என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் ஏர் கூலரில் மின்சாரம் பாய்ந்து தாய்-மகள் பலி
    X

    தெலுங்கானாவில் ஏர் கூலரில் மின்சாரம் பாய்ந்து தாய்-மகள் பலி

    • மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், குல்லா தாண்டாவை சேர்ந்தவர் பிரகலாதன். இவரது மனைவி சங்க பாய் (36). தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் இருந்தனர். இவர்களது இளைய மகள் ஸ்ரீ வாணி (12). மூத்த மகள் ஐதராபாத்தில் படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பிரகலாதன் ஐதராபாத் சென்றார். நேற்று இரவு சங்க பாய் தனது மகள், மகனுடன் ஏர்கூலரை ஆன் செய்து வைத்துவிட்டு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஸ்ரீவாணியின் கால்கள் ஏர் கூலர் மீது பட்டது. ஏர் கூலரில் இருந்து ஸ்ரீவாணி மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் தனது தாய் மீது கை வைத்து தூங்கிக்கொண்டு இருந்ததால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சிறிது தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களது மகன் அதிகாலை எழுந்து பார்த்த போது தாயும், சகோதரியும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்னுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×