என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தலை துண்டித்து கொடூர கொலை
- இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெட்டிக்கொலை.
- 4 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலை செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
நேற்றிரவு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான சண்முகவேலிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரும் ஒரு காவலரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தகராறு ஏற்பட்ட இருவரையும் அழைத்து பேசியுள்ளார். அவர்களை சமாதானம் செய்து வைத்துவிட்டு திரும்பியுள்ளார். அப்போது ஒருவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் மீது பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.






