என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புதிய ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும்.
    • செங்குத்தான தூக்குப்பாலம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

    மண்டபம்:

    தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் நிலப்பரப்பையும், பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1914-ம் ஆண்டு ரெயில் பாலம் கட்டப்பட்டது.

    நூற்றாண்டுகளை கடந்த இந்த ரெயில் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து அவ்வப்போது தடைபட்டது.

    பாம்பன் தீவில் உள்ள ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சிரமமடைந்தனர்.

    இந்தநிலையில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட என்ஜினீயர்கள் மேற்பார்வையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகலாக இப்பணியில் ஈடுபட்டனர். புதிய ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும்.

    கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரம் கொண்ட புதிய ரெயில் பாலத்தை 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதிய ரெயில் பாலத்தின் நடுவே நவீன வசதியுடன் செங்குத்தான தூக்குப்பாலம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த தூக்கு பாலத்தை மனித உழைப்பின்றி மோட் டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தூக்குப் பாலத்தை 3 நிமிடத்தில் திறந்து 2 நிமிடத்தில் மூட லாம்.

    இதே போல் தூக்குப்பா லம் அருகிலேயே ஆப்பரேட்டர் அறை, மின்மாற்றி அறை அமைக்கப்பட்டுள்ளன. 4 வருட தீவிர கட்டுமான பணிக்கு பின் தற்போது பால பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    புதிய ரெயில் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்யும் வகையில் கடந்த மாதம் சோதனை ரெயில் ஓட்டம் மற்றும் தூக்கு ரெயில் பாலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    பாம்பன் புதிய ரெயில் பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    அதற்கேற்ற வாறு தற்போது பாலப்பணிகள் முடிவடைந்துள்ளதால் அதற்கான திறப்பு விழா குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தென்னக ரெயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஷ்தவா நேற்று புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார்.

    மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மண்ணின் மைந்தருமான அப்துல்கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15-ந்தேதி பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து நாட்டுக்கு அர்பணிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


    இதற்கான விழா பாம்பனில் நடைபெற உள்ளது. மேடை அமைக்கும் இடம், ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான ஹெலிபேடு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்னக ரெயில்வே மேலாளர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், வரலாறு சிறப்பு வாய்ந்த புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க பாம்பன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

    இருப்பினும் பிரதமர் விழாவில் பங்கேற்றால் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த மாதம் இறுதிக்குள் புதிய ரெயில் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    • சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.56 ஆயிரத்து 960-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

     

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.56 ஆயிரத்து 960-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:

    06-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    05-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    04-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    03-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880

    02-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800 

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    05-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    04-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    03-10-2024- ஒரு கிராம் ரூ. 101

    02-10-2024- ஒரு பவுன் ரூ. 101

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழந்தனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழந்தனர். மேலும் அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெரினா கடற்கரையில் 15 லட்சம் மக்கள் கூடியதால் கடுமையான போக்குவரத்து.
    • கூட்ட நெரிசல், வெப்பம் காரணமாக ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ராணுவ விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அதைபோல் கடற்கரையிலும் கூட்டம் அலைமோதியது.

    கடுமையான வெயில் மற்றும் கூட்டம் நெரிசல் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிப்பதாவது:-

    சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. குற்றிப்பிட்டுள்ளார்.

    பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

    • விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
    • குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவி வந்தது. இரவிலும் கடுமையான அனல் காற்றடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    கடந்த 2 நாட்களாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் மிதமான வெயிலும், மாலை நேரத்தில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வந்தது.

    நேற்று காலை முதலே கோவை மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவியது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்ய தொடங்கின.

    கோவை பாப்பநாயக்கன்பாளையம், ரெயில் நிலையம், அவினாசி சாலை, உப்பிலிபாளையம், காந்திபுரம், காந்திபார்க், சிங்காநல்லூர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்பட மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே மாலை முதல் இரவு வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இரவில் மாநகரில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டியதும். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன்பின்னர் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது.

    இந்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி, லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சூலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை மழை பெய்யாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது. மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    குன்னூர் மற்றும் கிராமப்புற பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, எல்லநள்ளி, சேலாஸ், குன்னக்கம்பை, தூதூர் மட்டம், கொலக்கம்பை, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    மழையால் மேகமூட்டம் அதிகரித்துள்ளதால் இன்று காலை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாக சென்றனர். கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில், ஜூன் மாதம் 37.2 மி.மீ மழையும், ஜூலையில் 43.8 மி.மீ மழையும், ஆகஸ்டில் 47.3 மி.மீ மழையும், செப்டம்பரில் 69.2 மி.மீ மழையும் சராசரியாக பெய்யும்.

    நடப்பாண்டில் ஜூனில் சரிவர மழை பெய்யவில்லை. ஜூலையில் அதிகளவில் மழை பதிவாகியது. அதன்படி ஜூனில் 2 மழை நாளில் 27 மி.மீ மழையும், ஜூலையில் 8 நாளில் 89.3 மி.மீ மழையும் பெய்தது.

    ஆகஸ்டில் 31 மி.மீ மழையும், செப்டம்பரில் 11.2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது 197.5 மி.மீ பெய்ய வேண்டும். ஆனால் நடப்பாண்டு 159.3 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரியை விட 19 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.

    • அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.58 அடியாக குறைந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.

    இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 12,713 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை அதிகரித்து வினாடிக்கு 15,710 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர் வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.58 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 55.54 டி.எம்.சி. உள்ளது.

    • நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • புதுவண்ணாரப்பேட்டை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் நாளை மின்தடை.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு முனை மின்தடை சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏ.இ. கோயில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரத ராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர்,மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி. குடியிருப்பு.

    ஈஞ்சம்பாக்கம்: 1-வது அவென்யூ வெட்டுவாங்கேனி, அக்கரை கிராமம், அல்லிகுளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்திவேந்தன் சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல கலை ஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர், கிளாசிக் என்க்லேவ், காப்பர் பீச் ரோடு, டாக்டர்.நஞ்சுண்டாராவ் சாலை, கிழக்கு கடற் கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக் கம் முதல் வெட்டுவாங்கேனி இணைப்பு சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், அனுமன் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4-வது தெரு, கக்கன் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி.அவென்யூ,

    மரியக்காயர் நகர், நயினார்குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர், என். ஆர்.ஐ.லே அவுட், வி.ஜி.பி. லே அவுட், பெப்பிள் பீச், பெரியார் தெரு மற்றும் பொதிகை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பிரஸ் டீஜ் மற்றும் மந்திரி, ராஜன் நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, ராஜீவ் அவென்யூ, ராமலிங்க நகர், ராயல் என்க்ளேவ், சீ கிளிப், சீஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், சேஷாத்ரி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1-வது மற்றும் 2-வது தெரு, டி.வி.எஸ் அவென்யூ, ஆசி ரியர்கள் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி.தெரு, விமலா கார்டன், ஜூகு பீச்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் காண வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதும், உயிரிழந்ததும் மிகுந்த வேதனையளிக்கின்றன.
    • சாலைகளிலும் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றது தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது; நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்றுள்ளனர். விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் காண வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதும், உயிரிழந்ததும் மிகுந்த வேதனையளிக்கின்றன.

    விமானப்படை சாகச நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றும், அதன் மூலம் உலக சாதனை படைக்கப்பட இருப்பதாகவும் விமானப்படை அதிகாரிகள் கூறி வந்தனர். அதைக் கருத்தில் கொண்டு 15 லட்சம் பேர் வந்தால், அவர்கள் எந்த சிக்கலும் இன்றி நிகழ்ச்சியைக் காணவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவானவர்களே நிகழ்ச்சியைக் காண வந்தாலும் கூட அவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

    ஒரே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து 7 முதல் 8 லட்சம் பேர் திரும்பும்போது, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் நிலையில் அதற்கான வசதிகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், தேவையான போக்குவரத்து வசதிகளில் 10% கூட செய்யப்படாததால் இரவு 10 மணிக்குப் பிறகும் கூட பேருந்து நிறுத்தங்களிலும், மெட்ரோ மற்றும் பறக்கும் தொடர்வண்டி நிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்பதை காண முடிந்தது. காலையில் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலும், அதன்பின் சாலைகளிலும் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றது தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.

    லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறது. நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் எவ்வளவு பேர் வருவார்கள்? அவர்கள் எந்த பாதிப்பும், இடையூறுமின்றி திரும்பிச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறி விட்ட தமிழக அரசு தான் இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். வெற்று சவடால்களை விடுக்காமல் இனிவரும் காலங்களிலாவது இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது.

    அதன்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. காலாண்டு விடுமுறை முடிந்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்கவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம், சுவரோவியம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
    • இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டை பெறலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றுவதற்காக சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என கடந்த 15.8.2023 அன்று சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறையின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பூங்கா அமைக்கும் பணி 27.2.2024 அன்று தொடங்கி நிறைவு பெற்றுள்ளது.

    ரூ.45 கோடியே 99 லட்சம் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டுக்காக இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார்.

    நுழைவுவாயிலில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச பயணம், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர்கொடி வளைவுப்பாதை, 120 அடி பனி மூட்டப்பாதை, 2,600 சதுர அடி நீளமுள்ள ஆர்க்கிட் குடில், அரியவகை கண்கவர் பூச்செடிகளை காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரத்துடன் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை,

     

    சென்னை கதீட்ரல் சாலையில் இன்று திறக்கப்பட வுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உள்ள 'ஆர்கிட்' குடில்.

    சென்னை கதீட்ரல் சாலையில் இன்று திறக்கப்பட வுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உள்ள 'ஆர்கிட்' குடில்.

    அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம், சுவரோவியம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என்றும், இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டை பெறலாம். 'கியூ ஆர்' கோடு மூலமாகவும் நுழைவுச்சீட்டை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது.

    கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    இந்திய விமானப்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

    பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் தி.மு.க. அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.

    முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக்கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த தி.மு.க. அரசே முழு பொறுப்பு.

    தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • இந்நிகழ்ச்சிக்காக மெரினா கடற்கரையில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிந்தனர்.
    • இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது.

    சென்னை:

    இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பிடம், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கடும் வெயிலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க.ஸ்டாலின் அரசுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், விமான சாகசத்துக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருமுறையும், பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.

    இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப்படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி இந்திய ராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதுதவிர, அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

    ராஜீவ்காந்தி அரசுப் பொதுமருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

    சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×