என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.
- எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பாதயாத்திரை.
சென்னை:
தமிழகம் முழுவதும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வெறுப்பு, அரசியலுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த பாத யாத்திரை சென்னையில் நாளை (2-ந் தேதி) காலை 7 மணியளவில் அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மேதின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடா ஓட்டல் சந்திப்பு, லாங்ஸ் கார்டன், புதுப்பேட்டை, பாந்தியன் ரோடு வழியாக அருங்காட்சியகத்தை அடைகிறது. அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரகாரத்தை நிறைவு செய்கிறார்கள்.
இதேபோல் நாளை மாநிலம் முழுவதும் 77 இடங்களில் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சியில் திருநாவுக்கரசர் தலைமையிலும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலும் சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையிலும் இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலும் பாத யாத்திரை நடக்கிறது.
- முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
விருதுநகர்:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.
இதையடுத்து மதுரை, விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் இரவு தங்கினார்.
இன்று காலை அவர் விருதுநகர் புறப்பட்டார். மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2,111 நபர்களுக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம் என 2,846 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணம் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:-
தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் இந்த முறை பரிசு தொகையை மட்டும் ரூ.37 கோடியாக உயர்த்தி உள்ளார். இந்தாண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளிவில் வெற்றி பெற்றவர்களுக்கு இங்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் விளையாட்டு வீரர் சாதனையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் உலகளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றது. தெற்காசியாவிலேயே சென்னையில் எப்-4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். குஜராத், பஞ்சாப், கோவா, அசாம் மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
கடந்த 3 வருடங்களில் 7 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கம், 2 வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிதந்துள்ளார். இன்றைக்கு இந்திய ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியை அவர் செய்து வருகிறார்.
விளையாட்டு துறையில் சாதிக்கத்துடிக்கும் மகளிருக்கு ஊக்கமளிக்கின்ற வகையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பதக்கங்களை வென்று வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மற்றும் விருதுநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- இன்று மாலை அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆவார்.
- பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை.
சென்னை:
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்தபோது அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. செரிமான பிரச்சனையும் இருந்தது. இதைத்தொடர்ந்து நெஞ்சுவலியும் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரஜினி காந்தை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர்.
நேற்று இரவு 8 மணியள வில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்பல்லோ ஆஸ்பத்திரி யின் இருதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய்சதீஷ் தலைமையிலான டாக்டர் குழுவினர் ரஜினி காந்துக்கு என்னென்ன மருத்துவ பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தனர்.
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு சீரான ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அது தொடர்பான பரிசோதனை களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ரஜினி காந்துக்கு வெறும் வயிற்றில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனை கள் இன்று காலை 6 மணி அளவில் மேற்கொள்ளப் பட்டன. இதன்பிறகு காலை உணவை முடித்த பிறகும் பரிசோதனைகள் செய்யப் பட்டன.
இதன் தொடர்ச்சியாக இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை கண்டறிவ தற்கான "ஆஞ்சியோகி ராம்" பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் அடிவயிற்றில் ரத்த நாளத்தில் லேசான வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை சரி செய்வதற்காக ஆஞ்சியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ரத்தக் குழாய் களில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டன. இந்த சிகிச்சை முடிந்ததும் ரஜினிகாந்த் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் பின்னர் ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ள ரஜினிகாந்த் இன்று மாலை அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆவார் என்று தெரிகிறது.
ரஜினிகாந்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக போரூர் ராமச் சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்ட அவர் சிங்கப்பூருக்கு சென்றும் உயர் சிகிச்சை பெற்றார்.
அப்போது ரஜினி காந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் அடி வயிற்றில் வீக்கமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டாக்டர்கள் கூறும்போது,
"ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் உள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்துக்கு பெரிய அளவில் உடல்ந லக்குறைவு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர் அமெ ரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பி இருந்தார். உடல் நிலையை கருத்தில் கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் பிரவே சம் செய்வதையும் அவர் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
- 16 இடங்களில் 10 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
- மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுகிறது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால், 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ''ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு டிஜிபி கொடுத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, கடந்த ஜனவரி 5-ந்தேதி இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஏற்கனவே டிஜிபி விதித்த நிபந்தனை எதிர்காலத்துக்கும் பொறுந்தும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது, இந்த ஐகோர்ட்டின் பொறுமையை சோதிக்கக்கூடாது'' என்று கருத்து தெரிவித்தார்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல், மொத்தம் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. 16 இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் பரிசீலனையில் உள்ளது என்றார். உடனே நீதிபதி அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 16 இடங்களில் 10 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மாங்காடு, கொரட்டூர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மேடவாக்கம், சேலையூர், கோவை ரத்தினபுரி, தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் ஆகிய இடங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று போலீஸ் தரப்பு வக்கீல் முகிலன் கூறினார்.
மேலும், மாங்காடு, ரத்தினபுரி ஆகிய இடங்களில் உள்ள அமிர்தாவித்யாலாயா பள்ளி நிர்வாகமும், கொரட்டூரில் நல்லிக்குப்புசாமி விவேகானந்தா பள்ளி நிர்வாகமும் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தை தங்கள் பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி வழங்கவில்லை. மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுகிறது. சேலையூரில் பஸ் செல்லும் மெயின் ரோட்டில் கேட்பதால் அனுமதி வழங்கவில்லை. குலசேகரப்பட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு சாயர்புரத்தில் அனுமதி வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர்கொள்கை நிலைபாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கக்கூடாது. பொது சாலை என்பது பொதுமக்களுக்குத்தான். தனி நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. அதனால், இந்த காரணத்தை கூறி அனுமதி மறுக்கக்கூடாது. ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து நிபந்தனையுடன் கடந்த ஜனவரி மாதம் இந்த ஐகோர்ட்டு விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால், அந்த நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலகத்துக்கு அனுமதி வழங்கவேண்டும். எதிர்காலத்தில், அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது.
மேலும், மாங்காடு, ரத்தினபுரி, கொரட்டூர் பகுதிகளில் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் வாங்கிக் கொடுத்தால், அங்கு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கும், பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் அனுமதி வழங்கவேண்டும். சாயர்புரத்தில் வருகிற 20ந்தேதி ஊர்வலம் செல்ல முடிவு செய்துள்ளதால், அன்று அனுமதி வழங்கவேண்டும். கடந்த ஆண்டு சேலையூரில் ஊர்வலம் நடத்தவில்லை. அதனால், கடந்த ஆண்டு நடந்த இடமான சிட்லபாக்கத்தில் அனுமதி கேட்டால், அவர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவேண்டும். மேடவாக்கத்தில் மாற்று வழியில் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
- விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
- ரூ.3.85 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள்
விருதுநகர்:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.
இதையடுத்து மதுரை, விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வருகை தந்தார்.
துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக வருகை தந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர். இதையடுத்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் இரவு தங்கினார்.
இன்று காலை அவர் விருதுநகர் புறப்பட்டார். மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உதயநிதி ஸ்டாலி னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2,111 நபர்களுக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம் என 2,386 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பின்னர் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணம் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழா நிறைவடைந்ததும் மீண்டும் மதுரை வருகை தந்த அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மற்றும் விருதுநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ரஜினியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன்.
- ரஜினி விரைவில் வீடு திரும்புவார்.
சென்னை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார்.
ரஜினியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன்.
வெறும் வயிற்றில் வரவேண்டும் என்பதால் நேற்று இரவே மருத்துவமனைக்கு வர வைத்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர் என்று கூறினார்.
இதற்கிடையே ரஜினிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.
- சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
- போலீஸ் சூப்பிரண்டு யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு.
கோவை:
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுதருமாறு கூறி கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்றவழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை விவரங்களை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
- ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- அதிகபட்சமாக 06.09.2024 அன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 06.09.2024 அன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 30,99,397 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 7,319 பயணிகள், குழு பயணச்சீட்டு(Group Ticket) முறையை பயன்படுத்தி 7,149 பயணிகள், க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகள், மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,90,192 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளது.
- தவ்வைச் சிற்பம் பல்லவர் கால சிற்பக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
- வடமொழியில் ஜேஷ்டா என்றும் அழைக்கப்படும் தெய்வமாகும்.
செஞ்சி:
செஞ்சி அருகே உள்ளது அப்பம்பட்டு கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி வாசுதேவன் ஆகியோர் சமீபத்தில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வைச் சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுபற்றி ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:-
அப்பம்பட்டு ஏரிக்கரையில் பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் காளி அம்மன் சன்னதியில் உள்ள சிற்பத்தை ஆய்வுசெய்தோம். அந்தச் சிற்பம் மூத்ததேவி, தவ்வை என்றும் வடமொழியில் ஜேஷ்டா என்றும் அழைக்கப்படும் தெய்வமாகும்.
கரண்ட மகுடம், குழையும் காதணிகள் மற்றும் கழுத்து, கைகள், கால்களில் அழகிய அணிகலன்களும் இடையை மேகலை எனும் அணிகலனும் அழகு செய்கின்றன.
இரண்டு கால்களையும் தொங்கவிட்டு திண்டின் மீது அமர்ந்த நிலையிலும் வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் செல்வக் குடத்தின் மீது வைத்தும் தவ்வை காட்சியளிக்கிறாள்.
மிகுந்த கலையம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ள இந்த தவ்வைச் சிற்பம் பல்லவர் கால சிற்பக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
இதன் காலம் கி.பி.8-9 ம் நூற்றாண்டு ஆகும். 1200 ஆண்டுகளைக் கடந்தும் அப்பம்பட்டு கிராமத்தில் தமிழர்களின் தாய் தெய்வமான தவ்வை (காளி அம்மன்) வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
செஞ்சிப் பகுதியில் பல்வேறு இடங்களிலும் தவ்வைச் சிற்பங்கள் காணக்கிடைப்பது இப்பகுதியில் காளி அம்மன் தெய்வத்தின் வழிபாடு பல்லவர் காலத்தில் சிறந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
- 16 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
நெல்லை:
ஆயுதபூஜை வருகிற 11-ந்தேதி(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு பயணிகள் செல்வதற்கும், அங்கிருந்து மீண்டும் விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கும் ஏதுவாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்று ஆயுதபூஜை சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் தென்னக ரெயில்வே சார்பில் வெளியாகும் என்று பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதன்படி கன்னியாகுமரி-சென்னை தாம்பரம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரெயில் இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த ரெயில் விழுப்புரம், விருத்தாச்சலம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக குமரிக்கு இயக்கப்படுகிறது.
வருகிற 10 மற்றும் 12-ந்தேதிகளில் இரவு 9.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 11 மற்றும் 13-ந்தேதிகளில் மாலை 4.30 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறது. மொத்தம் 16 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோலார்பேட்டை, சேலம்,கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை வழியாக 17 பெட்டிகளுடன் ஒரு முறை ரெயில் இயக்கப்பட உள்ளது.
அந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து 9-ந்தேதி மாலை 7 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 10-ந்தேதி இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படு கிறது.
இதேபோல் அருப்புக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரெயிலானது சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில் சென்னையில் இருந்து 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 9-ந்தேதி மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படுகிறது.
- பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு அங்குள்ள தங்க கோபுரம் மற்றும் ராஜேகோபுரத்தை தரிசனம் செய்வது வழக்கம்.
- இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ராஜகோபுரத்தில் சேதம் என்ற புகைப்படம் வேகமாக பரவியது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானைப்பாதை மட்டுமின்றி, விரைவாக செல்ல ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு அங்குள்ள தங்க கோபுரம் மற்றும் ராஜேகோபுரத்தை தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு ஜன.27ம் தேதி பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து 48 நாட்கள் நடந்த மண்டல பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ராஜகோபுரத்தில் சேதம் என்ற புகைப்படம் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது 5 கோபுர கலசங்களுக்கு இடையில் இருக்கும் அலங்கார வளைவு உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் மிகவும் வேதனையடைந்தனர். விரைவில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம்.
- பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.






