என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் முதற்கட்டமாக 12 ஆவின் ஜங்சன் பாலகங்கள் புனரமைப்பு: அமைச்சர் தகவல்
    X

    சென்னையில் முதற்கட்டமாக 12 ஆவின் ஜங்சன் பாலகங்கள் புனரமைப்பு: அமைச்சர் தகவல்

    • சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை.
    • மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனை.

    தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் இன்று (5.8.2025) பால் உற்பத்தியை அதிகரிக்க 6084 பால் கூட்டுறவு சங்க செயலாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடியதுடன், ஆவின் முகவர்களுக்கு உறைகலன், ஆவின் பாலகங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது.

    சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் ஆணைக்கிணங்க பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் சென்னை மாநகரிலுள்ள 21 ஆவின் ஜங்சன் பாலகங்கள் புனரமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 12 பாலகங்களில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க பல்வேறு விற்பனை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சென்னையில் பால் உப பொருட்கள் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் சுமார் 30% அதிகரித்துள்ளது.

    மே 2025-ல் ரூ.29 கோடி, ஜூன் 2025-ல் ரூ.30.30 கோடி மற்றும் ஜூலை 2025-ல் ரூ.32.35 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்விற்பனையானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×