search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா மாநிலத்தில் 6 தொகுதிக்கு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு
    X

    தெலுங்கானா மாநிலத்தில் 6 தொகுதிக்கு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

    • தெலுங்கானாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது.
    • பா.ஜ.க. தெலுங்கானா பாராளுமன்ற வேட்பாளர்கள் 6 பேரின் முதல் பட்டியல் தயாராகி உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. இதுவரை கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி மேலிடம் தேர்வு செய்து வருகிறது.

    பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமை தயாரித்த வேட்பாளர் பட்டியல்கள் அந்தந்த மாநிலங்களின் கோர் கமிட்டி உறுப்பினர்கள் தனித்தனியாக சந்தித்து விரிவாக விவாதித்தன. பா.ஜ.க. தெலுங்கானா பாராளுமன்ற வேட்பாளர்கள் 6 பேரின் முதல் பட்டியல் தயாராகி உள்ளது.

    நாளை முதல் பட்டியலை பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×