என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • கள்ளக்காதல் விவகாரம் கணவர் மனோஜ்க்கு தெரிய வந்தது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ் வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ரூபி. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரூபிக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் மனோஜ்க்கு தெரிய வந்தது. அவர் மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ் வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அப்போது ரூபி தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார். பின்னர் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர்.

    வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மனோஜ் திடீரென வீட்டிற்கு வந்தார்.

    அப்போது ரூபி தனது கள்ளக்காதலுடன் படுக்கையில் ஒன்றாக இருந்தார். இதனை கண்டு மனோஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர்களை அறைக்குள் பூட்டி வைத்தார். ஆத்திரத்தில் உச்சிக்கு சென்ற அவர் தனியாக இருந்து சிந்தித்தார். சிறிது நேரத்தில் அவர் முற்றிலும் கோபம் மறைந்து போனது.

    தனது மனைவியை கள்ளக்காதலனுக்கு தாரை வார்க்க முடிவு செய்தார்.

    இதையடுத்து ரூபியின் பெற்றோருக்கு போன் செய்து வரவழைத்தார். அவர்களிடம் சமாதானம் செய்து திருமணத்திற்கு ஒப்புதல் வாங்கினார்.

    மனோஜ் தனது மனைவியை அவரது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து ரூபிக்கு மனோஜ் ஒப்பந்த கடிதம் எழுதினார். அதில் இனி எனக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீ மகிழ்ச்சியாக புது கணவருடன் குடும்பம் நடத்து என எழுதி கொடுத்தார்.

    இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தினமும் ஏராளமான மக்கள் தந்தூரி ரொட்டி சாப்பிட வருகிறார்கள்.
    • உடனடியாக வாந்தி எடுக்கத் தொடங்கினார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர், சௌபேபூரில் ராமையா ஹோட்டல் என்ற உணவகம் உள்ளது.

    இங்கு பரோட்டாக்கள் மிகவும் பிரபலமானவை. தினமும் ஏராளமான மக்கள் தந்தூரி ரொட்டி சாப்பிட வருகிறார்கள்.

    அதுவும், பெரும்பாலும் குடும்பங்கள் இரவு உணவிற்கு வருகிறார்கள்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவகத்திற்குச் சென்றார்.

    அனைவரும் தந்தூரி ரொட்டிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சூழலில், ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.

    ஒரு தந்தூரி ரொட்டியில் ஒரு பல்லி காணப்பட்டது. அதைப் பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வாந்தி எடுக்கத் தொடங்கினார்.

    கோபமடைந்த குடும்பத்தினர் உணவக உரிமையாளருடன் சண்டையிட்டனர்.

    வாந்தி எடுத்தவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

    • மைத்துனரின் திருமணத்திற்கு பைக்கில் மனைவி மைஃப்ரீன் உடன் சென்று கொண்டிருந்தனர்.
    • மேலும் மூன்று பேருடன் சேர்த்து இந்த கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டித்த கணவரை தனது காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்துள்ளார்.

    நேற்று காலை, ஷாநவாஸ் (28) ஷாம்லி மாவட்டத்தில் தனது மைத்துனரின் திருமணத்திற்கு பைக்கில் மனைவி மைஃப்ரீன் உடன் சென்று கொண்டிருந்தபோது, 4 இளைஞர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அவர்கள் ஷாநவாஸை கட்டைகளால் அடித்து, கத்தியால் பலமுறை குத்தினர்.

    பின்னர் குற்றம் அவர்களின் ஒருவன் ஷாநவாஸை துப்பாக்கியால் சுட்டான். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயமடைந்த ஷாநவாஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஷாநவாஸ் திருமணத்துக்கு மொய் எழுத எடுத்துச் சென்ற ரூ.1.5 லட்சம் ரூபாய் மற்றும் அவரது பைக் காணாமல் போனதால், இது ஒரு கொள்ளை கொலை என்று போலீசார் சந்தேகித்தனர்.

    இருப்பினும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பைக்கை போலீசார் கண்டுபிடித்து, அது ஒரு கொள்ளை அல்ல என்று முடிவு செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன், தசாவர் (Tasawer) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் இருவரும் திட்டம் தீட்டி இந்தக் கொலையைச் செய்ததும் தெரியவந்தது.

    தசாவர் ஷாநவாஸின் நெருங்கிய உறவினர். தனது மனைவி தசாவருடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு வைத்திருப்பதை ஷாநவாஸ் அறிந்திருந்தார். இதை அவர் கடுமையாக எதிர்த்ததால், அவரைக் கொல்ல அவர்கள் திட்டம் தீட்டினர். மேலும் மூன்று பேருடன் சேர்த்து இந்த கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் தசாவர் மற்றும் மற்றொரு குற்றவாளியை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன் மற்றும் மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.   

    • ரக்‌ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • இதையொட்டி, அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

    லக்னோ:

    நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழாவை ஒட்டி உத்தர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

    ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.

    • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கால்வாயில் தலை குப்புற பாய்ந்தது.
    • விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் கோவிலுக்கு சென்றனர். காரில் 15 பேர் பயணம் செய்தனர். சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கால்வாயில் தலை குப்புற பாய்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    • பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அறிந்தபோது நமது இதயங்கள் கவலைகளால் நொறுங்கின.
    • சிவபெருமானின் ஆசியால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.

    வாரணாசி:

    பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசி தொகுதிக்கு சென்றார். அங்கு அவருக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள், பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து வாரணாசியில் சேவாபுரி, காலிகாதாம் என்ற இடத்தில் நடந்த விழாவுக்கு பிரதமர் மோடி காரில் சென்றபோது வழி நெடுகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

    வாரணாசி விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 20-வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடியே 70 விவசாயிகளுக்கு வழங்கும் தொகையை விடுவித்தார். அந்த வகையில் இன்று விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரத்து 500 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

    இதையடுத்து காசியில் பொதுமக்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 52 புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.2,200 கோடி செலவில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    இதை தவிர 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பிரதமர் மோடி உபகரணங்கள் வழங்கினார்.

    விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

    பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அறிந்தபோது நமது இதயங்கள் கவலைகளால் நொறுங்கின. அந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று நாங்கள் உறுதி அளித்து இருந்தோம். அதன்படி கடவுள் அருளால் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    சிவபெருமானின் ஆசியால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. அந்த போரின் வெற்றியை நான் இன்று சிவபெருமானின் காலடியில் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். நாட்டில் அநீதியும், அக்கிரமமும் தலைவிரித்து ஆடும் போது சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடுவார். அது தான் தற்போது நடந்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி நாடு முழுவதும் உள்ள 140 கோடி மக்களின் ஒற்றுமையையும், வலிமையையும் வெளிப்படுத்தியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் பழிக்கு பழி வாங்கி இருக்கிறோம்.



    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் பாகிஸ்தானை கதற வைத்தன. அந்த நாட்டில் இருந்த தீவிரவாத முகாம்கள் அனைத்தையும் நமது ஏவுகணைகளும், டிரோன்களும் துல்லியமாக தாக்கி அழித்தன. தீவிரவாத இயக்கத்தின் தலைமை அலுவலகம் நொறுக்கப்பட்டது.

    அதுபோல பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தளம் தகர்க்கப்பட்டது. இப்போதும் அந்த விமானப்படை தளம் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் இன்னும் கதறிக் கொண்டுதான் இருக்கிறது.

    அந்த நாடு கதறுவது போல காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளும் கூட கதறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை வெற்றிகரமாக, துல்லியமாக இந்திய ராணுவம் தாக்கி அழித்ததை காங்கிரஸ்காரர்களால் இன்னமும் ஜீரணிக்க இயவில்லை.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் எதிரிகளுக்கு இந்தியா மிகவும் தெளிவான எச்சரிக்கையை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு உலகில் யார் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை இந்தியா விட்டு வைக்காது. எங்கிருந்தாலும் அவர்களுக்கு இந்தியா தண்டனை கொடுக்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் பாதாள உலகத்தில் சென்று மறைந்தாலும் அவர்களை இந்தியா தேடி பிடித்து அழிக்கும்.

    அதே சமயத்தில் நாட்டை முன்னேற்றும் பணிகளிலும் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்துகிறது. வேளாண் துறையை இன்னும் மேம்படுத்த உறுதி பூண்டு இருக்கிறோம். அதற்காக விவசாயிகளுக்கு இன்னும் பல நன்மைகள் வர இருக்கிறது.

    விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நாங்கள் இலக்காக வைத்து இருக்கிறோம். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் உதவிகளையும், சலுகைகளையும் பெற முன்னுரிமை அளிக்கப்படும். இதுதான் எனது வளர்ச்சி திட்டத்தின் மந்திரம் ஆகும். ஆனால் இதையெல்லாம் தடுப்பதற்கு இங்குள்ள சமாஜ்வாடி கட்சி மறைமுகமாக செயல்படுகிறது.

    உத்தரபிரதேசத்தில் செய்யப்படும் வளர்ச்சி பணிகளை அகிலேஷ் யாதவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே விவசாயிகளுக்காக கொண்டு வரப்படும் உதவி திட்டங்களை குறை கூறி வதந்தி பரப்புவதை சமாஜ்வாடி கட்சியினர் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆனால் காசியில் உள்ள சிவபெருமானின் ஆசியால் அவையெல்லாம் தவிடு பொடியாகி இருக்கிறது. காசி நகரில் மட்டுமின்றி இந்த மாநிலத்தில் செய்யப்படும் மேம்பாட்டு பணிகள் கங்கை நதி போன்று தங்கு தடையின்றி பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.

    பாகிஸ்தானுக்கு நாம் கொடுத்து இருக்கும் பதிலடி அவர்களால் நிச்சயம் மறக்க முடியாது. பாகிஸ்தான் மீண்டும் இந்திய மண்ணில் அதே பாவத்தை செய்ய நினைத்தால் இந்த உத்தரபிரதேசத்தில் தயாராகும் ஏவுகணைகளை அவர்களை மீண்டும் தாக்கி அழிக்கும்.

    ஆனால் இங்குள்ள சமாஜ்வாடி கட்சியினருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை ஏன் சுட்டுக்கொலை செய்தீர்கள் என்று பாராளுமன்றத்தில் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். அகிலேஷ் யாதவ் கட்சியின் கேள்வி பொறுப்புள்ள கேள்வியா?

    பொது அறிவு படைத்த யாராவது இதற்கு பதில் சொல்வார்களா? தீவிரவாதிகள் கண்டு பிடிக்கப்பட்டதும் அவர்கள் தப்பி செல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? அல்லது வேட்டையாடப்பட வேண்டுமா? இது எல்லோருக்கும் தெரிந்தது தானே?

    சமாஜ்வாடி கட்சியினருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன். இது புது பாரதம். எதிரிகளுக்கு நமது கடற்படையும், விமானப்படையும் பதில் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எதிரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை காங்கிரசும், அவர்களது நண்பர்களும் ஏற்க மறுத்ததை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    காங்கிரஸ்காரர்களும், சமாஜ்வாடி கட்சிக்காரர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் போரில் இந்தியா சுயசார்புடன் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி நாம் வெற்றி பெற்று இருக்கிறோம்.

    ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நமது படைகளை அவமதித்துக் கொண்டே இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கூட சமாதான ஒரு செயல் என்று காங்கிரசார் கிண்டல் செய்ததை மக்கள் மறக்க மாட்டார்கள்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில்இருந்த போது அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். தற்போது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதும் மிகவும் கவலைப்படுகிறார்கள். சிந்தூர் என்ற பெயர்கூட காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

    ஆனால் நாங்கள் இதையெல்லாம் பார்த்து கவலைப்பட போவது இல்லை. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிரடியாக நடந்துக் கொண்டுதான் இருக்கும்.

    தற்போது உலக அளவில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளன. இதனால் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் கவனமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



    • வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிங்கு சிங் ராஹி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பணியின் முதல் நாளிலேயே அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை கண்ட சப்-கலெக்டர் கோபம் அடைந்தார். அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த ரிங்கு சிங் அந்த நபரை தோப்புக்கரணம் போட வைத்தார்.

    இந்த நடவடிக்கையை கண்ட அப்பகுதி வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சப்-கலெக்டருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரிங்கு சிங் ராஹி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. நிலைமை விபரீதமாவதை கண்ட சப்-கலெக்டர் வக்கீல்கள் முன்னிலையில் தனது காதுகளை பிடித்து உட்கார்ந்து அமர்ந்து தோப்புக்கரணம் போட்டார்.

    மேலும் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ரிங்கு சிங் ராஹி கூறுகையில், வக்கீல்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நல்ல உறவு பாதிக்கப்படும் என்பதால் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்டேன் என்றார்.

    • அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது.
    • ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.

    அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது. பின்னர் மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தனர்.

    பின்னர் கல்லீரலின் வலது பக்கத்தில் கரு கண்டுபிடிக்கப்பட்டது. 12 வார வயதுடைய கருவுக்கு வழக்கமான இதயத் துடிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில் இருந்து வரும் இரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்தியாவில் இதுபோன்ற முதல் வழக்கு இதுவாகும்.

    இதுவரை, உலகில் இதுபோன்ற எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அரிதான நிலை இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற கர்ப்பம் தாய்க்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கல்லீரல் சிதைவு அல்லது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

    அந்தப் பெண் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையைத் திட்டமிட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை.
    • பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் சுனில் குமார் இரத்தப்போக்கால் ஸ்ட்ரெச்சரிலேயே இறந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்தார்.

    பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூற்றுப்படி, மீரட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் சுனில் குமார் என்ற நபர் படுகாயமடைந்தார். சுனில் குமாரை அவரது உறவினர்கள் உள்ளூர் லாலா லஜ்பத் ராய் நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அவரை ஸ்ட்ரெச்சரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு டாக்டர் பூபேஷ் ராய், ஏசியை ஆன் செய்து நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தார். சுனில் குமாரின் மனைவி மருத்துவரிடம் சென்று அவரை எழுப்ப முயன்றார்.

    சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை.

    பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் சுனில் குமார் இரத்தப்போக்கால் ஸ்ட்ரெச்சரிலேயே இறந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் டாக்டர் பூபேஷ் தூங்குவதையும், சுனில் குமாரின் மனைவி கெஞ்சுவதையும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

    இந்த வீடியோ வைரலானதும் மருத்துவமனை நிர்வாகத்தால் டாக்டர் பூபேஷ் ராய் இடைநீக்கம் செய்யப்பட்டு, சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

    • கன்வார் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக கங்கை நீர் கொண்டு வர சன்னி பைக்கில் ஹரித்வாருக்குச் சென்றார்.
    • அங்குள்ள மருத்துவர்கள் அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பாக்நாத்தில் கண்டேரா கிராமத்தைச் சேர்ந்த சன்னி குமார், கடந்த ஆண்டு கர்ஹி கங்க்ரான் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதாவை மணந்தார். ஆனால் அங்கிதா, அய்யூப் அகமது என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    இந்த மாதம் 22 ஆம் தேதி, கன்வார் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக கங்கை நீர் கொண்டு வர சன்னி பைக்கில் ஹரித்வாருக்குச் சென்றார்.

    இருப்பினும், காங்க்ரான் கிராம சாலை அருகே சன்னியின் பைக்கை நான்கு பேர் நிறுத்தி அவரைத் தாக்கினர்.

    பின்னர், அவர் அங்கிதாவின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சன்னி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டார். பலத்த காயமடைந்த சன்னி உள்ளுர்வாசிகளால் மீட்கப்பட்டு மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்குள்ள மருத்துவர்கள் அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.அங்கு சன்னி சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.

    சன்னியின் தந்தை வேத்பாலின் புகாரின் அடிப்படையில், அங்கிதா, அய்யூப், பேபி மற்றும் சுஷில் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

    • உ.பி.யில் நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​ பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் பிடித்தார்.
    • இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்​தக்​கார​ராக இருந்​தவர் கோவிந்த் வல்​லப் பந்த்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    இதையடுத்து, கடந்த 2022-ல் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க. இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல் மந்திரியானார்.

    இந்நிலையில், உ.பி. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டு மற்றும் 130 நாளை நிறைவு செய்தார்.

    இதன்மூலம் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல் மந்திரியாக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.

    இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த். உத்தர பிரதேசத்தின் (சுதந்திரத்துக்கு பிறகு) முதல் முதல் மந்திரியான அவர் 8 ஆண்டு 127 நாள் தொடர்ந்து முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்ந்து சித்ரவதை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வரைலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பக்ஷிதா காதலாப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அனுராக் சிங். இவரது மனைவி சவும்யா காஷ்யப் நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவும்யாவின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சவும்யா தற்கொலை செய்வதற்கு முன்பாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். தூக்கு கயிறு முன்பு கதறி அழுதபடி அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், எனது கணவர் அனுராக் சிங் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    அதற்கு எனது மாமியார் எனது கணவரை வற்புறுத்துகிறார். எனது மைத்துனர் சஞ்சய் காவல் துறையில் பணியாற்றுகிறார். மற்றொருவரான ரஞ்சித் வக்கீலாக பணியாற்றுகிறார். அவர்கள் என்னை தொடர்ந்து சித்ரவதை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.

    இவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தால் எதையும் செய்யக்கூடியவர்கள். இன்று நான் உயிரிழந்தால் அதற்கு இவர்கள் தான் பொறுப்பு என கூறியுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வரைலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 



    ×