என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நடிகர் ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை: நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தகவல்
- இன்று மாலை அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆவார்.
- பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை.
சென்னை:
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்தபோது அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. செரிமான பிரச்சனையும் இருந்தது. இதைத்தொடர்ந்து நெஞ்சுவலியும் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரஜினி காந்தை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர்.
நேற்று இரவு 8 மணியள வில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்பல்லோ ஆஸ்பத்திரி யின் இருதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய்சதீஷ் தலைமையிலான டாக்டர் குழுவினர் ரஜினி காந்துக்கு என்னென்ன மருத்துவ பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தனர்.
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு சீரான ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அது தொடர்பான பரிசோதனை களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ரஜினி காந்துக்கு வெறும் வயிற்றில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனை கள் இன்று காலை 6 மணி அளவில் மேற்கொள்ளப் பட்டன. இதன்பிறகு காலை உணவை முடித்த பிறகும் பரிசோதனைகள் செய்யப் பட்டன.
இதன் தொடர்ச்சியாக இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை கண்டறிவ தற்கான "ஆஞ்சியோகி ராம்" பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் அடிவயிற்றில் ரத்த நாளத்தில் லேசான வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை சரி செய்வதற்காக ஆஞ்சியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ரத்தக் குழாய் களில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டன. இந்த சிகிச்சை முடிந்ததும் ரஜினிகாந்த் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் பின்னர் ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ள ரஜினிகாந்த் இன்று மாலை அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆவார் என்று தெரிகிறது.
ரஜினிகாந்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக போரூர் ராமச் சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்ட அவர் சிங்கப்பூருக்கு சென்றும் உயர் சிகிச்சை பெற்றார்.
அப்போது ரஜினி காந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் அடி வயிற்றில் வீக்கமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டாக்டர்கள் கூறும்போது,
"ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் உள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்துக்கு பெரிய அளவில் உடல்ந லக்குறைவு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர் அமெ ரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பி இருந்தார். உடல் நிலையை கருத்தில் கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் பிரவே சம் செய்வதையும் அவர் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்