என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் கடும் வெயிலால் 5 பேர் பலி
    X

    தெலுங்கானாவில் கடும் வெயிலால் 5 பேர் பலி

    • விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து கொண்டு இருந்தபோது கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்து இறந்தார்.
    • கடும் வெயிலின் காரணமாக 5 பேர் பலியான சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம் , குர்ண்ண பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜூ (42). இருவரும் நேற்று முன்தினம் துக்க நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் வாசிக்க சென்றனர்.

    பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினர். கடும் வெயிலில் சோர்வாக காணப்பட்ட சங்கரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல் ராஜூவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். கரீம் நகர், சங்கரபட்டினத்தை சேர்ந்த ஜல்லம்மா (59). இவர் அறுவடை செய்த நெல்லை உலர்த்திக்கொண்டு இருந்தார். அப்போது மயக்கம் அடைந்து கீழே விழுந்தது இறந்தார்.

    அடிலாபாத் மாவட்டம், பீம்பூரை சேர்ந்த சவான் கேசவ்(60). இவர் விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து கொண்டு இருந்தபோது கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்து இறந்தார்.

    இதேபோல் மஹபூபாபாத் மாவட்டம், ஹனுமண்டலாவை சேர்ந்த பிரேமலதா (60). அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக தனது கணவருடன் சென்றார்.

    அப்போது நெல் விற்பனை நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தார். தெலுங்கானாவில் கடும் வெயிலின் காரணமாக 5 பேர் பலியான சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×