என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- சகோதரர் விஜய் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
சென்னை:
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் பாஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான, சகோதரர் விஜய்க்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் விஜய் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி நகர், பேபி நகர் பகுதி.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் : எம்இஎஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் ரோடு, இன்விகான் பிளாட், டிடிகே நகர், ஜெருசேலம் நகர், சர்ச் சாலை, ரத்ன குமார் அவென்யூ, மருதம் குடியிருப்பு, ஏ.எஸ்.ராஜன் நகர், ஜிகே மூப்பனார் அவென்யூ, சிட்லபாக்கம் ஜோதி நகர், சிட்லபாக்கம் 1-வது மெயின் ரோடு, ராமசந்திரா சாலை, ரங்கநாதன் சாலை, கண்ணதாசன் தெரு மற்றும் அய்யாசாமி தெரு.
பல்லாவரம்: கடப்பேரி பச்சைமலை குடியிருப்பு வாரியம், டிபி மருத்துவமனை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎச் நியூ காலணி 13-14, 17-வது குறுக்கு தெரு, மல்லிகா நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்கேவி அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் சாலை, பங்காரு நகர்.
தரமணி: அதிபதி மருத்துவமனை, சிடிஎஸ் குடியிருப்பு (கிரியாஸ் அருகே), தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி நகர், பேபி நகர் பகுதி, சாஸ்திரி நகர், பார்க் அவென்யூ.
- மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
- மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மதுரை:
மதுரையில் இன்று இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பாண்டிகோவில் சுற்றுச் சாலை, கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர் சுற்றுச்சாலை வழியாக வழக்கமான பாதையில் செல்ல வேண்டும்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து மதுரை வரும் பேருந்துகள் விரகனூர் சந்திப்பில் இருந்து தென் கரை சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை, அண்ணாநகர் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் திருமங்கலம், கப்பலூர், சமயநல்லூர், வாடிப்பட்டி வழியாக செல்ல வேண்டும். மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை பொது மக்களின் கார், இருசக்கர வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்பட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி, கரையோரங்களில் குளிக்க 3-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் நேற்று வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 22 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்பட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி, கரையோரங்களில் குளிக்க 3-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரிசல் சவாரிக்கு தடை ஏதும் இல்லை. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் அவர்கள் அருவியில் குளிக்க தடைவிதிப்பால் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பால் தாசில்தார் பிரசன்ன மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், மணிவண்ணன் மற்றும் வருவாய் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
- தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் 5 ஆயிரம், 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 16 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 469 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 628 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையின் நீர்மட்டம் நேற்று 113.69 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
- "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.
சென்னை:
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
"புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம்...
- அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
சென்னை:
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
- பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது.
- தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில், திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனகசப்பு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கானது. பா.ம.க. மக்கள் இயக்கமாக உருவானது. அனைத்து மக்களுக்கும் போராட கூடிய கட்சி. இதில், பின்னடைவுகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக இருவரிடையே சில விஷயங்கள் நடக்கிறது.
பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது. பா.ம.க. தன்னை தற்போது புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை அந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக நான் உணர்கிறேன். அதற்குள் இருக்கும் நச்சு கிருமிகள் வெளியே சென்றுவிடும். மாற்று அரசியலை பா.ம.க. முன்னெடுக்கும். தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை.
- இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை என்பதால் இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள். எத்தனை மாநாடு போட்டாலும் இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடிதான் போய் நிற்க வேண்டும் என்றார்.
- எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.
- இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
சென்னை:
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்குபின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவான ஃபர்ஸ்ட் ரோர் என்ற தலைப்பில் படக்குழு வெளியிட்டது.
என் நெஞ்சில் குடியிருக்கும் என ரசிகர்களுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 165 ரன்கள் குவித்தது.
திருநெல்வேலி:
டிஎன்பிஎல் 2025 சீசனின் 18-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தது. லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 ரன்கள் எடுத்தார்.
நெல்லை அணி சார்பில் சோனு யாதவ், சச்சின் ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.
அதிகபட்சமாக அத்னன் கான் 26 ரன்னும், சோனு யாதவ் 23 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெல்லை அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணி, தொடர் தோல்விக்குப் பிறகு நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
கோவை அணி சார்பில் திவாகர் 3 விக்கெட்டும், புவனேஸ்வரன், சித்தார்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் வருத்தமடைந்தேன்.
- அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் வருத்தமடைந்தேன். மறைந்த செய்தியறிந்து மிகவும்
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






