சுடுகாட்டில் எரிக்கப்பட்ட மனித எலும்புகள் திருட்டு- மூட நம்பிக்கையால் வினோதம்

மூட நம்பிக்கையால் இது போன்ற சம்பவங்கள் கூட்டுக் கரீம் நகர் மாவட்டத்தில் அரங்கேரி வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்எலும்புகளை திருடி செல்லும் சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுடுகாட்டில் எரிக்கப்பட்ட மனித எலும்புகள் திருட்டு- மூட நம்பிக்கையால் வினோதம்
Published on

தெலுங்கானா மாநிலம் சுல்தானாபாத்தில் சுடுகாடு உள்ளது. இங்கு எரிக்கப்படும் பிணங்களில் இருந்து மண்டை ஓடு,எலும்புகளை சிலர் திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் பிணங்களை எரிக்கும் உறவினர்கள் அவர்களது அஸ்தியை கரைப்பதற்காக மீண்டும் சுடுகாட்டிற்கு வந்து பார்க்கும் போது எலும்புகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 2 வாலிபர்கள் பைக்கில் சுடுகாட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பையில் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பிணங்களில் இருந்து எலும்புகளை சேகரித்து பைகளில் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்பகுதியில் இருந்த மக்கள் இதனைக் கண்டு வாலிபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் வினோத்குமார் என தெரிய வந்தது.

அதேபோல் நேற்று முன்தினம் 2 பெண்கள் சுடுகாட்டில் இருந்த எலும்புகளை சேகரித்து எடுத்துச் செல்ல முயன்றனர் இதனைக் கண்ட நகராட்சி ஊழியர்கள் 2 பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 4 பேரிடமும் எலும்புகளை எதற்காக தேடி செல்கிறார்கள்.

மாய மந்திரம் மாந்திரீகம் செய்ய திருடி செல்கிறார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூட நம்பிக்கையால் இது போன்ற சம்பவங்கள் கூட்டுக் கரீம் நகர் மாவட்டத்தில் அரங்கேரி வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்

வழிபாடு, மாய மந்திரம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பார்த்து கேட்டு இருக்கிறோம். ஆனால் எரிக்கப்பட்ட பிண்ங்களிலிருந்து மண்டை ஓடு, எலும்புகளை திருடி செல்லும் சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com