என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அங்குள்ள கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.

    இந்த விளையாட்டுகளில் அதிக அளவில் பணத்தை கட்டி இழந்தார். விளையாட்டு மோகம் காரணமாக லோன் ஆப் போன்றவற்றில் கடன் வாங்கி பணத்தை கட்டினார்.

    லோன் ஆப் மூலம் பெற்ற கடன் தொகை ரூ.3 லட்சத்தை திருப்பி செலுத்திய பிறகும் அவர்கள் தொல்லை கொடுக்க தொடங்கினர்.

    அதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவரின் தற்கொலைக்கு காரணமான லோன் ஆப் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 90 லட்சம் குடும்பங்களுக்கு ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
    • அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்

    தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

    அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும், மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மொத்தம் 40 லட்சம் குடும்பங்கள் இதில் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.

    தெலுங்கானாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை வழங்கும் திட்டத்தையும், ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தையும் டிசம்பர் 9-ஆம் தேதி காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (வயது 37) கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவான லாஸ்யா நந்திதா (வயது 37) பிப்ரவரி 23-ம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கார் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நந்திதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதாவிற்கு, செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா உயிரிழப்பு போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், "அனுபவமில்லாத ஓட்டுநர்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களுக்காக திறமையான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநர் சோதனை நடத்துவதற்கான பயிற்சி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.

    • கிராம பகுதியில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • பல சிறிய மற்றும் நடுத்தர பீர் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை மேற்கொண்டுள்ளன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

    இதனால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராம பகுதியில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து மதுக்கடை ஊழியர்கள் கூறுகையில்:-

    தெலுங்கானா மாநிலத்தில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மதுபான ஆலைகளுக்கு ரூ.1000 கோடி நிலுவைத் தொகை உள்ளது. ஆனால் கலால் துறை ரூ.100 கோடி மட்டுமே செலுத்தி உள்ளது.

    இதனால் கடந்த சில மாதங்களாக பீர் உற்பத்தி செய்ய முடியவில்லை.

    பல சிறிய மற்றும் நடுத்தர பீர் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை மேற்கொண்டுள்ளன. இதனால் மது கடைகளுக்கு பீர் சப்ளையை படிப்படியாக குறைத்துள்ளன.

    மாநிலத்தில் பெருமளவில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு கலால்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகிறது.
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    தெலுங்கானாவில் பா.ஜ.க சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது.

    நாராயணபேட்டை தன்வாடா உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அதில் தெலுங்கானா பா.ஜ.க தலைவரும் மத்திய மந்திரியமான கிஷன் ரெட்டி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வாக்களித்தால் உங்கள் மதிப்புமிக்க வாக்கை குப்பையில் வீசுவதற்கு சமம்.


    பா.ஜ.க, பி.ஆர்.எஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது. தெலுங்கானா மாநிலத்தில் வரும் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. 17 இடங்களில் வெற்றி பெறும். சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    கடந்த தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சிக்கும் சந்திரசேகர ராவ் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

    நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.
    • உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவாக இருந்தவர் லாஸ்யா நந்திதா (வயது 37).

    இன்று அதிகாலை ஐதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சங்கரெட்டி மாவட்டம் படன்செருவில் உள்ள எக்ஸ்பிரஸ் வெளிவட்ட சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

    காலை 6.30 மணி அளவில் வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் காரில் முன்பகுதி நொறுங்கியது.

    காரில் இருந்த லாஸ்யா நந்திதா படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் நந்திதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நந்திதா கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நஞ்சிதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதா செகந்திராபாத், கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தந்தை இறந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நந்திதா விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லஷ்ய நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    "கண்டோண்ட்மெண்ட் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதாவின் அகால மரணம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நந்திதாவின் தந்தையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இறந்தார்.

    அதே மாதத்தில் திடீரென நந்திதாவும் மரணம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • பல் மருத்துவமனையின் சிகிச்சை பெறவந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்ப்பாராத விதமாக வெட்டி விட்டார்
    • அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்தது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இதே மருத்துவமனையால் தனது தோழியும் பாதிக்கப்பட்டதாக x வலைதளப்பக்கத்தில் ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.

    அதில். "ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல் சிகிச்சை பெற்ற ஒருவர் அதிக அளவு மயக்கமருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளியானது. இதே மருத்துவமனையில்தான் எனது தோழி ஒருவருக்கும் இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. பல் மருத்துவமனையின் சிகிச்சை பெற வந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்பாராத விதமாக வெட்டி விட்டார்.இது நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.

    இருப்பினும் அதன் வடுக்கள் இன்னும் அவளது உதட்டில் உள்ளது. அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது. இதற்காக அவள் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொண்டு வருகிறாள்.மேலும் இதனை சரிசெய்ய வருங்காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆகவே மீண்டும், மீண்டும் அலட்சியம் காட்டும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினை அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனையில் உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • எப்போதும் தெலுங்கானாவை ஆதரிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • ராகுல் காந்தியால் தன்னைப் பற்றியே எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

    தெலுங்கானாவில் பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. இதில் அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி எப்போதும், தெலுங்கு மொழியை நேசிக்கிறார். தெலுங்கானா வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறார். தெலுங்கு, தெலுங்கானா மீது அவருக்கு இருக்கும் பாசம் அது. அவர் எப்போதும் தெலுங்கானாவை ஆதரிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    ராகுல் காந்தியால் தன்னைப் பற்றியே எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. அதனால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.-சந்திரசேகர ராவ்( பி.ஆர்.எஸ்) கட்சி கூட்டணி அமையாது. இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் அவர் தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகளை அவர் கிண்டல் செய்தார்.

    • தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.
    • அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

    அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

    பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.

    அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 19 சட்டசபை தொகுதிகளிலும் இந்த யாத்திரை நடக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதை அக்கட்சி இலக்காக வைத்து இருக்கிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அங்கு அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.

    அந்த மாநிலத்தில் மொத்தம் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதை அக்கட்சி இலக்காக வைத்து இருக்கிறது.

    இதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பிரமாண்டமான விஜயசங்கல்ப பேருந்து யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள்.

    தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளிலும் இந்த யாத்திரை நடக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    யாத்திரையின் ரதங்களை ஊர்வலமாக கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 1-ந்தேதி வரை இந்த ரத யாத்திரை நடைபெற உள்ளது. இந்த பேருந்து யாத்திரையின்போது மோடி ஆட்சியின் சாதனை மற்றும் தெலுங்கான அரசு நிறைவேற்றாத முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கிய நோக்கம் என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    • 6 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபாபாத், பையாரம் நகரில் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தனர்.

    அவர்கள் தங்களது காரை ஏ.டி.எம். மையத்திற்கு சிறிது தூரத்தில் நிறுத்தினர். ஏ.டி.எம். மையத்திற்கு அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டம் விட்டுவிட்டு காரில் இருந்த கியாஸ் கட்டரை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.29.70 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் 6 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • மூட நம்பிக்கையால் இது போன்ற சம்பவங்கள் கூட்டுக் கரீம் நகர் மாவட்டத்தில் அரங்கேரி வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்
    • எலும்புகளை திருடி செல்லும் சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் சுல்தானாபாத்தில் சுடுகாடு உள்ளது. இங்கு எரிக்கப்படும் பிணங்களில் இருந்து மண்டை ஓடு,எலும்புகளை சிலர் திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் பிணங்களை எரிக்கும் உறவினர்கள் அவர்களது அஸ்தியை கரைப்பதற்காக மீண்டும் சுடுகாட்டிற்கு வந்து பார்க்கும் போது எலும்புகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை 2 வாலிபர்கள் பைக்கில் சுடுகாட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பையில் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பிணங்களில் இருந்து எலும்புகளை சேகரித்து பைகளில் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்பகுதியில் இருந்த மக்கள் இதனைக் கண்டு வாலிபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் வினோத்குமார் என தெரிய வந்தது.

    அதேபோல் நேற்று முன்தினம் 2 பெண்கள் சுடுகாட்டில் இருந்த எலும்புகளை சேகரித்து எடுத்துச் செல்ல முயன்றனர் இதனைக் கண்ட நகராட்சி ஊழியர்கள் 2 பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 4 பேரிடமும் எலும்புகளை எதற்காக தேடி செல்கிறார்கள்.

    மாய மந்திரம் மாந்திரீகம் செய்ய திருடி செல்கிறார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூட நம்பிக்கையால் இது போன்ற சம்பவங்கள் கூட்டுக் கரீம் நகர் மாவட்டத்தில் அரங்கேரி வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்

    வழிபாடு, மாய மந்திரம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பார்த்து கேட்டு இருக்கிறோம். ஆனால் எரிக்கப்பட்ட பிண்ங்களிலிருந்து மண்டை ஓடு, எலும்புகளை திருடி செல்லும் சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×