என் மலர்
தெலுங்கானா
- மத்திய அரசின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாநில அரசு செயல்பட முடிவு செய்துள்ளது.
- அழகிகளுக்கு தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பது ஐதராபாத் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. நாளை கோலாகலத்துடன் தொடக்க விழா நடைபெறுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்கள், மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் போட்டி நடத்துபவர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர்.
உலக அழகி போட்டியில் மொத்தம் 116 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 109 நாடுகளை சேர்ந்த உலக அழகிகள் ஐதராபாத் வந்தனர்.
ஐதராபாத் வந்துள்ள அழகிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 3 வாரங்களுக்கு அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு தருவது ஒரு பெரிய சவாலாக உள்ளது.
இதனால் மத்திய அரசின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாநில அரசு செயல்பட முடிவு செய்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக விமான சேவையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மற்றும் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அழகி போட்டியில் கலந்து கொள்பவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 12-ந்தேதி நாகார்ஜுன சாகரில் உள்ள புத்தவனம் ஐதராபாத் சார்மினார், லாட் பஜார், வாரங்கல் ஆயிரம் தூண் கோவில், யாதகிரி குடா, போச்சம்பள்ளி மஹபூப் நகர் ஆகிய பகுதிகளுக்கு அழகி போட்டியில் கலந்து கொள்ளும் அழகு ராணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிலர் ஐதாபாத் வீதிகளில் சுற்றி வருகின்றனர். அவ்வாறு வரும் அழகிகளுக்கு தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பது ஐதராபாத் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
- மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்த தெலுங்கானாவில் அரசு சார்பில் உதவி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் நடந்தது. 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜங்கா பூஜா, 2023-ம் ஆண்டு முதன்முதலில் நீட் தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெறவில்லை.
இதன் பிறகு, போட்டித் தேர்வுக்கு சிறப்பாகத் தயாராவதற்காக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். கடந்த 4-ந்தேதி ஜங்கா மீண்டும் தேர்வு எழுதினார்.
இருப்பினும், ஒரு முறை தேர்வில் தோல்வியடைந்ததால், அவருக்கு பயம் ஏற்பட்டது.
தேர்வு மையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு தனது பதில்களை மறுபரிசீலனை செய்தார். இந்த முறையும் நல்ல மதிப்பெண் பெற முடியாது என்று நினைத்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நீட் தேர்வாளரான ராயி மனோஜ் குமார். இவர் நீட் தேர்வில் சிறப்பாகச் செயல்படாததால் மனமுடைந்தார்.
இவருடைய தந்தை ஆசிரியரியராக பணியாற்றி வருகிறார். தேர்வு எழுதிவிட்டு நேற்று வீடு திரும்பிய மனோஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்த தெலுங்கானாவில் அரசு சார்பில் உதவி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நில அதிர்வு, கரீம் நகர் மற்றும் நிர்மல் ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இன்று மாலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.
இது, ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நில அதிர்வு, கரீம் நகர் மற்றும் நிர்மல் ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ராமகுண்டம் பகுதியை மையமாக கொண்டு பூகம்பம் ஏற்படும் என கடந்த மாதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அங்கு சில பகுதிகளில் வீடுகள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறினர்.
- மார்ச் மாதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்.
- மசோதாவை தெலுங்கானா கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலங்களில் ஒன்று தெலுங்கானா. தெலுங்கானா மாநில சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BCs) 42 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி பதவிகளில் வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் மசோதா சட்டமாகும்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கான மசோதாவை அனுப்பி வைத்ததற்காக தெலுங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மாவுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள நன்றி தெரிவித்துள்ளனர்.
கவர்னரை சந்தித்த பின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் கூறுகையில் "சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் 42 சதவீதம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் சட்டம் இந்தியாவுக்கு முன்மாதிரியானது" என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் பி. மகேஷ் குமார் கவுட் "பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முடிவு வரலாற்று முக்கியத்துவமானது" எனத் தெரிவித்துள்ளார்.
- ஏற்கனவே பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தபடவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் நேற்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தொடர்ச்சியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்ததன் விளைவாக தான் மத்திய அரசு தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரின் படங்களுக்கு பால் ஊற்றி கொண்டாடினர்.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
நாங்கள் 5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்துவிட்டோம். அதன்பிறகு கிளாசனும், அபினவும் அபாரமாக விளையாடி ஒரு கவுரவமான இலக்கை எட்ட உதவினார்கள்.
இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு அணியை சரிவிலிருந்து மீட்க வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி எங்களுக்கு நடக்கவில்லை. தொடர்ந்து சரிவிலே நாங்கள் சென்று விட்டோம்.
முதல் போட்டியில் நாங்கள் 280 ரன்களுக்கு மேல் அடித்தோம். ஆனால் அதன்பிறகு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய சரிவு. ஆனால் டி20 போட்டி என்பது இப்படித்தான் இருக்கும்.
எங்கே தவறு நடக்கிறது என்று உங்களால் சொல்லமுடியாது. இந்த சீசன் எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. தற்போது எங்களுக்கு சில வெளியூரில் நடைபெறும் போட்டிகள் இருக்கிறது. அங்கு செல்லும்போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து, அதன்பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.
சில நாள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடும் நிலைக்கு தள்ளப்படலாம். சில நாள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.
- ரோகித் சர்மா 456 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- இவர் டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்த 8-வது வீரரானார்.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இதுவரை 456 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 12,000 ரன்களைக் கடந்த 8-வது வீரராக உள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிஸ் கெயில் 463 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்திய வீரர்களின் வரிசையில் விராட் கோலி 407 போட்டிகளில் விளையாடி 13,208 ரன்கள் குவித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.
ஐதராபாத்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் அவுட்டானார்.
மும்பை அணியின் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விக்கு பிறகு எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி தொடர்ந்து 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
கடந்த வாரம் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் மும்பை அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சனரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி டிரண்ட் போல்டின் துல்லிய பந்து வீச்சில் சிக்கியது. இதனால் முன்னணி வீரர்கள்
விரைவில் அவுட்டாகினர்.
ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அவுட்டாகி 35 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.
6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன்-அபினவ் மனோகர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 11 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 22 ரன்னில் வெளியேறினார்.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இது மும்பை அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். ஐதராபாத் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.
- விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து கொண்டு இருந்தபோது கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்து இறந்தார்.
- கடும் வெயிலின் காரணமாக 5 பேர் பலியான சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம் , குர்ண்ண பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜூ (42). இருவரும் நேற்று முன்தினம் துக்க நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் வாசிக்க சென்றனர்.
பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினர். கடும் வெயிலில் சோர்வாக காணப்பட்ட சங்கரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் ராஜூவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். கரீம் நகர், சங்கரபட்டினத்தை சேர்ந்த ஜல்லம்மா (59). இவர் அறுவடை செய்த நெல்லை உலர்த்திக்கொண்டு இருந்தார். அப்போது மயக்கம் அடைந்து கீழே விழுந்தது இறந்தார்.
அடிலாபாத் மாவட்டம், பீம்பூரை சேர்ந்த சவான் கேசவ்(60). இவர் விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து கொண்டு இருந்தபோது கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல் மஹபூபாபாத் மாவட்டம், ஹனுமண்டலாவை சேர்ந்த பிரேமலதா (60). அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக தனது கணவருடன் சென்றார்.
அப்போது நெல் விற்பனை நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தார். தெலுங்கானாவில் கடும் வெயிலின் காரணமாக 5 பேர் பலியான சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- 'VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என்பது முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- அப்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் இருந்தார்.
ஐதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, முன்னாள் வீரர் முகமது அசாருதின் பெயர் சூட்டப்பட்டதை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைகேட்பு அதிகாரி.ரத்து செய்தார்
'VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என இருந்ததை, 2019ம் ஆண்டில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, 'முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது
இது அதிகார துஷ்பிரயோகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
- போதைப் பொருட்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
- 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியா நகரங்களில் தயாரிக்கப்படும் ஓஜி குஷ் என்ற விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்தி வந்து ஐதராபாத்தில் விற்பனை செய்வதாக நம் பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தெலுங்கானாவின் சிறப்பு படை போலீசார் மற்றும் கலால் துறை போலீசார் நேற்று விமான நிலையம் அருகே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர்.
காரில் கஞ்சா போதை மாத்திரைகள், வெளிநாட்டு போதைப் பொருட்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






