search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponnam Prabhakar"

    • எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (வயது 37) கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவான லாஸ்யா நந்திதா (வயது 37) பிப்ரவரி 23-ம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கார் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நந்திதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதாவிற்கு, செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா உயிரிழப்பு போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், "அனுபவமில்லாத ஓட்டுநர்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களுக்காக திறமையான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநர் சோதனை நடத்துவதற்கான பயிற்சி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.

    ×