அலி சையதுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சையது, ஜெயினுடன் இணைந்து 25 போலி நிறுவனங்களைதொடங்கி சுமார் 300 கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சையது ஏற்கனவே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜெயின் ஒரு கெளரவ தூதர் மட்டுமே என்றும், அவர் போலி இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது. மேலும், ஜெயினை தனது அமைப்பின் பிரதிநிதி பதவியிலிருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்துள்ளது.

    ஜெயின் 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் மற்றும் வெளிநாடுகளில் பல வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறை நாளை நீதிமன்றத்தில் ஜெயினை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளது. 

    • நகைகளை எடுத்து தங்கள் பைகளில் நிரப்பியுள்ளனர்.
    • கடையில் இருந்து சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நகைக்கடையில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காசியாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் 3:30 மணியளவில், உணவு டெலிவரி ஊழியர்கள் போல மாறுவேடத்தில் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர்.

    வீடியோவில், ஹெல்மெட் அணிந்து, ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியகர்கள் போல உடையணிந்த இரண்டு பேரும் நகைகளை எடுத்து தங்கள் பைகளில் நிரப்பினர். பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

    கடையில் இருந்து சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் இருக்கும் போலி புகைப்படங்களை அவர் வைத்திருந்தார்.
    • இல்லாத இந்த நாட்டில் வேலை வழங்குவதாக இளைஞர்களை நம்ப வைத்துள்ளார்.

    இல்லாத ஒரு நாட்டிற்கு தூதரகம் அமைத்து தன்னை தூதராக அறிவித்து மோசடியில் ஈடுபட்ட ஒருவரை உத்தரபிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

    ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர், காஜியாபாத்தில் ஒரு ஆடம்பரமான இரண்டு மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மேற்கு ஆர்க்டிக் என்ற பெயரில் ஒரு தூதரக அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார்.

    மேற்கு ஆர்க்டிக் என்பது அண்டார்டிகாவில் உள்ள ஒரு பகுதி. அதற்கு எந்த சர்வதேச அங்கீகாரமும் இல்லை. அங்கு யாரும் வசிக்கவில்லை. ஹர்ஷ்வர்தன் ஜெயின் இந்த பிராந்தியத்தின் பெயரில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டார். இல்லாத இந்த நாட்டில் வேலை வழங்குவதாக இளைஞர்களை நம்ப வைத்துள்ளார்.

    எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, விலையுயர்ந்த கார்கள், தூதரக பாஸ்போர்ட்டுகள், வெளிநாட்டு நாணயம் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்களுடன் போலி புகைப்படங்களில் தூதரக ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

    ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் இருக்கும் போலி புகைப்படங்களை அவர் வைத்திருந்தார். இது தவிர, பணமோசடி நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    சமீபத்தில் அவர் தூதரக புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து, அவரது செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். 12 பாஸ்போர்ட்டுகள், வெளியுறவுத்துறை முத்திரைகள் பதித்த கோப்புகள், 34 நாடுகளின் முத்திரைகள், ரூ.44 லட்சம் ரொக்கம், மற்றும் விலையுயர்ந்த கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • ஆசிரியர் தனது செல்போனை எடுத்து இந்தி பட பாடலை ஸ்பீக்கர் மூலமாக ஒலிக்க விடுகிறார்.
    • ஒரு மாணவியை அழைத்து தனது கைப்பையில் உள்ள செல்போன் சார்ஜரை எடுத்து தருமாறு கட்டளையிடுகிறார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சர் அருகே குா்ஜா பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அந்த பள்ளியில் ஆசிரியை செய்த அநாகரிக செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆசிரியை முன்பாக மாணவ-மாணவிகள் பாடம் கவனிக்க ஆவலோடு உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அவர் தனது செல்போனை எடுத்து இந்தி பட பாடலை ஸ்பீக்கர் மூலமாக ஒலிக்க விடுகிறார். தொடர்ந்து தலையை விரித்து போட்டு எண்ணெய் தேய்க்கிறார்.

    ஒரு மாணவியை அழைத்து தனது கைப்பையில் உள்ள செல்போன் சார்ஜரை எடுத்து தருமாறு கட்டளையிடுகிறார். வகுப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் சாவகாசமாக தலையை விரித்துபோட்டு எண்ணெய் தேய்த்ததுடன் சொந்த வேலைக்கு பள்ளி மாணவிகளை பயன்படுத்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    வகுப்பில் அலட்சியமாக செயல்பட்ட அவர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை என தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் தாக்கப்பட்டார்.
    • காவி உடை அணிந்த பக்தர்கள் இழுத்துச் சென்று அடிப்பது அதில் பதிவாகி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் டிக்கெட் தொடர்பான தகராறில் கன்வார் யாத்ரீகர்களால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் தாக்கப்பட்டார்.

    மிர்சாபூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    ரெயில் ஏற காத்திருந்த சீருடையணிந்த அந்த வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவி உடை அணிந்த பக்தர்கள் இழுத்துச் சென்று அடிப்பது அதில் பதிவாகி உள்ளது.

    இதுதொடர்பாக விசாரணைக்குப் பிறகு, ஏழு யாத்ரீகர்கள் கைது செய்யப்பட்டனர்.  

    • அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
    • போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    உத்தரப் பிரதேசத்தின் குருகிராமை சேர்ந்த ஜோதி ஷர்மா (21 வயது) நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    ஜோதி ஷர்மா எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், இரண்டு பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மனரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், "அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை மனரீதியாக துன்புறுத்தினர். அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் நீண்ட காலமாக இந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஜோதி தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார்.

    இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜோதியின் பெற்றோர் பல் மருத்துவத்துறை HODயை கன்னத்தில் அறைவது பதிவாகி உள்ளது.

    பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார், இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
    • யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியபாத்தில் இந்திராபுரம் பகுதியில் KFC உணவக கிளை இயங்கி வந்தத. இந்நிலையில் நேற்று இந்த கடைக்குள் திடீரென காவிக்கொடியுடன் இந்து ரக்ஷா தளம் கும்பல் புகுந்தது.

    ஷ்ரவன் மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது என அங்குள்ள ஊழியர்களை கும்பல் மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

    சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    சைவம் மட்டுமே என்று வலுக்கட்டாயமாக கடையின் முன் போர்டை நிறுவியுள்ளது. ஆனால் தங்கள் உணவகத்திற்கு அசைவம் சாப்பிடவே மக்கள் வருகிறார்கள் என்றும் இதனால் தங்களுக்கு நஷ்டம் தான் என கடையை மூடுவதாக உணவக மேலாளர் தெரிவித்தார்.

    இதேபோல் மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.

    மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை கும்பல் நடத்தியுள்ளது. அதில் உள்ளே புகுந்து மிரட்டல் விடுத்து கும்பல் அத்துமீறியுள்ளதால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    • தனது மூன்று வயது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது சிறுமி 4 சிறுவர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
    • மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி, நாட்டின் மகள்கள் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    உத்தரப் பிரதேசத்தில் நான்கு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 14 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை குர்ஜா நகர் ரயில் நிலையப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிறுமியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜூன் 28 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது மூன்று வயது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது சிறுமி அக்கம் பக்கத்தை சேர்ந்த 4 சிறுவர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது இது நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாயாரின் புகாரின் பேரில், ஜூலை 2 ஆம் தேதி சிறுவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக குர்ஜா வட்ட அதிகாரி பூர்ணிமா சிங் தெரிவித்தார். இந்த சூழலில் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக ஒடிசாவில் ஆசிரியரால் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளான கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விமர்சித்த எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி, நாட்டின் மகள்கள் எரிந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஆனாலும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் மௌனம் நாட்டிற்கு தேவையில்லை. பதில்கள் தேவை. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஹர்ஷ்வர்தன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • அக்கம்பக்கத்தினர் ஹர்ஷ்வர்தனை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    உத்தரப் பிரதேசத்தில் போதைக்கு அடிமையான தனது மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது,

    ஷாஜகான்பூரில் தில்ஹர் நகரில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற கணக்காளர் ஓம்கார் கங்வார் (67). இவரது மகன் ஹர்ஷ்வர்தன் கங்வார் (32) போதைக்கு அடிமையானவர் ஆவார்.

    திங்கட்கிழமை இரவு, ஹர்ஷ்வர்தன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் சுத்தியலால் அவரைத் தாக்க முற்பட்டதாக தெரிகிறது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோபத்தில் இருந்த தந்தை ஓம்கார் நேற்று(செவ்வாய்க்கிழமை), துப்பாக்கியை காட்டி மகனை மிரட்டியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஓம்கார் மகன் ஹர்ஷ்வர்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் ஹர்ஷ்வர்தனை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தை ஓம்காரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    • ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு ஜாமின் வழங்கியது.

    லக்னோ:

    இந்தியா-சீனா இடையே மோதல் நிலவிவந்த காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி சூழ்நிலையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார்.

    இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதய்சங்கர் ஸ்ரீ வஸ்தவா என்பவர் லக்னோ கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சம்மனை ரத்துசெய்ய ஐகோர்ட மறுத்துவிட்டது.

    இந்நிலையில், லக்னோ கோர்ட்டில் இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்ற கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    ×