என் மலர்
தெலுங்கானா
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் லேசானவை அல்லது அறிகுறி இல்லாமல் உள்ளன.
- எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெலுங்கானா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு குறித்து வெளியான தகவல்கள் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரசை எதிர்த்துப் போராட மக்கள் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் லேசானவை அல்லது அறிகுறி இல்லாமல் உள்ளன. நீராவி உள்ளிழுத்தல் மற்றும் ஓய்வு போன்ற எளிய வீட்டு பராமரிப்பு ஒரு வாரத்திற்குள் குணமடைவதை உறுதி செய்துள்ளது.
வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சமீபத்திய அலையைச் சமாளிக்க போதுமான படுக்கைகள், ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் சோதனை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடமிருந்தோ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்தோ இதுவரை எந்த வழிகாட்டுதல்களும் வரவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
- பதவியேற்பதற்கு முன்பே அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்.
- முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அதை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியாக விரிவுபடுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயர் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய பிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவர் கே.டி. ராம ராவ், தெலுங்கானாவை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம்.ஆக மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "தெலுங்கானாவின் நிர்வாகம் ஊழல் மற்றும் கமிஷன் ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது என்ற பிஆர்எஸ் குற்றச்சாட்டை தற்போது மத்திய அமைப்பான அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் ஊழல் மோசடியை அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. பதவியேற்பதற்கு முன்பே அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார். முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அதை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியாக விரிவுபடுத்தியுள்ளார்" என்றார்.
தனியார் நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கும்படி கேட்டதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மறைந்த அகமது படேல், பவன் பன்சால் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்படவில்லை.
குற்றப்பத்திரிகையில் ரேவந்தின் பெயர் இருப்பதால் மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுக்குமா அல்லது முந்தைய ஊழல்களைப் போலவே அவரைப் பாதுகாப்பார்களா? என்று ராம ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
- நிகழ்ச்சியின் போது கோலாட்டம் தபேலா ஆர்மோனியம் வாசித்தல் உள்ளிட்ட கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.
- கிராமத்தில் மொத்தம் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் மாணிக் ரெட்டி. அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் அஞ்சிரெட்டி, நாராயண் ரெட்டி. 3 பேரும் வேறு ஒரு கிராமத்தில் நடந்த பகவத் கீதை பாராயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தங்களது ஊருக்கு திரும்பிய 3 பேரும் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 1967-ம் ஆண்டு பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அன்று முதல் இன்று வரை சுமார் 58 ஆண்டுகளாக பாராயண நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அப்போதில் இருந்து அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த பல தலைமுறை மக்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து கொள்ளும் பெரியவர்கள் 4.30 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பெண்களும், 8 மணி முதல் 9.30 மணி வரை வாலிபர்களும் பாராயணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது கோலாட்டம் தபேலா ஆர்மோனியம் வாசித்தல் உள்ளிட்ட கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.
இந்த கிராமத்தில் மொத்தம் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பகவத் கீதை பாராயணம் செய்வதால் கிராம மக்களில் ஒருவருக்கு கூட மது அருந்துதல், புகைப்பிடித்தல் உள்ளிட்ட எந்த வித பழக்கங்களும் இல்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
- மனைவியை சந்தித்த கங்காதர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மனைவியை வற்புறுத்தினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் ஆர் மரை சேர்ந்தவர் கங்காதர். இவரது மனைவி அஞ்சலி (வயது 35). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கங்காதர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இதனால் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. அஞ்சலி கணவரை பிரிந்து தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். கங்காதரன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நிஜாமாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கங்காதர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.
நேற்று இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. நிஜமாபாத்தில் மனைவியை சந்தித்த கங்காதர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மனைவியை வற்புறுத்தினார்.
ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என மறுப்பு தெரிவித்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கங்காதர் நிஜாமாபாத் பஜாரில் கத்தியை வாங்கிக்கொண்டு மனைவியின் வீட்டிற்கு வந்தார். கங்காதர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஞ்சலியின் கழுத்தை அறுக்க முயன்றார். இதனைக் கண்ட அவரது மகள்கள் தடுத்தனர்.
இருப்பினும் கங்காதர் மகள்களின் கண்ணெதிரிலேயே மனைவியின் கழுத்தை அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அஞ்சலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகள்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அஞ்சலி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கங்காதரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகியில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகியில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் காயமடைந்த 17 பேரை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.
உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐதராபாத்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள், விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி தரும் வகையில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் உள்நாட்டில் செயல்படும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி தெலுங்கானா, ஆந்திர புலனாய்வுத்துறை மற்றும் போலீசாருக்கு பயங்கரவாதிகள் ஐதராபாதில் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து இரு மாநில போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியில் பதுங்கியிருந்த சிராஜ் உர் ரஹ்மான் (வயது 29) என்பவரைக் கைது செய்தனர்.
அவர் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான அமோனியா, சல்ஃபர், அலுமினியம் தூள் உள்ளிட்டவை கைபற்றப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து ஐதராபாதைச் சேர்ந்த அவரது கூட்டாளி சையது சமீர் (28) கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து இருவருக்கும் அறிவுறுத்தல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களுக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் அடிப்படையில் இதில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ஐதராபாத் நகரில் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு முன்பாக நகரின் வெளிப்பகுதியில் முன்கூட்டியே சோதனை அடிப்படையில் குண்டு வெடிப்பை நடத்தவும் இருவரும் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
போலீசார் கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சந்தேக நபர்கள், அந்நிய நபர்கள் நடமாட்டம், சந்தேக செயல்பாடுகள் தங்கள் பகுதியில் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
- தீ விபத்தில் 4 குடும்பங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
- காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குடும்பங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து அதிகாரிகள் அளித்த அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி,
அதிகாலையில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்கனவே 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் அடங்குவர்.
பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கு மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது.
- ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது
- இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.
72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.
உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.
மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உலக அழகி போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தெலுங்கானா மாநில பெண்கள் கால்களை கழுவி பாத பூஜை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவத்திற்கு பிஆர்.எஸ் கட்சி தலைவர் நிரஞ்சன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "உலக அழகி போட்டியாளர்கள் கால்களை கழுவ வைத்தது கண்டனத்துக்கு உரியது. இது தெலுங்கானா மாநில மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். இந்த நிகழ்விற்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.காங்கிரஸ் அரசின் தவறின் உச்சக்கட்டம்.இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தெலுங்கானா சமூகத்திற்கும், கண்ணியத்திற்கும் அவமானம்.
விவசாயிகள் பயிர் இழப்பீடு ,நிலுவைத் தொகை கேட்டு போராடி வரும் நிலையில் ஆடம்பரமான அழகி போட்டி மாநிலத்திற்கு தேவையா? நாட்டின் எல்லையில் போர் பதற்றம் மறுபுறம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சார்மினாரில் கடைகளை மூடி அழகி போட்டியாளர்கள் கேட் வாக் நடத்தியது மிகப்பெரிய தவறு.
தெலுங்கானா பெண்களை அவமானப்படுத்த வைப்பதில் அரசு மும்முரமாக உள்ளது. இந்த அழகி போட்டியால் தெலுங்கானாவுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை" என்று தெரிவித்தார்.
- ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.
- இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.
72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.
உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.
மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கராச்சி பேக்கரி 1953 ஆம் ஆண்டு முதல் ஐதராபாத்தில் செயல்பட்டு வருகிறது.
- போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களால் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முடியவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் சூழலில் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரி மீது பாஜக ஆதரவாளர்கள் சூறையாடினர்.
இன்று பிற்பகலில் காவி கொடிகளை ஏந்தி வந்த அந்த கும்பல், "பாகிஸ்தான் முர்தாபாத்" மற்றும் "பாரத் மாதா கீ ஜெய்" போன்ற கோஷங்களை எழுப்பி அங்கு வன்முறையில் ஈடுபட்டது.
பேக்கரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பேக்கரியின் அறிவிப்புப் பலகைகளை அடித்து நொறுக்கி உடைத்து சூறையாடலில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களால் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முடியவில்லை. பின்னர், நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறை அதிகாரிகள் வந்தனர்.
பேக்கரி உரிமையாளர்கள் தங்கள் பிராண்ட் ஐதராபாத்தில் தோன்றியதாகவும், கராச்சி என்ற பெயர் அதன் வரலாற்றின் ஒரு பகுதி என்றும் இந்த விவகாரத்துக்கு பதிலளித்தனர். புகழ்பெற்ற கராச்சி பேக்கரி 1953 ஆம் ஆண்டு முதல் ஐதராபாத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், குல்லா தாண்டாவை சேர்ந்தவர் பிரகலாதன். இவரது மனைவி சங்க பாய் (36). தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் இருந்தனர். இவர்களது இளைய மகள் ஸ்ரீ வாணி (12). மூத்த மகள் ஐதராபாத்தில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிரகலாதன் ஐதராபாத் சென்றார். நேற்று இரவு சங்க பாய் தனது மகள், மகனுடன் ஏர்கூலரை ஆன் செய்து வைத்துவிட்டு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீவாணியின் கால்கள் ஏர் கூலர் மீது பட்டது. ஏர் கூலரில் இருந்து ஸ்ரீவாணி மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் தனது தாய் மீது கை வைத்து தூங்கிக்கொண்டு இருந்ததால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சிறிது தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களது மகன் அதிகாலை எழுந்து பார்த்த போது தாயும், சகோதரியும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்னுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட தெலுங்கானா பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன.
- 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் வந்துள்ளனர்.
72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு கோலாகலமாக தொடங்கியது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மிஸ் வேர்ல்ட் லிமிடெட் தலைவர் ஜூலியா மோர்லி சிபிஇ மற்றும் தற்போதைய மிஸ் வேர்ல்ட் கிறிஸ்டினா பிஸ்கோவா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற மற்றும் பழங்குடி நடன நிகழ்ச்சிகள் மூலம் தெலுங்கானாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் வெளிப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்கிறார்.

தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போட்டியாளர்களும் விதவிதமான உடைகளில் ஒய்யாரமாக மேடையில் நடைபோட்டனர். 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டுப் போட்டி நடக்கிறது.
மிஸ் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ஜூலியா மோர்லி, "பாரம்பரியம் புதுமையுடன் அழகாகப் பின்னிப் பிணைந்த இடமான தெலுங்கானாவிற்கு மிஸ் வேர்ல்ட் விழாவைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு போட்டி உலக ஒற்றுமை, அமைதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் உணர்வைப் பிரதிபலிக்கிறது' என்று கூறினார்.

மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இந்த விழா, பல்வேறு கலாச்சார, ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. வரவிருக்கும் பயணத்திட்டத்தில் மே 12 அன்று நாகார்ஜுனசாகரில் உள்ள புனித புத்தவனத்திற்கு வருகை தருவதும், அதைத் தொடர்ந்து மே 13 அன்று சார்மினார் மற்றும் லாட் பஜாரில் பாரம்பரிய நடைப்பயணம் நடத்துவதும் இடம்பெறும்.
போட்டியாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க சௌமஹல்லா அரண்மனையில் நடைபெறும் அரச வரவேற்பு விருந்திலும், இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்கள்.






