என் மலர்
தெலுங்கானா
+2
- என்னோடு சித்தாந்தத்தில் வேறுபட்டுள்ளதாக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்கிறார்கள்.
- முதலில் குடும்பம் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நான் முதலில் தேசம் என்று நம்புகிறேன்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகளை வாரிசு அரசியல் என விமர்சனம் செய்வது உண்டு. குறிப்பாக லாலு பிரசாத், திமுக-விற்கு எதிராக இந்த விமர்சனத்தை வைப்பது உண்டு.
இந்த நிலையில்தான் லாலு பிரசாத், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என விமர்சனம் செய்தார். ஆனால் ஒட்டு மொத்த தேசம்தான் என்னுடைய குடும்பம் என பிரதமர் மோடி பதில் கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
என்னோடு சித்தாந்தத்தில் வேறுபட்டுள்ளதாக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்கிறார்கள். முதலில் குடும்பம் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நான் முதலில் தேசம்தான் என்று நம்புகிறேன். அவர்களுக்கு அவர்களுடைய குடும்பம்தான் எல்லாமே. என்னை பொறுத்தவரையில் என்னுடைய நாடுதான் எனக்கு எல்லாமே. அவர்களுடைய குடும்ப நலுனுக்காக அவர்கள் நாட்டை தியாகம் செய்கிறார்கள். நாட்டின் நலனுக்காக நான் என்னையே தியாகம் செய்துள்ளேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், பிரதமர் உதவி தேவை.
- காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை. சுமுகமான உறவை விரும்புகிறது.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பல வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வரவேற்றார்.
"எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது ஏழைகளின் மேம்பாடு, தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாடு.
பிரதமர் மோடி தெலுங்கானாவின் மூத்த சகோதரர். அவரது உதவியால் மட்டுமே முதல்வர்கள் தங்கள் மாநிலங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
தெலுங்கானா முன்னேற வேண்டுமானால் குஜராத் மாதிரியை பின்பற்ற வேண்டும். குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், பிரதமர் உதவி தேவை.
"காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை. சுமுகமான உறவை விரும்புகிறது.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் லட்சிய இலக்குக்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம். தெலுங்கானா மாநிலத்தின் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தெலுங்கானா முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி வகித்தபோது மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்தார். தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
காங்கிரஸ் முதல் மந்திரியான ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். மேலும் அவரை மூத்த சகோதரர் என அழைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைபடுத்தி உள்ளது.
தெலுங்கானா தேர்தலுக்கு முன்பாக ஆரம்ப காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இருந்து வந்த ரேவந்த் ரெட்டிக்கு அந்த கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
- இந்துத்துவா ஆதரவு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மாதவிலதா முத்தலாக்கிற்கு எதிராக பிரசாரம் செய்தார்.
- மாதவி லதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான ஒவைசி எம்.பி. போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தொடர்ந்து அவர் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். 4-வது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஐதராபாத் தொகுதியை கைப்பற்றவும் ஒவைசியை தோல்வியடைய செய்ய பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதற்காக ஐதராபாத் தொகுதியில் பிரபல நடன கலைஞரான சமூக ஆர்வலர் மாதவி லதா என்பவரை வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. முதுகலை பட்டதாரியான மாதவிலதா பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்துத்துவா ஆதரவு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மாதவிலதா முத்தலாக்கிற்கு எதிராக பிரசாரம் செய்தார். மேலும் அவர் பல்வேறு முஸ்லிம் பெண்கள் குழுக்களுடன் தொடர்பில் உள்ளார். அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்காக சிறிய விடுதியையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மாதவி லதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.
ஒவைசிக்கு இந்த முறை பா.ஜ.க வேட்பாளர் மாதவிலதா கடும் போட்டியை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இத்தொடரில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
ஐதராபாத்:
10-வது புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 28-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்தது.
முதல் முறையாக கோப்பையை வென்ற புனே அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
புனே அணி கேப்டன் அஸ்லம் மிக மதிப்புமிக்க வீரராக தேர்வு பெற்றார். அவர் 142 ரைடு புள்ளிகளும், 23 டேக்கிள் புள்ளிகளும் பெற்றார். அவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்தது.
இந்தத் தொடரில் அதிக ரைடு புள்ளிகளை டெல்லி கேப்டன் அகமாலிக் பெற்றார். அவர் மொத்தம் 228 புள்ளிகளை எடுத்தார். சிறந்த ரைடராக தேர்வு பெற்ற அகமாலிக்குக்கு ரூ.15 லட்சம் பரிசு தொகை கிடைத்தது.
வீரர்களை மடக்கி பிடிப்பதில் சிறந்த வீரராக புனே வீரர் முகமது ரேசா தேர்வு பெற்றார். அவர் 97 புள்ளிகள் பெற்றார். அவருக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது.
- தெலுங்கானாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது.
- பா.ஜ.க. தெலுங்கானா பாராளுமன்ற வேட்பாளர்கள் 6 பேரின் முதல் பட்டியல் தயாராகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. இதுவரை கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி மேலிடம் தேர்வு செய்து வருகிறது.
பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமை தயாரித்த வேட்பாளர் பட்டியல்கள் அந்தந்த மாநிலங்களின் கோர் கமிட்டி உறுப்பினர்கள் தனித்தனியாக சந்தித்து விரிவாக விவாதித்தன. பா.ஜ.க. தெலுங்கானா பாராளுமன்ற வேட்பாளர்கள் 6 பேரின் முதல் பட்டியல் தயாராகி உள்ளது.
நாளை முதல் பட்டியலை பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
- இதில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
ஐதராபாத்:
10-வது புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.
லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92 புள்ளி) ஆகிய அணிகள் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.
தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.
முதலாவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் புனேரி பால்டன் அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் முறையாக புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
- திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.
- சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், கோவிந்தஹள்ளியைச் சேர்ந்தவர் திருப்பதய்யா (வயது 39).
இவர் முட்டை பஜ்ஜியை மிகவும் விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி சுவர்ணா கடையில் முட்டை பஜ்ஜி வாங்கி வந்தார்.
அதை திருப்பதய்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.
பின்னர் அதை வெளியே எடுக்க முயன்றார். வெளியே வராததால் திருப்பதய்யா மூச்சு திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுவர்ணா தொண்டையில் சிக்கிய பஜ்ஜியை எடுக்க முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திருப்ப தய்யாவின் தொண்டையில் சிக்கியிருந்த முட்டை பஜ்ஜியை சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இருப்பினும் மூச்சு விட முடியாமல் திருப்பதய்யா இறந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொடுகண்டி ராமு தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார்.
- தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி உள்ளது.
இந்த கட்சியில் மூத்த தலைவரும் கர்னூல் நகர்ப்புற தொகுதி எம்.பி.யுமான பொடுகண்டி ராமு நேற்று சந்திரசேகர ராவ் கட்சியில் இருந்து விலகினார். அவர் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார்.பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து அந்த கட்சியில் சேர்ந்தார்.
இது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திரசேகரராவ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பது பி.ஆர்.எஸ். கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
- பிரதமர் மோடி மக்கள் ஆரோக்கியத்தை கவனித்து வருகிறார்.
- இல்லையென்றால் கடவுளும் உங்களை மன்னிக்க மாட்டார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதி பா.ஜ.க. எம்.பி. அரவிந்த் கட்சியின் யாத்திரையில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி மக்கள் ஆரோக்கியத்தை கவனித்து வருகிறார்.
இலவச உணவு, இலவச கியாஸ், நல்ல பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. திருமணத்திற்கு பணம் அனுப்புகிறார். சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுக்கிறார். நரேந்திர மோடி தான் முத்தலாக்கை ரத்து செய்து சுயமரியாதையை உறுதி செய்துள்ளார்.

தங்களுக்கு உணவளிக்கும் கையை மக்கள் கடிக்க வேண்டாம். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காமல் காங்கிரஸ் கட்சி அல்லது பி.ஆர்.எஸ். கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் கடவுள் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வார்.
நீங்கள் சொர்க்கத்திற்கு போக மாட்டீர்கள். நரகத்திற்கு போவீர்கள் என்று நான் சொல்கிறேன்.
சொர்க்கத்திற்கு செல்ல விரும்பினால் நாட்டிற்கு சேவை செய்து அதை பாதுகாப்பவர்களுக்கு ஆதரவளித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.
இல்லையென்றால் கடவுளும் உங்களை மன்னிக்க மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சர்ச்சை பேச்சு வீடியோ தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது.
- ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி குறித்து யாத்திரையில் விமர்சனம் செய்து பேசி வருகின்றனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. இந்த யாத்திரையில் வரும் பா.ஜ.க.வினர் ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி குறித்து விமர்சனம் செய்து பேசிவருகின்றனர்.
இந்நிலையில், வாரங்கல் மாவட்டம் பீமதேவார பள்ளி என்ற இடத்தில் பா.ஜ.க.வின் விஜய் சங்கல்ப யாத்திரை நேற்று நடந்தது. இதில் கரீம் நகர் எம்.பி.யும், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவருமான பண்டி சஞ்சய் கலந்துகொண்டார்.
அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் பண்டி சஞ்சய் வந்த கார், மற்ற வாகனங்கள் மீது சரமாரியாக முட்டைகளை வீசி தாக்கினர். இதனால் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்து அப்பகுதியில் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.
முட்டை வீச்சு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.
- போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.
- ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரஹீம் சரணியா. இவர் ஐதராபாத் மேல் பள்ளியில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் பேகம் பேட்டையில் உள்ள அவரது குடோனில் இருந்த மூலப்பொருட்களை ஆய்வு செய்தனர்.
இதில் கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்தது தெரிந்தது. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்ததாக பாண்டுரங்க ராவ், ரஹீம், அஜய்குமார், அஹர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பேகம் பேட்டை பஜாரில் உள்ள கடைகளில் சோதனை செய்து ஏராளமான கலப்பட இஞ்சி, பூண்டு பேஸ்ட் பறிமுதல் செய்தனர்.
- கிஷன் ரெட்டி ஆம்பர்பேட்டை தொகுதிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.
- ஓட்டு போட்ட மக்களே காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிவார்கள்.
தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகராவின் மகன் கே.டி.ராமராவ். இவர் பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருகிறார். பி.ஆர்.எஸ் கட்சியின் பொது கூட்டத்தில் கே.டி.ராமாராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-
500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் தருவதாக வாக்குறுதி கொடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த 6 வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி நசுக்கப்படுவது உறுதி. ஓட்டு போட்ட மக்களே காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிவார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய மந்திரியாக உள்ள கிஷன் ரெட்டி ஆம்பர்பேட்டை தொகுதிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.
மக்களவைத் தேர்தலில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் மோடியின் முகத்தைக் காட்டி ஓட்டு கேட்பது வெட்கக்கேடானது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு வந்த ராமாராவிற்கு ஐதராபாத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரோஹித் தலைமையில் காங்கிரசார் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காங்கிரசாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.






