என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanithi"

    • மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைத்தார்.
    • சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று, நாளை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இதற்காக இன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார்.

    ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கிருந்து காரில் வேலூர் நகருக்கு வரும் அவருக்கு சாலையின் இருபுறமும் நின்று கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில், 12 பேருக்கு பட்டா வழங்கி முதல்வர் தொடங்கி வைத்தார்.

    12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

    சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

    இந்நிலையில், வேலூர் கெங்கநல்லூரில் திமுக சார்பில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் திறந்து வைத்தார். 700 கிலோ வெண்கலத்தால் நிறுவப்பட்ட கலைஞர் கருணாநிதி சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்

    சிலை திறப்பை தொடர்ந்து 30 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

    கருணாநிதி பிறந்தநாள் விழா ஜூன் மாதம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பா ளரும், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிற்கு 50 மின் விசிறிகள் மற்றும் 4 வாட்டர் ஹீட்டர்களை வழங்கினார்.

    இதில், மாநகரட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மருத்துவமனை டீன் நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன்,  மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிந்திரன், கவுன்சிலர் விஜயலட்சுமி,

    மாவட்ட பிரதிநிதி கதிரேசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடந்து அமைச்சர் கீதாஜீவன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக வரலாற்றில் இடம்பெற்ற தலைவருமான கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கொண்டாடப்பட்ட உள்ளது. 3-ந் தேதி கலைஞரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக அனைத்து துறைகளும் தயாராகி வருகிறது. தி.மு.க சார்பிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    ×