என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசுக்கு ஓட்டு போடுவது வாக்கை குப்பையில் வீசுவதற்கு சமம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காங்கிரசுக்கு ஓட்டு போடுவது வாக்கை குப்பையில் வீசுவதற்கு சமம்

    • காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகிறது.
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    தெலுங்கானாவில் பா.ஜ.க சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது.

    நாராயணபேட்டை தன்வாடா உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அதில் தெலுங்கானா பா.ஜ.க தலைவரும் மத்திய மந்திரியமான கிஷன் ரெட்டி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வாக்களித்தால் உங்கள் மதிப்புமிக்க வாக்கை குப்பையில் வீசுவதற்கு சமம்.


    பா.ஜ.க, பி.ஆர்.எஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது. தெலுங்கானா மாநிலத்தில் வரும் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. 17 இடங்களில் வெற்றி பெறும். சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    கடந்த தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சிக்கும் சந்திரசேகர ராவ் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

    நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×