என் மலர்
நீங்கள் தேடியது "ராஜ கண்ணப்பன்"
- மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான்.
- அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்.
வால்பாறையில் சில தினங்களுக்கு முன்னதாக சிறுமி ஒருவரை சிறுத்தை, தூக்கிக் கொண்டு சென்று தாக்கியது. பின்னர் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ராஜ கண்ணப்பன் "மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான். அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்" எனப் பதில் அளித்துள்ளார்.
மிருகங்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மோதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பதற்குப் பதிலாக மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான் என பதில் அளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
- அன்பில் மகேஷ்-க்கு ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியானது.
- ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட இருந்தது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ்-க்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
- ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட இருந்தது. இதற்கிடையே, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்துள்ளதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.






