என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலம் மாநகர் மாவட்ட தலைவர், செயலாளரை அறிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்
    X

    சேலம் மாநகர் மாவட்ட தலைவர், செயலாளரை அறிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்

    • சேலம் மாநகர் மாவட்டத் தலைவராக கி. குமார் நியமனம்.
    • சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க. சரவணன் நியமனம்.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும் அக்கட்சியின் தலைவரும், ராமதாஸ் மகனுமான அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் மாறிமாறி மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை அறிவித்து வருகிறார்கள்.

    இன்று காலை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வான அருளுக்கு பாமக இணை பொது செயலாளர் பதவி வழங்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.

    இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர், செயலாளரை அறிவித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க. சரவணன் DME, இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியின், சேலம் மாநகர் மாவட்டத் தலைவராக கி.குமார், BSc,. BL,. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள. பாட்டாளி மக்கள் கட்சியின், அனைத்து நிலை நிர்வாகிகளும், முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    அன்புமணி ராமதாஸ் சேலம் மாவட்டம் செல்வதாக அறிவித்தார். அவர் செல்வதற்கு ஒருநாள் முன்னதாக அருள் எம்.எல்.ஏ. நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்து, பிரார்த்தனை செய்தார்.

    இது தொடர்பாக அருள் எம்.எல்.ஏ., உயிரிழந்தவர்களுக்குதான் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என தெரிவித்திருந்தார்.

    Next Story
    ×