என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • மடிப்பாக்கம் ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    எழும்பூர்: ராமானுஜம் தெரு, விநாயகமுதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால்சாவடி, மண்ணடி, வால்டாக்ஸ் ரோடு, மரத்தடி தெரு, அம்மன் கோவில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, வடக்கு சுவர் சாலை, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லா ஷாகிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, முத்தையா தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரிய நாய்க்கன் தெரு, சின்னநாயக்கன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, PKG ஏரியா, தாண்டவராயன் தெரு, அருணாச்சலம் தெரு, திருப்பலி தெரு, KN அக்ரஹாரம், சின்ன தம்பி தெரு, கேஎன் டேங்க் தெரு, பெத்தநாயக்கன் தெரு, வீரப்பன் தெரு, என்எஸ்சி போஸ் ரோடு, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, ஜட்காபுரம் கந்தப்பா தெரு, ஏல கந்தப்பா தெரு, இடையபாளையம், பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு, ரமணன் சாலை, ஆவுடையப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காளத்திப்பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானை வாசல் தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, ஆடியப்பா தெரு, குடோன் தெரு, கோவிந்தப்பா தெரு, எம்.எஸ். நகர், ஹவுசிங் போர்டு, கன்னையா நாயுடு தெரு, படவட்டம்மன் தெரு, டிஏ நாயுடு தெரு, தெரு லேன், பெத்தநாயக்கன் தெரு.

    தண்டையார்பேட்டை பிரிவு: கும்மாளம்மன் கோவில் தெரு, ஜிஏ சாலை, TH சாலையின் ஒரு பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, விபி கோவில் தெரு, ரெய்னி மருத்துவமனை, தாண்டவராயன் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, நைனியப்பன் தெரு, பெருமாள்கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.

    நீலாங்கரை: கேனால் ரோடு மெயின் ரோடு, பழைய கணேஷ் நகர் 1 முதல் 7வது தெரு, மகாத்மா காந்தி 1 முதல் 12வது தெரு, காமராஜர் நகர், கோபிநாத் அவென்யூ 1 முதல் 3வது தெரு, அண்ணா தெரு, எம்ஜிஆர் நகர், பாரதி தெரு, ராமலிங்கம் நகர், கற்பக விநாயகர் 7வது மெயின் ரோடு, நாராயண நகர், விவேகானந்தா தெரு, செந்தாமரை தெரு.

    அடையாறு பிரிவு: கஸ்தூரி பாய் நகர், கற்பக விநாயகா நகர், கிளாசிக் என்கிளேவ், ராயல் என்கிளேவ், சரவணா நகர், ராஜன் நகர், பிரார்த்தனா அவென்யூ, சேரன் நகர் 1வது மற்றும் 2வது அவென்யூ, வெட்டுவாங்கணி, பிருந்தாவன் நகர்.

    கிண்டி பிரிவு: மடிப்பாக்கம் ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், அம்புகா நகர், எல்ஐசி நகர், லட்சுமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, முவரசம்பேட்டை ஐயப்பா நகர், காந்திபுரம், மேடவாக்கம் சாலை, கேஜிகே நகர், விஷால் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயலட்சுமி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, ராகவ நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், சபரி சாலை, தெய்வானை நகர், மதுரகாளி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு, புழுதிவாக்கம், வெங்கட்ராமன் தெரு, பாரத் தெரு, ராஜா தெரு, திலகர் அவென்யூர், ஆண்டவர் தெரு, ஓட்டேரி சாலை, EVR காலனி, ராவணன் நகர், சர்ச் தெரு, கலைமகள் தெரு, முருகப்பா நகர், ஸ்ரீதரன் தெரு, அம்மன் நகர், செங்கலையம்மன் தெரு, இந்து காலனி, கணேஷ் நகர், என்எஸ்சி போஸ் சாலை.

    ஐடி காரிடார்: எழில் நகர், கண்ணகி நகர், விபிஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன்குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்ஜிகே அவென்யூ, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், ஈஞ்சம்பாக்கம், பூம்புகார் நகர்.

    • கற்பிட்டி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மீனவர்களை கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.

    கற்பிட்டி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் சென்ற படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

    • இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெட்டிக்கொலை.
    • 4 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலை செய்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

    நேற்றிரவு அப்பாவுக்கும் மகனுக்கும்  இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான சண்முகவேலிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரும் ஒரு காவலரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தகராறு ஏற்பட்ட இருவரையும் அழைத்து பேசியுள்ளார். அவர்களை சமாதானம் செய்து வைத்துவிட்டு திரும்பியுள்ளார். அப்போது ஒருவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் மீது பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    • புரிந்துணர்வு ஒப்பந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவு பெற உள்ளது.
    • தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ரெயில்வே அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரெயில் சேவையை இணைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவு பெற உள்ளது. பறக்கும் ரெயில் திட்டத்தை சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் பணிகள் நடப்பாண்டுக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ரெயில்வே அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

    பறக்கும் ரெயில் தண்டவாளங்கள், பாலங்கள், சமிக்ஞை, மின்மயமாக்கல், நிலம், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழக அரசு பராமரிக்கும்.

    சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி MRTS வழித்தடம் வரை அனைத்தும் சென்னை மெட்ரோ நிர்வாகம் வசம் வரும்.

    • நாளை முதல் மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது.
    • அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை, இலக்கிய வளமை, கலைப் பன்மை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்குக் கடத்துவதே திராவிட மாடல் அரசின் தலையாய கடமை!

    50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்களுடன் நாளை (ஆகஸ்ட் 6) முதல், மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது.

    அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • பட்டியலின மக்களிடம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வெறும் 165 நாள்களில் அறிக்கை தாக்கல்.
    • வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை அதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் நாகமோகன் தாஸ் ஆணையம் அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் தாக்கல் செய்திருக்கிறது.

    பட்டியலின மக்களிடம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வெறும் 165 நாள்களில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பட்டியலின மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் போதிலும், அவர்களில் பல சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்காத நிலையில், அத்தகைய சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. இது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஆணையிட்டது.

    அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.என். நாகமோகன் தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கடந்த பிப்ரவரி 21-ஆம் நாள் கர்நாடக அரசு அமைத்தது. அன்றிலிருந்து சரியாக 165-ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. நாகமோகன்தாஸ் ஆணையத்தின் அர்ப்பணிப்பு உணர்வையும், வேகத்தையும் பாராட்டியே தீர வேண்டும்.

    ஆணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே பணிகளைத் தொடங்கிய நீதியரசர் நாகமோகன்தாஸ், அடுத்த 35-ஆம் நாள், அதாவது மார்ச் 27-ஆம் நாள், பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகள் இல்லை என்றும், பட்டியலினத்தில் உள்ள 101 சாதிகளின் மக்கள்தொகை விவரங்கள் துல்லியமாக திரட்டப்பட வேண்டும் என்பதால், அதற்கான பட்டியலின மக்களை சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என்று கோரி அரசிடம் இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்தார்.

    அதை ஆய்வு செய்த கர்நாடக அரசு, நாகமோகன்தாஸ் ஆணையத்தின் அனைத்துக் கோரிக்கைகளையும் அதே நாளில் ஏற்றதுடன், அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்தது. அதன்பின் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்த ஆணையம், மே 5-ஆம் நாள் தொடங்கி, ஜூலை 6-ஆம் நாள் வரை 63 நாள்களில் கணக்கெடுப்பை நடத்தி முடித்து, அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    இந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 101 பட்டியலின சாதிகளைச் சேர்ந்த 27 லட்சத்து 24,768 குடும்பங்களில் உள்ள ஒரு கோடியே 7 லட்சத்து 1982 பேரின் விவரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. இது ஓர் இமாலயப் பணி என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

    கர்நாடக அரசும் அறிக்கையை பெற்றுக் கொண்டு சும்மா இருக்கவில்லை. ஆகஸ்ட் 4-ஆம் தேதியான நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை மறுநாள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்கவுள்ளது. கர்நாடகத்தில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் அம்மாநில அரசும், ஆணையங்களும் காட்டும் அர்ப்பணிப்பு உணர்வைப் பார்க்கும் போது நமக்கும் தான் ஒன்றுக்கும் உதவாத ஓர் அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் வாய்த்திருக்கிறதே என்ற ஏக்கப் பெருமூச்சும், கோபமும்தான் எழுகிறது.

    சமூகநீதியின் அடிப்படை அதை தாமதிக்காமல் வழங்குவதுதான் என்ற அடிப்படையை புரிந்து கொண்டு கர்நாடக அரசு செயல்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ, எவருக்கும் தவறிக் கூட சமூக நீதி வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. பாவம், தமிழ்நாட்டு மக்கள்.

    பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து சரியாக 369-ஆம் நாளில் அதற்கான பரிந்துரை அறிக்கையை கர்நாடக அரசு பெற்றிருக்கிறது. ஆனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1224 நாள்கள் ஆகும் நிலையில் தமிழக அரசும், ஆணையமும் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ஆணையம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அதைக் காட்டி வன்னியர்களை திமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

    கர்நாடகத்தில் நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, சரியாக 165-ஆம் நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முழுமையான பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதியரசர் பாரதிதாசன் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு இன்றுடன் 937 நாள்களாகின்றன. இதுவரை 6 முறை காலநீட்டிப்பு வாங்கியதைத் தவிர வேறு எதையும் ஆணையம் செய்யவில்லை.

    பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகள் இல்லை என்பதை 35 நாட்களில் கண்டறிந்த நாகமோகன் ஆணையம், அதை கர்நாடக அரசிடம் இடைக்கால அறிக்கை மூலம் தெரிவித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்றே அனுமதி பெறுகிறது. ஆனால், தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான தரவுகள் இல்லை என்பதை கண்டறியவே ஆணையத்திற்கு 30 மாதங்கள் ஆகியுள்ளது.

    சமூகநீதி சார்ந்து அரசால் அமைக்கப்படும் அனைத்து ஆணையங்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை என்ற தனது அதிகாரத்தை கர்நாடக ஆணையம் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு கூறிவரும் பொய்யை மறுப்பதற்கு கூட திராணியில்லாமல் ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

    பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தாலும், பட்டியலின மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்கிறது; இல்லாத வாய்ப்புகளைக் கூட உருவாக்கிக் கொள்கிறது. இந்த சமூகநீதி முயற்சிகளுக்கு அங்கு அமைக்கப்பட்ட ஆணையங்களும் துணை நிற்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைக் கூட பயன்படுத்த மறுக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சமூகநீதியின் எதிரி என குற்றஞ்சாட்டி வருகிறேன்.

    உண்மையாகவே சமூகநீதி என்றால் என்ன? என்பது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மு.க.ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். சமூகநீதிக்கு மேலும், மேலும் துரோகம் செய்யாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு 21-ம் தேதி மதுரையில் நடைபெறும்.
    • மாநாட்டுக்கான பணிகள் சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வரும் 25-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது.

    கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.

    மாநாடு நடைபெறும் 25-ம் தேதியை தொடர்ந்து 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியதிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என போலீசார் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு 18-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிக்குள் ஏதோ ஒரு தேதியில் நடைபெறும். எந்த தேதி என்பதை தலைவர் விஜய் அறிவிப்பார் என புஸ்ஸி ஆனந்த் நேற்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வரும் 21-ம் தேதி மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

    மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25-ம் தேதி மதுரையில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

    ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால். காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது. எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு ஆகஸ்டு 21-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.00 மணி அளவில் ஏற்கனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இதற்கான பணிகள், ஏற்கனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை.
    • மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனை.

    தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் இன்று (5.8.2025) பால் உற்பத்தியை அதிகரிக்க 6084 பால் கூட்டுறவு சங்க செயலாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடியதுடன், ஆவின் முகவர்களுக்கு உறைகலன், ஆவின் பாலகங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது.

    சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் ஆணைக்கிணங்க பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் சென்னை மாநகரிலுள்ள 21 ஆவின் ஜங்சன் பாலகங்கள் புனரமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 12 பாலகங்களில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க பல்வேறு விற்பனை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சென்னையில் பால் உப பொருட்கள் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் சுமார் 30% அதிகரித்துள்ளது.

    மே 2025-ல் ரூ.29 கோடி, ஜூன் 2025-ல் ரூ.30.30 கோடி மற்றும் ஜூலை 2025-ல் ரூ.32.35 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்விற்பனையானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக அரசு அமையும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட லேப்டாப் கொடுக்கப்படும். இந்த திட்டம் தொடரும்.
    • மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அம்மா மினி கிளினிக் திட்டம் தொடரும்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பேரணி மேற்கொண்டு வருகிறார். இன்று தென்காசி குற்றாலத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் கூறியதாவது:-

    இரண்டு முறை 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்தபோது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்துள்ளோம். 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாருகின்ற சூழ்நிலையை உருவாக்கி தந்தோம்.

    வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசாங்கம்.

    விவசாயிகளுக்கென அதிமுக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. தற்போதுள்ள திமுக அரசு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கிறதா?

    கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தியதுதான் திமுக அரசின் சாதனை.

    தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரைக்கும் பாதுகாப்பு இல்லை. கஞ்சா விற்காத இடமே இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.

    சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகத்தில் இனிமேல் பாதுகாப்பு கிடையாது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    அதிமுக ஆட்சியில் விலையில்லா மடிக்கணினி கொடுத்தோம். அதை திமுக அரசு நிறுத்திவிட்டது. இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி தேவை?. 10 ஆண்டுகளில் 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 7500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாணவச் செல்வங்கள் அறிவுப்பூர்வமான கல்வி படிக்கும் சூழ்நிலையை அமைத்து கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். அதை நிறுத்திவிட்டாங்க.

    மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக அரசு அமையும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட லேப்டாப் கொடுக்கப்படும். இந்த திட்டம் தொடரும்.

    அம்மா மினி கிளினிக். இதிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி. எங்கெல்லாம் ஏழை மக்கள் வசிக்கிறார்களோ, அந்த பகுதியை தேர்ந்தெடுத்து அம்மா மினி கிளிக்கை திறந்தோம். அதையும் மூடியதுதான் இந்த ஸ்டாலின் ஆட்சி. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அம்மா மினி கிளினிக் திட்டம் தொடரும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
    • துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணமாக காட்டி அனுப்பியதாக தகவல்.

    கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பியுள்ளார்.

    துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணமாக காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக,

    சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர்.

    இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில் சட்டப்பேரவையில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.

    இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். மேலும், பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார். வேந்தரின் முன் அனுமதியின்றி, கவுரவப் பட்டங்கள் வழங்க இயலாது. பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார்.

    துணைவேந்தர் தேடல் குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர்.

    குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார் உள்ளிட்ட ஷரத்துக்கள் மசோதாவில் இருந்தன.

    இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.

    • திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்க இது என்ன தேர்வா (Exam)?.
    • நிறையும், குறையும் சமமாக உள்ளது எனச் சொல்லிட்டேன்.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இன்று உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் இருக்கிறது.

    இந்த ஆட்சியில் நிறையும், குறையும் உள்ளது. சாலையில் வாக்கிங் செல்ல முடிகிறதா? செயின் பறிக்கிறது... தினசரி என்ன நடக்கிறது என்பதை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த நிலைமை மாற வேண்டும். சட்டம் ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திருட்டுகள், கொலைகள் நடக்காது.

    ஆணவக் கொலைகள், லாக்அப் கொலைகள். விசாரணை என்று அழைத்துச் சென்று அடித்து கொல்கிறார்கள். இதெல்லாம் மனசுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதெல்லாம் மாற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டம்- ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதை சரி செய்ய வேண்டும் என இந்த பத்திரிகையாளர்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

    திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்க இது என்ன தேர்வா (Exam)?. நிறையும், குறையும் சமமாக உள்ளது எனச் சொல்லிட்டேன். 50-க்கு 50 வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆணவக் கொலைக்கு அடிப்படையே ஜாதிதான். எத்தனை பெரியாரும், எத்தனை பாரதியாரும் வந்து சொன்னாலும் இங்கு ஜாதி வெறி இன்னும் மறையவில்லை. அந்த ஜாதி வன்மம்தான் கொலை வரைக்கு செல்கிறது. ஒட்டுமொத்த மக்களின் மனநிலை மாறினால்தான் இது மாறும்.

    இவ்வாறு பிரேமலதாக கூறினார். 

    • சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
    • மழைக்காலம் தொடங்கும் முன்பே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    மழைக்காலம் தொடங்கும் முன்பே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ×