என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
- தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மதுரை அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
திருநெல்வேலி:
டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த அதிக் உர் ரகுமான்-சரத்குமார் ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் அதிக் உர் ரகுமான் 30 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. 37 ரன்னுடன் சரத்குமார் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திருச்சி அணி சார்பில் சரவணகுமார், ஈஸ்வரன், டேவிட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.
- சென்னையில் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை.
- மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் 27.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆலந்தூர்: மேட்டுப்பாளையம், சந்திரன் தெரு, வண்டிக்காரன் சாலை, கோபாலகிருஷ்ணன் தெரு, விக்னேஷ்வரா தெரு, புது தெரு, மசூதி காலனி, பிள்ளையார் கோயில் தெரு, மதுரை வீரன் கோயில் தெரு, சாத்தானிபேட்டை 1வது தெரு, செங்கேனியம்மன் கோயில் 1வது தெரு, மார்கோ தெரு, மதுரை 3வது தெரு, மார்கோ தெரு, 3வது தெரு. புதுப்பேட்டை தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, மண்டி தெரு, நிதி பள்ளி தெரு, லப்பை தெரு, வேளச்சேரி சாலை, வேதகிரி தெரு சந்தை.
நந்தம்பாக்கம்: செயின்ட் தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் கோயில் தெரு, துளசிங்கபுரம் தெரு, கணபதி காலனி தெரு, கலைஞர் நகர் தெரு, வூட் க்ரீக் கவுண்டி தெரு, 60வது குவார்ட்டர்ஸ் தெரு, சைவம் பவன் தெரு, செயின்ட் பேட்ரிக் சர்ச்.
கொரட்டூர்: சுந்தர் தெரு, குபேரகணபதி தெரு, விஓசி தெரு, திருவள்ளுவர் தெரு, வர்னினர் தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, காக்கப்பள்ளம், எம்டிஎச் சாலை, ராஜா தெரு, டிஎம்பி நகர், அவ்வை தெரு, மாரியம்மன் கோயில் தெரு.
அடையாறு: சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்திரம் நகர், டிஏ.என்கிளேவ் ஆப்., விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர், விஜயா நகர் 1 முதல் 10வது தெரு, ராம் நகர் 1 முதல் 7வது தெரு, பை பாஸ் மெயின் ரோடு,அக்ஷ்யம் ஹோட்டல் முதல் மஹிந்திரா ஷோ ரூம் வரை.
கோட்டூர்புரம்: ரஞ்சித் ரோடு, மருதை அவென்யூ, சித்ரா நகர், வாட்டர் டேங்க் காலனி, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, நவாப் கார்டன், வெள்ளான் தெரு, தண்டாயுதபாணி 1 முதல் 2வது தெரு.
கே.கே.நகர்: கே.கே.நகர் 1 முதல் 12 செக்டார், ராஜாமன்னார் சாலை, ராமசுவாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசபாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1,9,11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகபுரம், 80 அடி சாலை.
பல்லாவரம்: 15 முதல் 16 தெரு புதிய காலனி, ஜிஎச், பிஎஸ்என்எல், மும்மூர்த்தி நகர், தர்கா சாலை, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஹைவே நகர், கரேட் வூஃப் நகர் ஒரு பகுதி, ஆபிசர் லேன், வீரன் சந்து, ராம் லிங்கம் தெரு, ஹரியன் நகர், ராணுவ முகாம், மல்லிகா தெரு, ராணுவ முகாம் தெரு, பரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு.
ஆவடி: ஜே.பி நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர், கிரின் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஓரகடம் சொசைட்டி.
சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் காந்தி நகர் சொசைட்டி, காசாகிராண்ட் செர்ரி பிக், ஆக்சிஜன் நகர் மரம், ஆத்தினி தெரு, ரேடியன்ஸ் மெர்குரி.
துரைப்பாக்கம்: ராஜு நகர், மேட்டுக்குப்பம், விஓசி தெரு, பிடிசி குடியிருப்பு, ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி கார்டன், சௌடேஸ்வரி நகர், சிடிஎஸ், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ, நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி, சேரி பகுதி சாலை, ஓஎம்ஆர், எம்ஜிஆர் தெரு, காளியம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி.
போரூர்: ஐயப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், தக்ஷின் அபார்ட்மெண்ட், குப்புசாமி நகர், அருணாசலம் ரோடு, காடுவெட்டி,வீரராகவபுரம் ,ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி.
- மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைத்தார்.
- சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று, நாளை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதற்காக இன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார்.
ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து காரில் வேலூர் நகருக்கு வரும் அவருக்கு சாலையின் இருபுறமும் நின்று கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில், 12 பேருக்கு பட்டா வழங்கி முதல்வர் தொடங்கி வைத்தார்.
12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இந்நிலையில், வேலூர் கெங்கநல்லூரில் திமுக சார்பில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் திறந்து வைத்தார். 700 கிலோ வெண்கலத்தால் நிறுவப்பட்ட கலைஞர் கருணாநிதி சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்
சிலை திறப்பை தொடர்ந்து 30 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
- நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல.
- உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?
"நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது என்றும், ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியிருக்கிறது என்றும், ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல், சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் பொம்மை முதலமைச்சரே...
கடந்த நான்காண்டுகளாக உங்களது ஏமாற்று மாடல் ஆட்சியில் ஆயிரக் கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு, பதிவுக் கட்டணங்கள் உயர்வு என்று அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா?
உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?
தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது 'சாத்தான் வேதம் ஒதுவது போல்' உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சேலம் மாநகர் மாவட்டத் தலைவராக கி. குமார் நியமனம்.
- சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க. சரவணன் நியமனம்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும் அக்கட்சியின் தலைவரும், ராமதாஸ் மகனுமான அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் மாறிமாறி மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை அறிவித்து வருகிறார்கள்.
இன்று காலை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வான அருளுக்கு பாமக இணை பொது செயலாளர் பதவி வழங்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர், செயலாளரை அறிவித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க. சரவணன் DME, இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின், சேலம் மாநகர் மாவட்டத் தலைவராக கி.குமார், BSc,. BL,. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள. பாட்டாளி மக்கள் கட்சியின், அனைத்து நிலை நிர்வாகிகளும், முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் சேலம் மாவட்டம் செல்வதாக அறிவித்தார். அவர் செல்வதற்கு ஒருநாள் முன்னதாக அருள் எம்.எல்.ஏ. நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்து, பிரார்த்தனை செய்தார்.
இது தொடர்பாக அருள் எம்.எல்.ஏ., உயிரிழந்தவர்களுக்குதான் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என தெரிவித்திருந்தார்.
- கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்களை மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2025-2026 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 25.06.2025 இன்று முதல் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, விண்ணப்பங்களை 29.06.2025 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடிபட்டார்.
- சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் தந்த வாக்குமூலம் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த முயன்றனர்.
ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாட்களாக தேடி வந்த நிலையில் சென்னையில் பிடிபட்ட நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவை, சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா கொகைன் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான்.
- ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது.
மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது.
அத்துடன் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
- மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான்.
- அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்.
வால்பாறையில் சில தினங்களுக்கு முன்னதாக சிறுமி ஒருவரை சிறுத்தை, தூக்கிக் கொண்டு சென்று தாக்கியது. பின்னர் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ராஜ கண்ணப்பன் "மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான். அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்" எனப் பதில் அளித்துள்ளார்.
மிருகங்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மோதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பதற்குப் பதிலாக மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான் என பதில் அளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
- தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






